Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

கோவை கிழக்கு மண்டல அலுவலகத்தில் சோலார் மின்உற்பத்தி திட்டம் துவக்கம்

Print PDF

தினமணி            06.11.2013

கோவை கிழக்கு மண்டல அலுவலகத்தில் சோலார் மின்உற்பத்தி திட்டம் துவக்கம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ரூ. 9.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சோலார் மின்உற்பத்தித் திட்டத்தை மேயர் செ.ம.வேலுசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

கோவை கிழக்கு மண்டல அலுவலகத்தில் ரூ. 9.70 லட்சம் மதிப்பில் 7.5 கிலோ வாட்ஸ் சோலார் மின் உற்பத்திக் கலன்கள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடங்கி வைத்து மேயர் பேசியது:

தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உருவாக்க பல்வேறு மின்உற்பத்தித் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். அவரது கடந்த ஆட்சிக் காலத்தில் தான் அதிக அளவில் மின் உற்பத்திக்கான காற்றாலைகள் நிறுவப்பட்டன.

அதேபோல தற்போது மாற்று எரிசக்திப் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சோலார் நகரமாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள 40 நகரங்களில் தமிழகத்தில் முதன்மை நகரமாக கோவை திகழ்கிறது.

இதனால் இம்மாநகராட்சியில் நிறுவப்படும் சோலார் மின்திட்டங்களுக்கு அதிக அளவு மானியம் பெறப்பட உள்ளது. சோலார் நகரமாக உயர்த்துவதன் முதல்கட்டமாக மாநகராட்சி அனைத்து அலுவலகங்களிலும் சோலார் மின்உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தனியார் கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சோலார் மின்சக்தி திட்டங்கள் அமைத்திட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கோவை கிழக்கு மண்டல அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள 7.5 கிலோ வாட்ஸ் சோலார் மின்உற்பத்தித் திட்டத்தின் மூலம் ஒரு நாளுக்கு 40 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இதன்மூலம் மண்டல அலுவலகத்திற்குத் தேவையான மின்தேவையில் 40 சதவீதம் சேமிக்கப்படுவதுடன், ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வரையில் மின் கட்டணம் சேமிக்கப்படும். மேலும் 7 ஆண்டுகளில் சோலார் மின் திட்டத்திற்காகச் செலவிடப்பட்ட முதலீட்டுத் தொகை முழுமையாகக் கிடைக்கும் என்றார்.

மாநகராட்சி ஆணையர் லதா, துணை மேயர் லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சிவராசு. மண்டலத் தலைவர்கள் கே.ஆர்.ஜெயராம், ராஜ்குமார், பெருமாள்சாமி, நிலைக் குழுத் தலைவர்கள் தாமரைசெல்வி, செந்தில்குமார், நியமனக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ

Print PDF

தினமணி          08.10.2013

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் எரியும் தீயினால் இப்பகுதியில் புகை மூட்டமாகக் காணப்படுகிறது. இதனை அணைக்க நகராட்சி அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

   போடி நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு, போடி சிரைக்காடு மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில், திடீரென ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் குப்பைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. தீ மளமளவென பரவி, இரவு முதல் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

   தகவல் அறிந்து வந்த போடி நகராட்சி உதவி பொறியாளர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் சுல்தான், சுகாதார மேற்பார்வையாளர் கருப்பணன் ஆகியோர் திங்கள்கிழமை இரவு வரை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீயை அணைக்க முயன்று வருகின்றனர். இருப்பினும் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.

  தீ கொழுந்துவிட்டு எரிவதால் இப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள சிரைக்காடு மலைவாழ் மக்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

 

உடுமலையில் மரக்கன்றுகள் நடும் விழா

Print PDF

தினத்தந்தி           04.10.2013

உடுமலையில் மரக்கன்றுகள் நடும் விழா

 

 

 

 

 

உடுமலை காந்தி நகர் அருகே நடை பயிற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தும் பணி இன்று நடந்தது. அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன. உடுமலை மக்கள் பேரவை, ஆரன்யா அறக்கட்டளை காந்திநகர் ரோட்ராக்ட் சங்கம், அபெக்ஸ் சங்கம், இன்னர்வீல் சங்கம், நடை பயிற்சியாளர்கள் ஆகியோருடன் இணைந்து நகராட்சி துப்புரவு பணியாளர்களும் இந்த பணிகளை மேற் கொண்டனர்.

இதில் நகராட்சி தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, உடுமலை மக்கள் பேர ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர்.சிவசண்முகம், ஆரன்யா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.நந்தினி ரவீந்திரன், செயலாளர் ஏ.கார்த்திகேயன் ஆலோசகர் வக்கீல் டி.ராஜசேகரன், அபெக்ஸ் சங்க தலைவர் எம்.கருணாநிதி, இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் இ.ராமதேவி, நகைக்கடை அதிபர் கே.மணியன், சுகாதார ஆய்வாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 11 of 135