Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

மரப்பேட்டை கந்தசாமி பூங்கா 50 லட்சத்தில் சீரமைப்பு

Print PDF
தினகரன்          23.05.2013

மரப்பேட்டை கந்தசாமி பூங்கா 50 லட்சத்தில் சீரமைப்பு

பொள்ளாச்சி, : பொள்ளாச்சி மரப்பேட்டை  நூலகம் அருகே உள்ள கந்தசாமி பூங்காவை ரூ 50 லட்சம் மதிப்பில் சீரமைப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்ச்சி மரப்பேட்டை நூலகம் அருகே கந்தசாமி பூங்கா உள்ளது. அது கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.  காலை, மாலை நேரங்களில்  மக்கள் ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர்.  

கடந்த 10 ஆண்டுகளாக பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை. இதனால் பூங்காவின் பெரும் பகுதி புதர்மண்டியது. அதனால் மக்களின் வருகை அடியோடு நின்றது.

இந்நிலையில், சிதிலமடைந்து வரும் கந்தசாமி பூங்காவை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று நகராட்சிக்கு மக்கள் கோ ரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து கந்தசாமி பூங்கா வை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  இதற்காக ரூ 50 லட்சம் நிதி ஒதுக்கி சீரமைக் கும் பணி  நடந்து வருகிறது.  

 நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘நகரில் நகராட்சி பராமரிப்பில் உள்ள கந்தசாமி பூங்காவை புதுப்பொலிவுடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நடைமேடை, குழந்தைகள் பார்க் என அனைத்து வசதிகளும் கூடிய பூங்கா அமைக்கப்படுகிறது.  சுற்றுலா வளர்ச்சிமேம்பாடு மற்றும் நகராட்சி இணைந்து ரூ.50 லட்சம் மதிப்பில் இப்பணி  நடக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் பராமரிப்பு பணி முடிவடைந்ததும் மக் கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்’ என்றனர்.
 

பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி தார்ச் சாலைகள்: முதல்வர் அறிவிப்பு

Print PDF
தினமணி                 02.05.2013

பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி தார்ச் சாலைகள்: முதல்வர் அறிவிப்பு


பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி தார்ச் சாலைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் இன்று அளித்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்தவை...

பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு, ஊரகப் பகுதிகளில் 1,255 கிலோ மீட்டர் நீளமுள்ள தார்ச் சாலைப் பணிகளை மேற்கொள்வதற்காக, 2011-12 மற்றும்  2012-13 ஆம் ஆண்டுகளில் 153 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதில் 1,002 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகள் முடிவடைந்துவிட்டன.  மீதமுள்ள சாலைப் பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளன.  இந்த ஆண்டும் 1,000 கிலோ மீட்டர் நீளமுள்ள தார்ச் சாலைகள் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நகரப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் 2011 ஆம் ஆண்டு 566 கிலோ மீட்டர் நீளமுள்ள பிளாஸ்டிக் தார்ச் சாலைகள் அமைக்க 153 கோடியே 61 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  2012-2013 ஆம் ஆண்டில் 499 கிலோ மீட்டர் நீளமுள்ள பிளாஸ்டிக் தார்ச் சாலைகள் அமைக்க 219.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.  இந்தப் பணிகள் எல்லாம் தற்போது நடைபெற்று வருகின்றன. 2013-2014 ஆம் ஆண்டில் 100 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியின் கீழ் 2011-12 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாய் செலவில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி 446 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் மறு சீரமைக்கப்பட்டன.  2012-13 ஆம் ஆண்டில் 84 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் 577.70 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகளை மறு  சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்டிக் சாலைகளின் தரம் சிறந்ததாகவும், மேம்பட்டதாகவும் உள்ளதால் 2013-14 ஆம் ஆண்டிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகள் மறு சீரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக மறு பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுவதுடன் சாலைகளின் தரமும் உயர்கிறது.

மேலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் நுண்ணுயிரி மூலம் ஏரிகளில் உள்ள நீரினைத் தூய்மையாக்குதல் திட்டம், சோலை காடுகளில் உள்ள தாவரங்களை மறு உற்பத்தி செய்தல் திட்டம், உதகை ஏரிப் பாதுகாப்பு நிதி மற்றும் மன்னார் வளைகுடா உயிர்கோள் காப்பக அறக் கட்டளையின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
 

போடியில் ரூ.10 லட்சத்தில் சாலையோரப் பூங்கா

Print PDF
தினமணி          12.04.2013

போடியில் ரூ.10 லட்சத்தில் சாலையோரப் பூங்கா

போடி நகராட்சி சார்பில், நிதியமைச்சர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட சாலையோர பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக நிதியமைச்சரும், போடி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வத்தின் அலுவலகம் சுப்புராஜ் நகரில் உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலையில் குப்பைக் கொட்டுவதாலும், திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்துவதாலும் சுகாதாரக் கேடான நிலை காணப்பட்டது.

இதையடுத்து, இப்பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், இப்பகுதியை அழகுபடுத்தும் வகையிலும் சாலையோரப் பூங்கா அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சாலையோரப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, போடி சுப்புராஜ் நகர், வஞ்சி ஓடையின் மேற்குப் பகுதியில் 800 மீட்டர் நீளத்துக்கு சாலையோரப் பூங்கா அமைக்கப்பட்டது. இதில், வண்ண மலர்ச் செடிகள், நிழல் தரும் மரங்கள் நடும் நிகழ்ச்சி, போடி நகர்மன்றத் தலைவர் வி.ஆர். பழனிராஜ் தலைமையில் நடைபெற்றது.

நகராட்சி ஆணையர் எஸ். சசிகலா பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி பொறியியல் பிரிவு அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 


Page 20 of 135