Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

ஆற்காடு நகராட்சி பூங்காக்களில் மரக்கன்றுகள் நடும்விழா

Print PDF

தினகரன்              02.09.2013

ஆற்காடு நகராட்சி பூங்காக்களில் மரக்கன்றுகள் நடும்விழா

ஆற்காடு, : ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பூங்காக்களில் மரக்கன்றுகள் நடும்விழா நேற்று நடந்தது.

ஆற்காடு நகராட்சியும், அரகம் தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய விழாவிற்கு நகராட்சி தலைவர் ஆர்.புருஷோத்தமன் தலைமை தாங்கி கண்ணன் பூங்கா, பயோகேஸ் திட்ட செயல்படும் இடத்தில் உள்ள பூங்கா பூபதி நகர், சீதாராமன் தெரு ஆகிய இடங்களில் மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார். ஆணையர் செ.பாரிஜாதம், பொறியாளர் கார்த்திகேயன், சுகாதார அலுவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் முருகன் வரவேற்றார்.

மொத்தம் 100 மரக்கன்றுகள் முதற்கட்டமாக நடப்பட்டது. தொடர்ந்து நகரில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் முக்கிய இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விழாவில் கவுன்சிலர் கே.ஏ.சுந்தரம், தொண்டு நிறுவன நிர்வாகி சுவாதி, பாவனா, சிநேகா, ஷீமா, திவ்யா, லலிதா, மது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

முதல்வர் பிறந்தநாள்: 65 லட்சம் வீடுகளுக்கு செம்மரச்செடி

Print PDF

தினபூமி               30.08.2013 

முதல்வர் பிறந்தநாள்: 65 லட்சம் வீடுகளுக்கு செம்மரச்செடி

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Chennai%20Mayor(C).jpg 

சென்னை, ஆக. 30 - ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 65லட்சம் வீடுகளுக்கு செம்மரச்செடி   நடுவதற்கு சென்னை மாநகராட்சி தீர்மானம்  நிறைவேற்றியுள்ளது . சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் 74 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சிறப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இது குறித்து மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்த தினத்தின் போது சென்னை மாநகரில் மரம், செடி, நடப்படுகிறது. மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட 318 கிலோ மீட்டர் நீளமுள்ள நீர்வழி தடங்களின் இரு கரைகளிலும் 636 கி.மீட்டர் நீளத்திற்கும், 126 குளம், குட்டை, ஏரி ஆகியவற்றின் கரைகளில் 113 கி.மீட்டர் நீளத்திற்கும் மொத்தம் 749 கி.மீட்டர் நீளத்திற்கு பனைமரங்கள் நடப்பட உள்ளன.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் மண் அரிப்பை தடுக்கும் வகையிலான 6ஙூ லட்சம் பனை மர, செடிகள் நடநடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பணி தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் என்ற அமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

சிகப்பு சந்தனம் என்று அழைக்கப்படும் செம்மரக் கன்றுகள் தோட்டத்துடன் கூடிய தனி வீடுகள் கொண்டு ஒவ்வொரு வருக்கும் அவர்களின் குழந்தைகள் எதிர்காலத்திற்கு பயன் பெறும் வகையில் வைப்பு நிதியாக அடுத்த தலைமுறை பயன்பெறும் பொருட்டு 65லட்சம் செம்மரக்கன்று வழங்கப்படுகிறது.ஒவ்வொரு தனி வீட்டு உரிமையாளரும் மாநகராட்சியை அணுகினால் செம்மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் வைட்டமின் 'ஏ' என்ற உயிர் சத்தை பெறும் வகையில் அனைவருக்கும் ஒரு பப்பாளி கன்று 65 லட்சம் எண்ணிக்கையில் வழங்கப்படும்.

வீடுகள், பூங்காக்கள், பள்ளி வளாகங்கள் விளையாட்டு மைதானம் மருத்துவ வளாகங்கள், மயான புமிை மற்றும் நீர்நிலை பகுதிகளில் கொசுவை கட்டுப்படுத்தும் வகையில் 65ஙூ லட்சம் நொச்சி செடிகள் நடப்படுகிறது.

மேலும் நொச்சி செடியை வீடுகளில் நட்டு பராமரிக்க விரும்புபவர்கள் மாநகராட்சியில் இலவசமாக பெறலாம். இதன் மூலம் சென்னை மாநகரில் பசுமை போர்வை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினை இந்தியாவே வியக்கும் வண்ணம் சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தி உள்ள 33.3 சதவீதம் பசுமை என்ற இலக்கினை அடையும் என்ற வகையில் செயல் படுத்துவோம்.

இவ்வாறு மேயர்.சைதை.துரைசாமி கூறினார்.

 

காய்கறி கழிவில் இருந்து றீ90 லட்சத்தில் மின்உற்பத்தி திட்டம்.

Print PDF

தினகரன்            21.08.2013

காய்கறி கழிவில் இருந்து றீ90 லட்சத்தில் மின்உற்பத்தி திட்டம்.

பொள்ளாச்சி:  பொள்ளாச்சியில் காய்கறி கழிவுகளை கொண்டு, பயோ காஸ் மூலம், ரூ.90 லட்சத்தில் மின்சாரம் தயா ரிக்க நடவடிக்கை எடுக் கப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சியில் காந்தி, திருவிக, தேர்நிலை தினசரி ஆகிய மார்க்கெட் டுகள் உள்ளன.  இங்கு உள் ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்படும் காய் கறிகள் மொத்த மாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கொண்டு வரப்படும் காய்கறிகள் வெகு நாட்கள் கடந்ததும் கெட்டு போகி றது. இதனால் வியாபாரிகள் ஆங்காங்கே காய்கறிகளை கொட்டி விடுகின்றனர். இது நகராட்சி சார்பில் அப் புறப்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் மார்க் கெட் வெளியே கொட் டப்படும் காய்கறி கழிவுகள் அப்ப டியே கிடப்பில் போ டப் படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

இந்நிலையில், மார்க் கெட்டுகளில் இருந்து வெளியேற்றப்படும் காய்கறி கழிவுகளிலிருந்து பயோ காஸ் மூலம் மின்சாரம் தயாரிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக காந்தி மார்க்கெட் அருகே சுமார் அரை ஏக்கர் நிலம் தேர்வு  செய்யப்பட்டுள்ளது. அப்ப ணிகளுக்காக ரூ 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “பொள்ளாச்சி நகரில் காந்தி, திருவிக, தேர்நிலை ஆகிய 3 தினசரி மார்க் கெட்டுகள் உள்ளன. இவை களிலிருந்து தினமும் சுமார் 3 முதல் 5டன் வரை காய் கறி கழிவுகள் வெளியேற் றப்படுகிறது. இந்த காய்க றிகழிவுகளை கொண்டு, பயோ காஸ் மூலம் மின்சா ரம் தயாரிக்க நகராட்சி திட்டம் முடிவு செய்துள் ளது. கிடைக்கும் மின் சாரத்தை நகராட்சி பகுதி களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எரி வாயு கலன் அமைக்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கப் படுகிறது. விரைவில் டெண் டர் விடப்பட்டு, அதற்கான பணி மேற்கொள் ளப்படும்‘ என்றனர். 

 


Page 14 of 135