Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

ரூ 461 கோடி சொத்துவரி வசூல்

Print PDF
தினகரன்        03.04.2013

ரூ 461 கோடி சொத்துவரி வசூல்

சென்னை, : சென்னை மாநகராட் சிக்கு உட்பட்ட பகுதியில் இந்த ஆண்டு ரூ 500 கோடி சொத்துவரி வசூலிக்க இலக்கு நிர்ணயித்தது.  15 மண்டலங்களிலும் வரி பாக்கியை வசூலிக்க உதவி வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணி நடைபெற்று வந்தது. இது கடந்த 31ம் தேதியுடன் முடிந்தது. ரூ 461.1 கோடிக்கு சொத்துவரி வசூல் ஆகியுள்ளது. இது 92 சதவீத வரி வசூல் ஆகும்.  

அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் (மண்டலம் 9)ரூ 103 கோடியும் குறைந்த பட்சமாக மணலியில் (மண்டலம் 2) ரூ 2.86 கோடியும் வசூலானது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. வரி செலுத்தாதவர்களின் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
 

காங்கிரஸ் கட்சி: மாநகராட்சிக்கு ரூ.22 லட்சம் சொத்து வரி பாக்கி

Print PDF
தினமலர்      02.04.2013

காங்கிரஸ் கட்சி: மாநகராட்சிக்கு ரூ.22 லட்சம் சொத்து வரி பாக்கி


சென்னை:காங்கிரஸ் கட்சி, சென்னை மாநகராட்சிக்கு, 22 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தாமல்,
இழுத்தடிப்பு செய்து வருகிறது.

தேனாம்பேட்டையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்குச் சொந்தமாக, காமராஜர் அரங்கமும், அதை ஒட்டி, வணிக வளாகமும் உள்ளன. இரண்டு அடுக்கு கொண்ட வணிக வளாகத்தில், ஏராளமான கடைகள் உள்ளன. இவற்றின் மூலம், காங்கிரஸ் அறக்கட்டளைக்கு, மாதம் தோறும் வாடகையாக, பல லட்சம் ரூபாய், வருவாய் கிடைத்து வருகிறது.

மாநகராட்சி சார்பில், காமராஜர் அரங்கம், வணிக வளாகம் பகுதிகளுக்கு, தெருவிளக்கு, மழைநீர் தேங்காமல் தடுத்தல் போன்ற பணிகள், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் அறக்கட்டளை, 2010ம் ஆண்டு முதல் தற்போது வரை, மாநகராட்சிக்கு, 22 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்த வேண்டும்.

ஆனால், சொத்து வரி செலுத்த சொல்லி, காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகிகளை, மாநகராட்சி வருவாய் அதிகாரிகள், பலமுறை கேட்டும், அதற்கு எந்தவித பதிலும் அளிக்காததுடன், வரி செலுத்தாமலும், இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.
 

மேட்டூரில் குடிநீர் வரி ரூ.60 லட்சம் நிலுவை குழாய் இணைப்பு துண்டிக்கும் பணி துவக்கம்

Print PDF
தினமலர்      02.04.2013

மேட்டூரில் குடிநீர் வரி ரூ.60 லட்சம் நிலுவை குழாய் இணைப்பு துண்டிக்கும் பணி துவக்கம்


மேட்டூர்: மேட்டூர் நகராட்சியில் அரசு மற்றும் பொதுத்துறை, தனியார் தொழிற்சாலைகள், பொதுமக்கள் என, அனைத்து தரப்பிலும் குடிநீர் வரி, 60 லட்சம் ரூபாய் வரை நிலுவை வைத்துள்ளனர். வரி நிலுவை வைத்துள்ளவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணி நேற்று துவங்கியது.மேட்டூர் நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளது. நகராட்சிக்குள், 7,315 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
நாள்தோறும், 75 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நகராட்சி சார்பில் குடிநீர் வரி மூன்று மாதத்துக்கு ஒரு முறை வசூல் செய்யப்படுகிறது.வீட்டு இணைப்புகள் தவிர, நகராட்சி எல்லைக்குள் இயங்கும் மின்கழகம் அலுவலகம், பொதுப்பணித்துறை, காவல்துறை, தொழிற்சாலைகள், வங்கி, மருத்துவமனை, அரசு பள்ளிகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் மார்ச், 31ல், 2012-13ம் ஆண்டுக்கான நிதியாண்டு முடிவடையும் நிலையில், இதுவரை மேட்டூர் நகராட்சியில் குடிநீர் இணைப்பு பெற்றவர்கள், 60 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.இதனால், நகராட்சி வருவாய் குறைந்து விட்டதாலும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பணி, நகராட்சிக்குள் நிறைவேற்றிய திட்ட பணிகளுக்கு நிதி வழங்குதல், நகராட்சி செலவினங்களுக்கு நிதி ஒதுக்குவது போன்ற பணிகள் பாதித்துள்ளது.

நிலுவை குடிநீர் வரியை செலுத்தகோரி நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.இதில், மேட்டூர் மின்கழக ஒர்க்ஷாப், 5 லட்சம், அரசுபள்ளி, 1.20 லட்சம், போலீஸ் குடியிருப்பு, 2 லட்சம், தனியார் தொழிற்சாலை, 2.85 லட்சம் ரூபாய் என பல்வேறு அரசு அலுவலங்கள், தனியார் வணிக நிறுவனங்கள் பல லட்சம் ரூபாய் குடிநீர் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது.
 
அதை தொடர்ந்து மேட்டூர் நகராட்சி பொறியாளர் மற்றும் கமிஷனர் (பொ) சுகுமார் உத்தரவுபடி நேற்று நகராட்சி ஊழியர்கள் வரி நிலுவை வைத்துள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணி மேற்கொண்டனர்.முதல்கட்டமாக மேட்டூர் மின்கழக ஒர்க்ஷாப் குடிநீர் இணைப்பு நேற்று துண்டிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தனியார் வணிக நிறுவனம், ஹோட்டல் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

மார்ச் மாதத்துக்குள் நகராட்சிக்கு குடிநீர் வரி செலுத்தாத அனைத்து அலுவலங்கள், வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும் என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை குடிநீர் வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
 


Page 16 of 148