Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

ரூ. 3.29 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF
தினமணி               31.05.2013

ரூ. 3.29 கோடியில் வளர்ச்சிப் பணிகள்


திண்டிவனத்தில் வளர்ச்சிப் பணிகளுக்காக சுமார் ரூ.3.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திண்டிவனம் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஏ.வி.முகமதுஹரிப் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்:

சலவாதி சாலையில் உள்ள நவீன மயானத்தில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள ரூ.32.70 லட்சம் ஒதுக்க வேண்டும்.

கிடங்கல் பகுதியில் உள்ள நவீன இறைச்சிக் கூடத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

குஷால்சந்த் பூங்கா அருகே அங்கன்வாடி கட்டடம் கட்டும் பணிக்காக ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மாரிசெட்டிக்குளம் பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மொத்தம் 18 வார்டுகளில் பிற்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கான மானிய நிதித் திட்டத்தின் கீழ் குடிசைப்பகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.1.44 கோடி ஒதுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் பொது வளர்ச்சிப் பணிகளுக்கான ரூ.57.88 லட்சம் ஒதுக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக திண்டிவனம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.55.43 கோடி ஒதுக்கியுள்ள தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

மாதவரம் மண்டலத்தில் ரூ.10 கோடியில் வளர்ச்சிப் பணி

Print PDF
தினமணி        19.05.2013

மாதவரம் மண்டலத்தில் ரூ.10 கோடியில் வளர்ச்சிப் பணி


சென்னை மாநகராட்சியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட மாதவரம் மண்டலத்தில் உள்ள கதிர்வேடு, புத்தகரம் பகுதியில் 24, 25-வது வார்டுகளில் நவீன தரமிக்க தார்சாலை, மழைநீர் கால்வாய் அமைக்க ரூ.10 கோடியே 1 லட்சத்து 21 ஆயிரம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார். மாதவரம் மண்டலகுழு தலைவர் தி.வேலாயுதம் வரவேற்றார். பால்வளத்துறை அமைச்சர் வி.மூர்த்தி பணியைத் தொடங்கி வைத்தார்.

கவுன்சிலர்கள் கண்ணதாசன் சுப்பிரமணி, வதனா பர்னபாஸ், சங்கர், மற்றும் கதிர்வேடு விஜயன், புழல் ஏழுமலை உள்பட மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Last Updated on Tuesday, 21 May 2013 06:42
 

ரூ.45லட்சத்தில் பூங்காக்கள்

Print PDF
தினகரன்        30.04.2013

ரூ.45லட்சத்தில் பூங்காக்கள்


அனுப்பர்பாளையம்,:  ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாடு மற்றும் திருமுருகன்பூண்டி பேரூராட்சி பொது நிதி திட்டம் ஆகியவற்றின் மூலம் ரூ. 30லட்சம் மதிப்பீட்டில், திருமுருகன்பூண்டி பேரூராட்சி 14ஆவது வார்டு ராக்கியாபாளையம் பகுதியில் அழகிய சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.  

மேலும், முதலாவது வார்டு தேவராயன்பாளையம்  பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் அழகிய சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.  இதன் திறப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

 அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ. கருப்பசாமி, திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் குணசேகரன், முதலாவது மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன்,திரூமுருகன்பூண்டி பேரூராட்சி துணைத்தலைவர் விஸ்வநாதன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கலைவாணன், பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்ஆனந்தன் பூங்காக்களை திறந்து வைத்தார்.

விழாவில், பேரூராட்சி கவுன்சிலர்கள் சண்முகம், ராஜேந்திரன்  ,உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
 


Page 18 of 160