Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

அசத்தல் வரி வசூல் பணியில் அஸ்தம்பட்டி மண்டலம்... மேயர், துணை மேயர் மண்டலத்துக்கு கடைசி இடம்

Print PDF
தினமலர்        27.03.2013

அசத்தல் வரி வசூல் பணியில் அஸ்தம்பட்டி மண்டலம்... மேயர், துணை மேயர் மண்டலத்துக்கு கடைசி இடம்


சேலம்: சேலம் மாநகராட்சியில், வரி வசூல் மூலம் அதிக வருவாய் ஈட்டிய சாதனையை, கடந்த ஆண்டு அஸ்தம்பட்டி மண்டலம் தட்டி சென்றுள்ளது. மேயர், துணை மேயர் ஆகியோர் வசிக்கும் கொண்டலாம்பட்டி மண்டலம், கடைசி இடம் பிடித்தது.

சேலம் மாநகராட்சியில், வரி இனங்கள் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய மண்டலங்களில், அதிகளவில் கடைகள், வாரச்சந்தைகள் உள்ளிட்ட வரி இனங்கள் இருந்தபோதும், கடந்த ஆண்டு வரி வசூலில் மிகவும் பின் தங்கியுள்ளது.

கடந்த, 2012-13 ம் ஆண்டு சூரமங்கலம் மண்டலத்தில், சொத்துவரி மூலம், நான்கு கோடியே, 81 லட்சத்து, 69 ஆயிரம் ரூபாய், குடிநீர் கட்டணம் மூலம், நான்கு கோடியே, 48 லட்சத்து, 7,000 ரூபாய், தொழில் வரி மூலம், ஒரு கோடியே, 95 லட்சத்து, 42 ஆயிரம் ரூபாய், மாநகராட்சி கடைகள் மூலம், 89 லட்சத்து, 92 ஆயிரம் ரூபாய், குத்தகை இனங்கள் மூலம் ஒரு கோடியே 60 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய், ஆக மொத்தம் 13 கோடியே 75 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அஸ்தம்பட்டி மண்டலத்தில், சொத்து வரி மூலம், ஆறு கோடியே, 55 லட்சத்து, 46 ஆயிரம் ரூபாய், குடிநீர் கட்டணம் மூலம், நான்கு கோடியே, ஆறு லட்சம் ரூபாய், தொழில் வரி மூலம், மூன்று கோடியே, 53 லட்சத்து, 41 ஆயிரம் ரூபாய், கடைகள் மூலம், 10 லட்சத்து, 85 ஆயிரம் ரூபாய், குத்தகை இனங்கள் மூலம், 15 லட்சத்து, 15 ஆயிரம் ரூபாய், ஆக மொத்தம், 14 கோடியே, 41 லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அம்மாப்பேட்டை மண்டலத்தில், சொத்துவரி மூலம் மூன்று கோடியே, 31 லட்சத்து, 85 ஆயிரம் ரூபாய், குடிநீர் கட்டணம் மூலம், இரண்டு கோடியே, 99 லட்சத்து, 17 ஆயிரம் ரூபாய், தொழில் வரி மூலம், 91 லட்சத்து, 35 ஆயிரம் ரூபாய், கடைகள் மூலம், 94 லட்சத்து, 2,000 ரூபாய், குத்தகை இனங்கள் மூலம், இரண்டு கோடியே, 15 லட்சத்து, 68 ஆயிரம் ரூபாய், ஆக மொத்தம், 10 கோடியே, 32 லட்சத்து, 7,000 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

கொண்டலாம்பட்டி மண்டலத்தில், சொத்துவரி மூலம், நான்கு கோடியே, 61 லட்சத்து, 18 ஆயிரம் ரூபாய், குடிநீர் கட்டணம் மூலம், மூன்று கோடியே, 50 லட்சத்து, 66 ஆயிரம் ரூபாய், தொழில் வரி மூலம், 96 லட்சத்து, 76 ஆயிரம் ரூபாய், கடைகள் மூலம் ஒரு லட்சத்து, 61 ஆயிரம் ரூபாய், குத்தகை இனங்கள் மூலம், 36 லட்சத்து, 67 ஆயிரம் ரூபாய், ஆக மொத்தம், ஒன்பது கோடியே, 46 லட்சத்து, 88 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

மாநகராட்சி மேயர் சவுண்டப்பன், கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட 57 வது வார்டிலும், துணை மேயர் நடேசன், 50 வது வார்டிலும் வசித்து வருகின்றனர். மேயர், துணை மேயர் இருவரும் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் இருந்தபோதும், வரி வசூல் பணியை அவர்கள் துரிதப்படுத்துவதில், ஆர்வம் காட்டவில்லை.

