Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

40 சதவீத சொத்து வரி வசூல்: இந்தாண்டு ரூ. 700 கோடி வசூலிக்க இலக்கு

Print PDF

தினமணி               06.08.2013

40 சதவீத சொத்து வரி வசூல்: இந்தாண்டு ரூ. 700 கோடி வசூலிக்க இலக்கு

சென்னை மாநகராட்சியில் 2013-14-ஆம் நிதியாண்டில் இதுவரை 40 சதவீத சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் சொத்து வைத்திருப்போரிடம் இருந்து சொத்து வரியை மாநகராட்சி வசூலிக்கிறது. இப்போது சென்னையில் சுமார் 15 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துகிறார்கள். மேலும் ஒவ்வொரு மாதமும் சுமார் 3,000 புதிய சொத்து வரி மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 40 சதவீத சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 40 சதவீதம் வரை சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு முடிவடைவதற்குள் 80 சதவீதம் வரை சொத்து வரி வசூல் செய்யப்பட்டுவிடும். இந்தாண்டு மட்டும் ரூ. 510 கோடியை சொத்து வரியாக வசூலிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பழைய வரி பாக்கிகளையும் சேர்த்து ரூ. 700 கோடி வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் ரூ. 500 கோடி வசூலிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் சுமார் ரூ. 461 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தாவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதன் மூலம் வரி செலுத்துவது அதிகரித்துள்ளது. இந்தாண்டும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முயற்சி செய்யப்படும்.

இப்போது பழைய மாநகராட்சிப் பகுதிகளை விட விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சொத்து வரி அதிகம் என்று புகார்கள் வருகின்றன. மேலும் இவற்றை சீராக்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் வருகின்றன. இதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பழைய சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட வரியே வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் அவ்வப்போது வரி உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடிய விரைவில் சொத்து வரி மதிப்பீடு திருத்தியமைக்கப்படும். அப்போது இந்த வித்தியாசம் குறைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

ஐ.டி. நிறுவனங்களுக்கு 200% சொத்துவரி உயர்வு

Print PDF
தினமணி          23.05.2013

ஐ.டி. நிறுவனங்களுக்கு 200% சொத்துவரி உயர்வு

சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சொத்துவரியை 200 சதவீதம் வரை உயர்த்தி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மான விவரம்: கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஐ.டி. நிறுவனங்களை எந்த வகையில் சேர்ப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் ஆய்வு நடத்தி ஐ.டி. நிறுவனங்களை சிறப்பு வகை கட்டடங்களாக கருதி புதிய சொத்து வரியை விதிக்க நிர்ணயிக்கப்பட்டு, புதிய வரி விதிப்பு குறித்து அரசிதழிலும் பத்திரிக்கைகளிலும் வெளியிடப்பட்டது.

அதன்படி, அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் உள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கு 200 சதவீதமும், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு 100 சதவீதமும், வளசரவாக்கம் மண்டலத்தில் 75 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

மேலும் பெருங்குடியில் 60 பைசாவுக்கு மேல் உள்ள ஒவ்வொரு பைசாவிலும் 100 சதவீத உயர்வு வழங்கியும், மாதவரம் மண்டலத்தில் ரூ. 1.20-க்கு மேல் உள்ள ஒவ்வொரு பைசாவுக்கும் 50 சதவீதம் வரி உயர்வு வழங்கியும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சொத்து வரி குறித்து பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்காததால் உயர்த்தப்பட்ட சொத்துவரியை அமுல்படுத்தி வசூலிக்க அரசாணை கோரப்படுகிறது.

இதேபோல, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமுக நலக் கூடத்தையும்  மாநகராட்சி பராமரிப்பில் எடுத்துக்கொள்வதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 

சொத்துவரி கேட்புப் புத்தகம் 25-ஆம் தேதி வரை வழங்கல்

Print PDF
தினமணி        16.05.2013

சொத்துவரி கேட்புப் புத்தகம் 25-ஆம் தேதி வரை வழங்கல்


கோவை மாநகராட்சியின் சார்பில் புதிய சொத்துவரி கேட்புப் புத்தகம் வரும் 25-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் க.லதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

கோவை மாநகராட்சி சார்பில் 2008-ஆம் ஆண்டுக்கு முன் வரிவிதிப்பு செய்யப்பட்ட கட்டடங்களுக்கும் காலியிடங்களுக்கும் 2008-09 சொத்துவரி சீராய்வின்போது புதிய சொத்துவரி கேட்புப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இப்புத்தகத்தில் 2012-13ம் நிதியாண்டில் இரண்டாம் அரையாண்டு வரை வரி செலுத்த ஏதுவாக பக்கங்கள் இருந்தன. ÷

இதில் பக்கங்கள் தீர்ந்து விட்ட நிலையில் புதிய சொத்துவரிப் புத்தகங்கள் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. மக்களிடம் இருந்து புத்தகங்கள் பெறுவதற்கு கால நீட்டிப்புக் கோரிக்கை வந்தது.

அதையடுத்து வரும் மே 25-ஆம் தேதி வரை புதிய சொத்துவரி கேட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும்.

நடப்பு அரையாண்டில் நிலுவை இல்லாமல் சொத்துவரி செலுத்திய அனைவருக்கும் புதிய சொத்துவரி கேட்புப் புத்தகம் வழங்கப்படும். பழைய சொத்துவரி புத்தகம் கொண்டுவந்து புதிய சொத்துவரி புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

வரும் 25-ஆம் தேதி வரை சனிக்கிழமை உள்பட அனைத்து வேலைநாள்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாநகராட்சி வரிவசூல் மையங்கள், வார்டு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் சொத்துவரி புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
 


Page 11 of 148