Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குண்டம் திருவிழா நெருங்குவதால் ஆனைமலை பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

Print PDF

தினகரன்             10.02.2014 

குண்டம் திருவிழா நெருங்குவதால் ஆனைமலை பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

ஆனைமலை, :  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா, கடந்த 30ம் தேதி கொடியேற்று நிகழ்ச்சியுடன்  துவங்கியது. வரும் 15ம் தேதி நடக்கும் குண்டத் திருவிழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி உடக்க உள்ளதால், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து  பக்தர்கள் வருகை துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

 குண்டம் திருவிழாவையொட்டி பக்தர்கள் அதிகம் வருவார்கள் என்பதால், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூற £க இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சப்-கலெக்டர் ரஷ்மிசித்தார்த் ஜெகடே உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இப்பணியில் சுமார் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

 மாசாணியம்மன் கோயில் செல்லும் வழி மற்றும் சேத்துமடை ரோட்டருகே கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள பந்தல் பகுதி, நடைபாதை கடைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.

சுமார் 25க்கும் மேற்பட்ட கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா முடியும்வரை ஆக்கிரமிப்புகள் எங்கெங்கு எல்லாம் உள்ளது என்பதை கண்காணித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

ஆட்சியர் அலுவலகத்தில் அம்மா உணவகம்

Print PDF

தினகரன்             10.02.2014 

ஆட்சியர் அலுவலகத்தில் அம்மா உணவகம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு ஊழியர்கள் சங்க திருவள்ளூர் வட்ட மாநாடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு திருவள்ளூர் வட்டத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.

வட்டச் செயலாளர் அருண்டேனியர் வரவேற்றார். பொருளாளர் மெல்கிராஜா முன்னிலை வகித்தார்.

தீர்மானங்கள்:

அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக மாற்ற வேண்டும். விடுமுறை நாள்கள் மற்றும் இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவதைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.

இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். விஸ்வநாதன் நன்றி கூறினார்.

 

பழைய சுரங்கப் பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பேரூராட்சித் தலைவர்

Print PDF

தினமணி              08.02.2014

பழைய சுரங்கப் பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பேரூராட்சித் தலைவர்

செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள பழைய சுரங்கப் பாதையை சுத்தப்படுத்தி நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சித் தலைவர் மக்கள் பயன்பாட்டு கொண்டு வந்தார்.

கூடுவாஞ்சேரியில், ரூ.15 கோடி மதிப்பில், கடந்த 3 ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலப் பணி மற்றும் ரயில்வே சுரங்கப் பாதை பணிகள் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை மேம்பால திட்டப் பணிகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி டிசம்பர் 28-ஆம் தேதி திடீரென ரயில்வே கேட் மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த மாடம்பாக்கம், ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர். போராட்டத்தின் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த் துறை, நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி அதிகாரிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதையில் இருந்த குடிநீர் பைப்லைன், கேபிள் ஆகியவற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். பின்னர் மொபெட்டுகள் மற்றும் ஆட்டோக்கள் செல்லும் அளவுக்கு மின்விளக்கு  வசதிகளுடன் பாதை அமைக்கபட்டது.

அதை நந்தவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சித் தலைவர் எம்.கே தண்டபாணி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் ஜார்ஜ், பேரூராட்சி செயல் அலுவலர் குற்றாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் குமரவேல், டில்லீஸ்வரி, ஹரி, ஸ்ரீமதிராஜி, ரவி, முன்னாள் பத்மநாபன், தரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விரைவில் மேம்பாலப் பணிகளை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் செல்லும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

 


Page 13 of 506