Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

500 கிலோ பிளாஸ்டிக்: பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினமலர்             04.02.2014

500 கிலோ பிளாஸ்டிக்: பொருட்கள் பறிமுதல்

சேலம்: சேலம் நகரில், 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாநகராட்சி கமிஷனர் அசோகன் தலைமையில், மாநகர நல அலுவலர் டாக்டர் அர்ஜூன்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், நான்கு மண்டலங்களில் குகை, அஸ்தம்பட்டி, புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்டு உள்பட நகரின் பல இடங்களில் சோதனை நடத்தினர். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், டீ கடைகள் ஆகியவற்றில், 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சுகாதார ஆய்வாளர்கள் மாணிக்கவாசகம், சங்கர், சேகர், சரவணன், சுரேஷ், கந்தசாமி, ரவிச்சந்திரன், மணிகண்டன் உள்பட சோதனையில் ஈடுபட்டனர்.

 

துணை கமிஷனருக்கு கமிஷனர் அனைத்து அதிகாரங்களையும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்

Print PDF

தினமலர்             04.02.2014

துணை கமிஷனருக்கு கமிஷனர் அனைத்து அதிகாரங்களையும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்

மதுரை: மாநகராட்சி துணை கமிஷனர் பொறுப்பிற்கு, அனைத்து அதிகாரங்களையும் வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் கமிஷனர் கிரண் குராலா.

மதுரை, மாநகராட்சியில் இதுவரை நியமிக்கப்பட்டுள்ள துணை கமிஷனர்கள் அனைவருமே, சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

ஆனாலும், அவர்களுக்கான அதிகாரத்தை இதுவரை இருந்த கமிஷனர்கள் வழங்கவில்லை. மாறாக, வருவாய் தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க மட்டுமே, துணை கமிஷனர்களை பயன்படுத்தினர்.

முன்பு, நந்தகோபால் கமிஷனராக இருந்த போது, துணை கமிஷனராக இருந்த சாம்பவி, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போது, 'அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை,' எனக்கூறி, நோட்டீஸ் அனுப்பும் அளவிற்கு, 'டார்ச்சரை' அனுபவித்தார். இதுதான், அனைத்து மாநகராட்சிகளிலும் இருக்கும் 'எழுதப்படாத' நடைமுறை.தற்போது மதுரை துணை கமிஷனராக உள்ள லீலாவின் அதிரடி செயல்பாடுகள், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், கவுன்சில் கூட்டத்தில் நேருக்கு நேர் அவருடன் விவாதம் செய்து, நெருக்கடி அளித்து வருகின்றனர். தவிர, கமிஷனர் கிரண் குராலாவிற்கு, மாநகராட்சியின் உண்மை நிலையை தெரிவித்து, தவறுகளுக்கு தடுப்புகள் அமைத்த வகையிலும், துணை கமிஷனர் மீதான கோபம், பலருக்கு.

இந்நிலையில்தான், கமிஷனர் கிரண் குராலா, நகராட்சிகளின் நிர்வாகத்தின் சட்டப் பிரிவு 18ன் கீழ், அனைத்து பொறுப்புகளையும், துணை கமிஷனருக்கு வழங்கியதோடு, அதை உடனே நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். அதன் படி, பொது நிர்வாகம், சட்டம், கல்வி, மாமன்ற பிரிவு, தகவல் மையம், கம்யூட்டர் பிரிவு, பொதுப்பிரிவு, மத்திய வருவாய், நகர்நலம், பொறியாளர் பிரிவுகள் மற்றும் அதன் தலைமை அதிகாரிகள், துணை கமிஷனரின் கட்டுப்பாட்டில், கண்காணிப்பில் இனி செயல்படுவர்.

அனைத்து ஆய்வுகள், கோப்புகள், அனுமதி, பரிந்துரை என, மொத்தம் 25 அதிகாரங்களை துணைகமிஷனருக்கு வழங்கியுள்ளார். உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. கமிஷனரின் இந்த பெருந்தன்மை, பிற மாநகராட்சிகளுக்கு, மதுரையை முன்னுதாரணமாக்கியதுடன், இதுநாள் வரை, துணை கமிஷனரை 'கட்டம்' கட்டி வந்த பிற துறையினர், இனி அவரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட வேண்டும்.

 

தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Print PDF

தினகரன்             04.02.2014

தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

சேலம், : சேலம் மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம் மாநக பகுதியில் 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநகரம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள், ஹோட்டல், டீக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் விரிவான செய்தி படங்களுடன் வெளியானது.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் அசோகன், மாநகர் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள், ஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு உள்ளதா? என சோதனையிட்டு பறிமுதல் செய்ய சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் நகர் நல அலுவலர் அர்ஜூன்குமார் தலைமையில் சூரமங்கலம்,

கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி ஆகிய 4 மண்டல பகுதிகளிலும் சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், சுரேஷ், ரவிச்சந்திரன், சரவணன், சங்கர் மற்றும் ஊழியர்கள் மைக்ரான் அளவிடும் கருவிகள் மூலம் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் பலசரக்கு கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்களில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை 500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பயன்படுத்தி வந்த கடைக்காரர்களை எச்சரித்த அதிகாரிகள், ‘அடுத்தமுறை சிக்கினால் அபராதம் விதிக்கப்படும்,‘ என்றனர். 

 


Page 16 of 506