Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

"ஒவ்வொரு மரமும் ஒரு ஆக்சிஜன் தொழிற்சாலை' "பசுமை அன்னூர்' திட்டம் துவக்கம்

Print PDF

தினமலர்              26.09.2013

"ஒவ்வொரு மரமும் ஒரு ஆக்சிஜன் தொழிற்சாலை' "பசுமை அன்னூர்' திட்டம் துவக்கம்

அன்னூர்:"மக்கள் தொகைக்கு இணையாக மரங்கள் நட வேண்டும்,' என, அன்னூரில் நடந்த விழாவில் "சிறுதுளி' அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் தெரிவித்தார்.

அன்னூர் பேரூராட்சி சார்பில், "பசுமை அன்னூர்' என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேரூராட்சியில் 2,000 மரக்கன்றுகளை நட்டு, மூங்கில் வளைய வேலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்ட துவக்க விழா நேற்று சொக்கம்பாளையத்தில் நடந்தது. "சிறுதுளி' அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், மரக்கன்றை நட்டு, விழாவை துவக்கி வைத்து பேசியதாவது: மகாத்மா காந்தி வந்த கிராமத்தில் இத்திட்டம் துவக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. சிறுதுளி சார்பில், இதற்கு 1,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் மரக்கன்று வழங்கி, ஒவ்வொரு மாணவனும் ஒரு மரம் நட்டு பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம்.

இயற்கையை நாம் போற்றி பேணினால், அது நம்மை காக்கும். 320 ஏக்கர் கொண்ட உக்கடம் குளத்தை தூர் வாரியதால், இப்போது அங்கு தண்ணீர் கடல் போல் நிற்கிறது. அனைவராலும் தூர் வார முடியாது. ஆனால், மரக்கன்று நட எல்லோராலும் முடியும். "சிறுதுளி' சார்பில் "பசுமை பஞ்சாயத்து' என்னும் திட்டத்தை துவக்கி உள்ளோம். ஒரு ஊரில் எவ்வளவு மக்கள் தொகை உள்ளதோ அதற்கு இணையாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு மரமும், ஒரு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.

இவ்வாறு, வனிதா மோகன் பேசினார். கோவை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருஞானம் பேசுகையில்,"" அன்னூர் பேரூராட்சியில், 4,000 வீடுகளிலும், கோவை மாவட்டத்தில், 37 பேரூராட்சிகளில், ஒரு லட்சத்து 25 ஆயிரம் வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

நாவல், புங்கன், வாகை, வேம்பு, குமிழி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. பேரூராட்சி தலைவர் ராணி தலைமை வகித்தார். செயல் அலுவலர் கல்யாண சுந்தரம் வரவேற்றார்.

மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி, துணை தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள் பூமணி, ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

"3,000 எல்.இ.டி. விளக்குகள் இந்த வார இறுதியில் இயக்கப்படும்'

Print PDF

தினமணி             24.09.2013

"3,000 எல்.இ.டி. விளக்குகள் இந்த வார இறுதியில் இயக்கப்படும்'

சென்னையில் இந்த வார இறுதிக்குள் 3 ஆயிரம் எல்.இ.டி. விளக்குகள் இந்த வார இறுதிக்குள் இயக்கி வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் இப்போது பல்வேறு இடங்களில் சோடியம் ஆவி தெரு விளக்குகள் உள்ளன. இப்போது விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் சேர்த்து 2.50 லட்சத்துக்கும் அதிகமான தெரு விளக்குகள் உள்ளன.

இப்போது உள்ள தெரு விளக்குகளை இயக்க அதிக அளவில் மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால் மின்சார தேவையைக் குறைக்க எல்.இ.டி. தெரு விளக்குகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மட்டும் 1.10 லட்சம் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 13,000 எல்.இ.டி. மின் விளக்குகளுக்கு டெண்டர் வெளியிடப்பட்டது. இதில் 3,000 எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் 10,000 விளக்குகள் கொள்முதல் செய்யும் நிலையில் உள்ளன. மீதமுள்ள சுமார் 97 ஆயிரம் விளக்குகளுக்கு படிப்படியாக டெண்டர் வெளியிடப்பட்டு பொருத்தப்பட்டு விடும்.

தானியங்கி கருவி பொருத்துவதில் சிக்கல்: தெரு விளக்குகளை தூரத்தில் இருந்தே இயக்கும் வகையிலான கருவிகள் பெசன்ட் நகர் பகுதியில் உள்ள 29 மின் கம்பங்களில் பொருத்தப்பட்டு சோதனை முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

இது நல்ல பயனை கொடுத்துள்ளது. இந்தத் திட்டத்தை மாநகராட்சி முழுவதும் விரிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கருவியை நிறுவ அதிக செலவாகும். இப்போது செலவுகளைக் குறைத்து, இந்த கருவிகளை நிறுவ முடியுமா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மாநகராட்சி அலுவலகத்தில் ரூ. 56 லட்சத்தில் சூரிய ஒளி மின்சாரம்

Print PDF

தினமணி             05.09.2013

மாநகராட்சி அலுவலகத்தில் ரூ. 56 லட்சத்தில் சூரிய ஒளி மின்சாரம்

மதுரை மாநகராட்சி மைய அலுவலகமான அண்ணா மாளிகையில், ரூ. 55.83 லட்சத்தில் சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாமன்ற கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், அரசு அலுவலகங்களில் மின்பற்றாக்குறையை ஈடுசெய்யும் பொருட்டு, முதல்வர் ஜெயலலிதா அறிமுகம் செய்துள்ள சூரியஒளி மின்சாரக் கொள்கை 2012, திட்டத்தின் கீழ் இந்த ஏற்பாடு செய்யப்படுவதாகவும், தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி மையம் வழிகாட்டுதலின்படி இத்திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நகரப்பொறியாளர் மற்றும் ஆணையர்  ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், நிர்வாக ஒப்புதலுக்கும், ஒப்பந்தப் புள்ளி கோரவும் ஒப்புதல் கோரப்பட்டு ஏற்கப்பட்டதாகத் தெரிகிறது.

 


Page 13 of 135