Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

100 சதவீத வரி வசூலித்து சத்தி நகராட்சி சாதனை

Print PDF
தினகரன்      01.04.2013

100 சதவீத வரி வசூலித்து சத்தி நகராட்சி சாதனை


சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் நகராட்சியில் 2012-13 ம் ஆண்டிற்கான வரி வசூல் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாக 100 சதவீதம் வசூலிக்கப்பட்டது. இச்சாதனையைச் செய்த அலுவலர்களுக்கு பாராட்டு விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சித்தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆணையாளர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். ரூ.3.14 கோடி வரி வசூல் செய்த மேலாளர் பிரான்சிஸ்சேவியர், வருவாய் ஆய்வாளர் நாகராஜ், வருவாய் உதவியாளர்கள் கணேசன், சந்திரன், ஆரிப்வுல்லா, பிரகாஷ், ஆயிஷா, முருகேசன், சுந்தரம் ஆகியோருக்கு நகராட்சித்தலைவர் பாராட்டுச்சான்று மற்றும் கேடயம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 100 சதவீத வரிவசூலுக்கு ஒத்துழைத்த பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
 

மோகனூர் டவுன் பஞ்., வரி வசூலில் சாதனை

Print PDF
தினமலர்        30.03.2013

மோகனூர் டவுன் பஞ்., வரி வசூலில் சாதனை


மோகனூர்: மோகனூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், 100 சதவீதம் வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மோகனூர் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. அவற்றில், 3,000க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. டவுன் பஞ்சாயத்தில் வசித்து வரும் பொதுமக்களிடம் சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் வசூல் மற்றும் கடை வாடகை ஆகியவற்றை, ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் வசூல் செய்வது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், சொத்துவரி, தொழில் வரி, கடை வாடகை, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை வசூல் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். அவர்களது இந்த முயற்சியால், இந்த ஆண்டு, 100 சதவீதம் வரி வசூல் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம், 35 ஆண்டுகளாக தொடர்ந்து, 100 சதவீதம் வரி வசூல் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரி வசூல் இலக்கை பூர்த்தி செய்த அலுவலர்கள், பணியாளர்களை, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் வெங்டேசன் பாராட்டினார்.
 

சத்தியமங்கலம் நகராட்சி 100 % வரிவசூல் சாதனை

Print PDF
தினமணி         30.03.2013

சத்தியமங்கலம் நகராட்சி 100 % வரிவசூல் சாதனை


சத்தியமங்கலம் நகராட்சியில் 100 சதவிகிதம் வரிவசூல் செய்த நகராட்சிப் பணியாளர்களைப் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

சத்தியமங்கலம் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர்க் கட்டணம், தொழில் வரி போன்ற வரி இனங்களை மக்களிடமிருந்து முழுமையாக வசூல் செய்ய வேண்டும் என்று நகராட்சிப் பணியாளர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து, நகராட்சி மேலாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமையிலான குழுவினர் முனைப்புடன் செயல்பட்டு, மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்னதாகவே, நிலுவையின்றி 100 சதவிகிதம் வரிவசூல் செய்து நகராட்சிக்கு வருவாய் ஈட்டியுள்ளனர்.

சொத்துவரி ரூ. 130.68 லட்சம், தொழில்வரி ரூ. 26.73 லட்சம், குடிநீர்க் கட்டணம் ரூ. 54.59 லட்சம் மற்றும் வரியில்லாத இனங்கள் ரூ. 102.15 லட்சம் என மொத்தமாக ரூ. 3.14 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், ரூ. 14.60 லட்சம் அனைத்துப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முழுமையான வரிவசூல் செய்த பணியாளர்களுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கு.தனலட்சுமி முன்னிலையில், நகராட்சித் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் பணியாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார்.
 


Page 17 of 148