Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

மாநகராட்சி கூட்டத்தில் நாளை தீர்மானம்: தொழில் வரி உயர்கிறது- வருடம் 1 1/2 லட்சம் சம்பளம் வாங்கினால் ரூ. 1520 வரி

Print PDF

மாலை மலர் 21.07.2009

மாநகராட்சி கூட்டத்தில் நாளை தீர்மானம்: தொழில் வரி உயர்கிறது- வருடம் 1 1/2 லட்சம் சம்பளம் வாங்கினால் ரூ. 1520 வரி

சென்னை, ஜூலை.21-

சென்னை மாநகராட்சி பகுதியில் குடியிருக்கும் மாதச்சம்பளம் வாங்குபவர் களிடம் 6 மாதங்களுக்கு ஒருமுறை தொழில் வரி வசூ லிக்கப்படுகிறது. அரசு ஊழியர்களிடம் இருந்து அரசாங்கமும், தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களிடம் இருந்து அந்தந்த நிறுவனங்களும் வரியை வசூலித்து மாநக ராட்சிக்கு கொடுக்கிறது. தொழில் வரியாக மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ. 100 கோடி மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கிறது.

1998-ம் ஆண்டு தொழில் வரி சட்டம் திருத்தி அமைக் கப்பட்டது. 6 மாதங்களுக்கு ரூ. 21 ஆயிரம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு தொழில் வரி கிடையாது.

21 ஆயிரத்துக்கு மேல் 30 ஆயிரம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ. 60-ம், ரூ. 30 ஆயிரத்துக்கு மேல் 45 ஆயிரம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ. 150-ம், 45 ஆயிரத்துக்கு மேல் 60 ஆயிரம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ. 300-ம், 60 ஆயிரத்துக்கு மேல் ரூ. 75 ஆயிரம் வரை சம்ப ளம் வாங்குபவர்களுக்கு ரூ. 450-ம் வரி வசூலிக்கப்பட்டது.

இந்த வரி உயர்வு 5 ஆண் டுக்கு ஒருமுறை உயர்த் தப்பட்டு வருகிறது. அதன்படி 2003க்கு பிறகு இப்போது வரி உயர்த்தப்படுகிறது.

புதிய வரி உயர்வுப்படி 6 மாதங்களுக்கு ரூ. 21 ஆயிரம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு வரி இல்லை.

21,001 முதல் 30,000 வரை சம்பளம் வாங்குபவர் களுக்கு ரூ. 100.

ரூ. 30,001 முதல் 45,000 வரை சம்பளம் வாங்கு பவர்களுக்கு ரூ. 235.

ரூ. 45,001 முதல் 60,000 வரை சம்பளம் வாங்குப வர்களுக்கு ரூ. 510.

ரூ. 60,001 முதல் 75,000 வரை சம்பளம் பெறுபவர் களுக்கு ரூ. 760.

ரூ. 75 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவர் களுக்கு ரூ. 1095.

இந்த புதிய வரி உயர்வு பற்றிய தீர்மானம் நாளை மாநகராட்சி கூட்டத்தில் விவாதித்து நிறைவேற்றப் படுகிறது.

 

வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல்

Print PDF

தினமணி 21.07.2009

வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல்

ஆம்பூர், ஜூலை 20: பிரதி மாதம் 5-ம் தேதிக்குள் கடை வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்திருந்த ஆம்பூர் நகராட்சிக்கு சொந்தமான நகராட்சி கடைகள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன. ஆம்பூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) . குமரிமன்னன் மற்றும் நகராட்சி பணியாளர்களால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. ஆம்பூர் நகராட்சி பேருந்து நிலையத்திற்குள் பிளாட்பாரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கடைகளும் அகற்றப்பட்டன.

 

சொத்துரிமை மாற்றத்தில் முத்திரைத் தீர்வை மீது மேல்வரி

Print PDF

தினமணி 21.07.2009

சொத்துரிமை மாற்றத்தில் முத்திரைத் தீர்வை மீது மேல்வரி

சென்னை, ஜூலை 20: நகராட்சிப் பகுதிகளில் சொத்துரிமை மாற்றங்களின் மீதான தீர்வையை, முத்திரைத் தீர்வையின் மீதான மேல்வரி என்ற முறையில் விதிக்க மற்றும் வசூலிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

துணை முதல்வர் மு.. ஸ்டாலின் இது தொடர்பான மசோதாவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

மாநிலத்தில் நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும் ஆண்டொன்றுக்கு ரூ. 1,000 கோடி என்ற அளவுக்கு மதிப்பிடப்பட்ட "தமிழ்நாடு நகர்ப்புறச் சாலை கட்டமைப்புத் திட்டத்தை' செயல்படுத்த அரசு முடிவு செய்தது.

இந்த திட்டம் நகராட்சிகள், மாநகராட்சிகளுக்குச் செலுத்தத்தக்கதாக ஒதுக்கி அளிக்கப்பட்ட முத்திரைத் தீர்வை மீதான மேல்வரியின் ஒரு பகுதி உள்ளிட்ட பல்வேறு நிதி ஆதாரங்களை கொண்டிருக்கும். இதற்காக, நகராட்சிப் பகுதிகளில் சொத்துரிமை மாற்றங்களின் மீதான தீர்வையை, முத்திரைத் தீர்வையின் மீதான மேல்வரி என்ற முறையில் விதிக்கவும், வசூலிக்க வகை செய்யப்படும்.

அவ்வாறு வசூலிக்கப்படும் தொகையில் 50 சதவீதம் அளவிலான நிதியை, அந்த குறிப்பிட்ட நகராட்சி அல்லது மாநகராட்சியின் பகுதியில் சாலை கட்டமைப்புத் திட்டத்தை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு நகர்ப்புறச் சாலை கட்டமைப்பு நிதியில் வரவு வைப்பதற்கு வகை செய்யும் தனிச்சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

 


Page 145 of 148