அதனால், கொண்டலாம்பட்டி மண்டலம், வரி வசூலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. கடந்த முறை சூரமங்கலம் மண்டலத்தின் சாதனையை முறியடித்து, அஸ்தம்பட்டி மண்டலம் அதிக வருவாயை ஈட்டிய மண்டலமாக சாதனைப்படைத்துள்ளது.
 

22 ஆண்டுகளுக்கு பிறகு தாராபுரம் நகராட்சியில் 100 சதவீதம் வரிவசூல் ரூ.4 கோடியே 70 லட்சம் குவிந்தது

Print PDF
தினத்தந்தி         27.03.2013

22 ஆண்டுகளுக்கு பிறகு தாராபுரம் நகராட்சியில் 100 சதவீதம் வரிவசூல் ரூ.4 கோடியே 70 லட்சம் குவிந்தது


தாராபுரம் நகராட்சியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு 100 சதவீதம் வரிவசூலானது. இதன்படி ரூ.4 கோடியே 70 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது.

நகராட்சியில் வரி வசூல்

தாராபுரம் நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பஸ் நிலைய கடைகள் குத்தகை, தினசரி மார்க்கெட் வாடகை கட்டணம் உள்பட பல்வேறு வரியினங்கள் மூலம் வருமானம் கிடைக்கிறது. தாராபுரம் நகராட்சியில் மொத்தம் 14 ஆயிரத்து 581 வரியினங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.2 கோடியே 4 லட்சத்து 47 ஆயிரம் கிடைக்கிறது. அரசு ஊழியர்கள் 4,283 பேரும், வியாபாரிகள் மற்றும் தொழில் செய்வோர் 937 பேரும், தொழில் வரியாக ரூ.43 லட்சத்து 92 ஆயிரத்து 654ம் செலுத்துகிறார்கள். நகர் முழுவதும் உள்ள 8 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் மூலம் ரூ.51 லட்சத்து 51 ஆயிரம் குடிநீர் கட்டணமாக கிடைக்கிறது. அனைத்து வரியினங்கள் மூலம் தாராபுரம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.4 கோடியே 70 லட்சம் வருமானம் கிடைக்கிறது

22 ஆண்டுகளுக்கு பிறகு

இந்த ஆண்டு அனைத்து வரியினங்களும் முழுமையாக கடந்த 17ந் தேதி வசூல் செய்யப்பட்டது. தொழில்வரி ரூ.43 லட்சத்து 92 ஆயிரத்து 654 நேற்று மாலையுடன் வசூலானது. குடிநீர் கட்டண தொகையும் வசூலாகி விட்டது. கடந்த 1991ம் ஆண்டுதான் தாராபுரம் நகராட்சியில் 100 சதவீதம் வரி வசூலானது. அதன்பிறகு 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் 100 சதவீத வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் மார்ச்31 ந் தேதிக்கு முன்பே 100 சதவீதம் தாராபுரம் நகராட்சியில் வரிவசூலாகி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இதையடுத்து 100 சதவீத வரி வசூல் செய்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை நகராட்சி தலைவர் கலாவதி மற்றும் ஆணையாளர் சரவணக்குமார் ஆகியோர் பாராட்டினார்கள். 100 சதவீதம் வரிவசூல் செய்த மேலாளர் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் எம்.செல்வராஜ், உதவி ஆய்வாளர்கள் அய்யாசாமி, கலீல் ரகுமான், நாகராஜ், சிவக்குமார், ராஜா, யோகேஸ்வரன், ரூபா, ராஜேஸ், சுப்பிரமணி ஆகியோர் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
 

வரி நிலுவைக்காக அரசு கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF
தினகரன்        26.03.2013

வரி நிலுவைக்காக அரசு கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

குன்னூர்:குன்னூர் நகராட்சி சார்பில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், நகராட்சி கடைகளுக்கான வாடகை உள்ளிட்டவற்றை ஊழியர்கள் தீவிரமாக வசூலித்து வருகின்றனர். இம்மாத இறுதிக்குள் நகர் பகுதியில் அனைத்து வரிகளுக்குண்டான தொகையை வசூலிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் வரி செலுத்தாத குடியிருப்புகள், ஓட்டல்களில் குடிநீர் இணைப்பை துண்டித்து வருகின்றனர். ஏற்கனவே சுகாதார துறை மற்றம் வனத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் குடிநீர்  இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது, சிம்ஸ் பூங்கா அருகே உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகம், பழம் பதினிடும் நிலையம் ஆகியவற்றில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நகராட்சிக்கு ரூ.40 ஆயிரம் வரி செலுத்த வலியுறுத்தியும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல் வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு நகராட்சி ஆணையர் சண்முகம் உத்தரவின் பேரில் வருவாய் அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான ஊழியர்கள் சீல் வைத்தனர். இந்நடவடிக்கை மேலும் தொடரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தனியார் கட்டிடங்கள் போல் அரசு அலுவலகங்களுக்கும் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் சம்பவம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


Page 19 of 148