Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

தச்சநல்லூரில் மரக்கன்று நடும் விழா மேயர் தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி           04.10.2013

தச்சநல்லூரில் மரக்கன்று நடும் விழா மேயர் தொடங்கி வைத்தார்

நெல்லை மாநகர பகுதிகளை பசுமையாக்க மாநகராட்சி நிர்வாகமும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து 65 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளனர். மேலும் அந்தந்த மண்டலங்களில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மரக்கன்றுகள் நட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தச்சநல்லூர் 1–வது வார்டு செல்வ விக்னேஷ்நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடும்விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த் மரக்கன்று நட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அந்தப் பகுதியில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பேச்சிமுத்து, மாடசாமி, நம்பி, புத்தநேரி செல்லப்பா, ஊர் தலைவர் சின்னத்தம்பி, நீமா ரோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவன நிர்வாகி கே.டி.சி. சங்கர் செய்து இருந்தார்.

 

விருத்தாசலத்தில் 100 சோலார் விளக்குகள்: எம்.எல்.ஏ., தகவல்

Print PDF

தினமலர்             03.10.2013

விருத்தாசலத்தில் 100 சோலார் விளக்குகள்: எம்.எல்.ஏ., தகவல்

விருத்தாசலம்:விருத்தாசலம் தொகுதியில் 100 சோலார் விளக்குகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என முத்துக்குமார் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.

அவர், விடுத்துள்ள அறிக்கை:

விருத்தாசலம் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 2012 - 13ல் 70 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டன. இதனால் பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதைத்தொடர்ந்து இந்த நிதியாண்டில் 100 சோலார் விளக்குகள் பொருத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விருத்தாசலம் நகரில் 10 சோலார் விளக்குகள், விருத்தாசலம் ஒன்றியத்தில் 39, மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 3, நல்லூர் ஒன்றியத்தில் 32, கம்மாபுரம் ஒன்றியத்தில் 16 சோலார் விளக்குகள் பொருத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு மாணவனும் ஒரு மரம் நடவேண்டும்

Print PDF

தினகரன்             26.09.2013

ஒவ்வொரு மாணவனும் ஒரு மரம் நடவேண்டும்

அன்னூர்: மரம் நடும் விழாவில் பேசிய சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், ஒவ்வொரு மாணவனும் ஒரு மரம் நடவேண்டும் என வலியுறுத்தினார்.

அன்னூர் பேரூராட்சி மற்றும் சிறுதுளி அமைப்பு சார்பில் பசுமை மரம் நடும் விழா சொக்கம்பாளையத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவி ராணிசெளந்திரராஜன் தலைமை தாங்கினார்.

இதில் சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன் பேசியதாவது: நாம் இயற்¬ கயை பேணிக்காத்த £ல் அது நம்மை பாதுகாக்கும். நாம் இயற்கையை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தத £ல், அது நம்மை நோக்கி பத்து அடி எடுத்துவைக்கும். அப்துல்கலாமால் துவக்கப்பட்ட பசுமை பஞ்சாயத்து திட்டம் மூலம் ஊராட்சிகளுடன் சிறுதுளி நிறுவனம் இணை ந்து மரம் நடுவிழாக்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாணவனும் ஒரு மரம் நடவேண்டும்.

சிறுதுளி சார்பில் பசுமை பஞ்சாயத்து திட்டம் பேரூர் பேரூராட்சி அரசூர், மயிலம்பட்டி ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. எல்லோராலும் குளம், குட்டை களை தூர்வார முடியாது. ஆனால் ஒரு மரமாவது நடலாம்.

அனைத்து ஊர்களிலும் மக்கள் தொகைக்கு இணையாக மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். ஏன் என்றால் ஒவ்வொரு மரமும் ஆக்சிஜன் தரும் தொழிற் சாலை. இவ்வாறு வனிதா மோகன் பேசினார்.

விழாவில் சிறுதுளி செயலாளர் மயில்சாமி, அன்னூர் பேரூராட்சி துணை தலைவர் விஜயகுமார்,பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருஞா னம், அன்னூர் பேரூராட்சி செயல்அலுவலர் கல்யாணசுந்தரம், தேவராஜ், மாவட்ட கவுன்சிலர் அமுல்கந்தசாமி, கவுன்சிலர்கள் பூமணிதங்கராஜ், சின்னச்சாமி, கனக ராஜ், திருமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 12 of 135