Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

மாநகராட்சி அறிவிப்பு புதிய சொத்து வரி புத்தகங்கள் விநியோகம்

Print PDF
தினகரன்        27.04.2013

மாநகராட்சி அறிவிப்பு புதிய சொத்து வரி புத்தகங்கள் விநியோகம்


கோவை: புதிய சொத்து வரி புத்தகங்கள் விநியோகம் துவங்கியுள்ளது என கோவை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி கமிஷனர் லதா வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை மாநகராட்சி பகுதியில் 2008க்கு முன்னர் வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ள கட்டடங்களுக்கும், காலியிடங்களுக்கும் 2008&09 சொத்துவரி பொது சீராய்வின்போது, புதிய சொத்துவரி கேட்பு புத்தகம் வழங்கப்பட்டது. இப்புத்தகத்தில் 2012&13ம் நிதியாண்டின், இரண்டாம் அரையாண்டு வரை வரி செலுத்த ஏதுவாக பக்கங்கள் இருந்தன. தற்போது, பக்கங்கள் தீர்ந்துவிட்ட நிலையில் புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

* 2013&14ம் ஆண்டுக்கு சொத்து வரி செலுத்த, சொத்துவரி புத்தகத்தில் பக்கம் இல்லாத அனைவருக்கும் புதிய சொத்து வரி புத்தகம் வழங்கப்படும்.

* 2012&13ம் இரண்டாம் அரையாண்டு வரை நிலுவையின்றி சொத்துவரி செலுத்தப்பட்ட அனைவருக்கும் புதிய சொத்து வரி புத்தகம் வழங்கப்படும்.

* பழைய சொத்து வரி புத்தகம் மற்றும் குடிநீர் கணக்கெடுப்பு புத்தகம் எடுத்து வந்து, புதிய சொத்து வரி புத்தகம் பெற்றுக்கொள்ளலாம்.

* சொத்து வரி புத்தகங்கள் அந்தந்த வார்டு பகுதிகளில் உள்ள மாநகராட்சி மையங்கள், வார்டு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலும் வழங்கப்படும்.

* வரும் 15.5.2013 வரை அனைத்து வேலை நாட்களிலும் சனிக்கிழமைகள் உள்பட காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
 

30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்த கெடு

Print PDF
தினமணி       22.04.2013

30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்த கெடு

உத்தரமேரூர் பேரூராட்சிக்கு  செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமம் ஆகியவை நிலுவையின்றி ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்திட வேண்டும்.

வரி நிலுவைகள் நூறு சதவீதம் செலுத்த தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செயல்அலுவலர் மா.கேசவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 

பேரூராட்சிக்கு ரூ.15 லட்சம் வருவாய்

Print PDF
தினமலர்                  18.04.2013

பேரூராட்சிக்கு ரூ.15 லட்சம் வருவாய்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு, 15 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம், நடத்தப்படும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, பேரூராட்சி நிர்வாகம் முறையாக வரி விதிக்கவில்லை. பெரும்பாலான கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என்பதால், கடந்த, 15 ஆண்டுகளாக, பேரூராட்சி அதிகாரிகள், வரி விதிக்க தயங்கி வந்தனர். இதனால், பேரூராட்சிக்கு, பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, "தினமலர்' நாளிதழில் கடந்த மாதம் 15ம் தேதி, செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பேரூராட்சி நிர்வாகம், தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு, 12 ஆண்டுகளுக்கு வரி விதித்தது. இதன் மூலம், பேரூராட்சிக்கு 15 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
 


Page 13 of 148