Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தேனியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினகரன்             01.02.2014

தேனியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தேனி, : தேனியில் நகராட்சி ஆணையர் தலை மையில் நடந்த ஆய்வில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அதிகாரிகள் திடீரென பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

பாலித்தீன் பைகள் உபயோகிக்கவும், விற்பனை செய்யவும் தேனி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று தேனி-அல்லிநகரம் நக ராட்சி ஆணையர் ராஜா ராம் தலைமையில் சுகாதார அலுவலர் சுருளிநாதன், சுகாதார ஆய்வாளர்கள் சுருளியப்பன், மணிகண்டன் ஆகியோர் தேனி கடற்கடை நாடார் சந்து, தேனி நகர் மதுரை சாலை, பெரியகுளம் சாலையில் உள்ள பழக்கடைகள், பேன்சி கடைகள், மொத்த வியாபார கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

இதில் கடற்கரை நாடார் தெருவில் இருந்த மொத்த வியாபார கடைகளில் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை விற்பனை செய்ததற்காக 3 மொத்த வியாபாரிகளுக்கு தலா ரூ.500 வீதமும், ஒரு சில்லரை வியாபாரிக்கு ரூ.100 என மொத்தம் ரூ.1600 அபராதம் வசூலிக்கப்பட்டது.

 

பேரூராட்சி அடையாள அட்டை வழங்க வேண்டும்பேரவை கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினகரன்             01.02.2014

பேரூராட்சி அடையாள அட்டை வழங்க வேண்டும்பேரவை கூட்டத்தில் தீர்மானம்

அன்னவாசல், : புதுக் கோட்டை மாவட்டம் அன்னவாசலில், சாலை ஓர வியாபாரிகள் சங்க பேரவை கூட்டம் முத்தை யா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏஜடியூசி மாவட்ட தலைவர் தர்மராஜன், அன்னவாசல் பேரூராட்சி கவுன்சிலர்கள் மீராமொய்தீன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு எளிதில் குறைவான விலையில் கிடைக்கச் செய்யும், நோக்கத்தோடு வியாபாரம் செய்து வரும் சாலை ஓர வியாபாரிகளுக்கு தொழில்துறையை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும்.

தரைக்கடை வியாபாரிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும். தரைக்கடை வியாபாரிகளுக்கு வங்கிகளில் மானியக்கடன் வழங்க வேண்டும். சாலை ஓர வியாபாரிகளின் தொழில் பாதுகாப்பிற்கு பேரூராட்சி நிர்வாகம், காவல்துறை, வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வெங்கடாசலம், சாகுல் அமீது, ஆறுமுகம், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

திருச்சியில் 28ம் தேதி வரை சொத்துவரி தீவிர வசூல் முகாம்குடிநீர் கட்டணமும் கட்ட பொதுமக்களுக்கு அழைப்பு

Print PDF

தினகரன்             01.02.2014

திருச்சியில் 28ம் தேதி வரை சொத்துவரி தீவிர வசூல் முகாம்குடிநீர் கட்டணமும் கட்ட பொதுமக்களுக்கு அழைப்பு

திருச்சி, : திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண் டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், புதை வடிகால் கட்டணம் மற்றும் வரியில்லா இனம் வசூல் செய்ய தீவிர வரிவசூல் முகாம் வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.    
     
திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சி சட்டம் 126 பிரிவின்படி ஒவ்வொரு அரையாண்டுக் கும் சொத்துவரியை அரை யாண்டு துவங்கி 15 நாட்களுக்குள் செலுத்த வேண் டும். குடிநீர் கட்டணங் களை 3 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும். வரும் 28ம் தேதி வரை தீவிர வரிவசூல் முகாம் நடக்கிறது. இதில் மாநகராட்சிக்கு செலுத்த வேண் டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், புதை வடிகால் சேவை கட்டணம், தொழில் வரி, காலிமனை வரி போன்ற அனைத்து நிலு வையில் உள்ள வரி இனங் கள், வரியில்லா இனங்களை 2013-2014ம் ஆண்டு முதல் மற்றும் இரண்டாம் அரை யாண்டு வரையிலான வரியினங்களை ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ.அபிஷேகபுரம் ஆகிய கோட்ட அலுவலகங்களில் உள்ள சேவை மையங்களில் செலுத்த வேண்டும். அல்லது தஞ்சா வூர் ரோடு அரியமங்கலம் வார்டு அலுவலகம், விறகுபேட்டை நீர்த்தேக்க தொட்டி, சுப்ரமணியபுரம் வார்டு அலுவலகம், மேலகல்கண்டார்கோட்டை வார்டு அலுவ லகம், கே.கே.நகர் வார்டு அலுவலகம், கள்ளத்தெரு வார்டு அலுவலகம், நந்திகோவில் தெரு வார்டு அலுவலகம், தேவர் ஹால், திருவெறும்பூர் வார்டு அலுவ லகம் ஆகிய இடங்களில் உள்ள வசூல் மையங்களில் செலுத்த வேண்டும்.

வசூல் மற்றும் சேவை மையங்கள் பொதுமக்க ளின் வசதிக்காக அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 முதல் மாலை 6.00 மணி வரையிலும் (சனிக்கிழமை உட்பட), ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரை செயல்படும். அனைத்து வார்டு பகுதி மக்களும் தங்களுடைய வரி மற்றும் வரி யில்லா இனங்களை செலுத்தலாம். எனவே தீவிர வரி வசூல் முனைப்பு காலமான வரும் 28ம் வரை மாநகராட்சிக்கு செலுத்த வேண் டிய நிலுவையில் உள்ள வரிகள் மற்றும் நடப்பில் உள்ள வரிகளை செலுத்தி மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைத்து ஜப்தி மற்றும் குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்பு துண் டிப்பு போன்ற நடவடிக்கை களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

 


Page 20 of 506