Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு 10 ஆண்டுகளில் மாநகராட்சிக்கு ரூ11,866 கோடி கூடுதல் நிதிச்சுமை

Print PDF

தினகரன்                   15.11.2010

ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு 10 ஆண்டுகளில் மாநகராட்சிக்கு ரூ11,866 கோடி கூடுதல் நிதிச்சுமை

மும்பை, நவ. 15: ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்க வகை செய்யும் 6வது சம்பள குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் மாநகராட்சிக்கு கூடுதலாக ரூ11,866 கோடி நிதிச்சுமை ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

மத்திய அரசின் 6வது ஊதிய குழு பரிந்துரைகள் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மும்பை மாநகராட்சி ஊழியர் சங்கங்கள் நிராகரித்து விட்டன. ஊதிய உயர்வு விகிதம் குறைவாக உள்ளது என்று ஊழியர்கள் சங்கங்கள் கூறின.

இதையடுத்து ஊதிய உயர்வு தொடர்பாக வரைவு ஒன்றை தயாரிக்க கடந்த ஜூலை மாதம் ஹக்கிம் குழுவை மாநகராட்சி நிர்வாகம் அமைத்தது. 6வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்தும் வழிமுறைகள் குறித்த அம்சங்கள் இந்த திட்ட வரைவில் இடம்பெற்றுள்ளது. ஹக்கிம் குழுவின் இந்த வரைவு நேற்று முன்தினம் மாநகராட்சியிடம் சமர்பிக்கப்பட்டது.

இது பற்றி கமிஷனர் ஸ்வாதீன் ஷத்திரியா கூறியதாவது:

முன்பு கொண்டு வரப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஊழியர்கள் சங்கங்கள் இடையே ஆதரவு இல்லை. அந்த ஒப்பந்தப்படி ஊதிய விகிதங்களை மாற்றி அமைத்தால் மாநகராட்சிக்கு 10 ஆண்டுகளில் ரூ8,527 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். ஆனால் தற்போதுள்ள ஹக்கிம் குழு வரைவுபடி 10 ஆண்டுகளில் ரூ11,866 கோடி நிதிச்சுமை ஏற்படும்.

இந்த குழுவின் வரைவு ஊழியர் சங்கங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கருத்துகள் வரவேற்கப்பட்டு அதில் உள்ள அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும். திருத்தி அமைக்கப்பட்ட சம்பள விகிதம் வரும் 20ம் தேதி முதல் அமலுக்கு வரும். இவ்வாறு ஷத்திரியா கூறினார். மாநகராட்சியில் 4ம் நிலை ஊழியர்களின் ஊதியம் 18 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது. மாநகராட்சியின் மொத்த ஊழியர்களான 1.27 லட்சம் பேரில் சுமார் 70 சதவீதம் பேர் 4ம் நிலை ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தஞ்சை நகராட்சி 2009&10ம் ஆண்டின் நிர்வாக அறிக்கை வெளியீடு வரவு ரூ30.51 கோடி செலவு ரூ33.63 கோடி

Print PDF

தினகரன்                    26.10.2010

தஞ்சை நகராட்சி 2009&10ம் ஆண்டின் நிர்வாக அறிக்கை வெளியீடு வரவு ரூ30.51 கோடி செலவு ரூ33.63 கோடி

தஞ்சை, அக்.26: தஞ்சை நகர் மன்றத்தின் சாதாரண கூட்டம் நகர்மன்றத் தலைவி தேன்மொழி ஜெயபால் தலைமையில் நடைபெற் றது.

2009&2010ம் ஆண்டின் நிர்வாக அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரலா ற்று சிறப்புமிக்க தஞ்சை நகரம் 9.5.1866ம் தேதி முதல் பொது சுகாதாரத்துறை அரசாணை சார்பில் நகராட்சியாக்கப்பட்டு, படிப்படி யாக உயர்ந்து 9.5.1983 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. தஞ்சை நகராட்சியின் பரப்பளவு 36.31 சதுர கிலோ மீட் டர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 2,15,314. 2009ம் ஆண்டில் உத்தேச மக்கள் தொகை 2,27,697. 70 சத்துணவு மையங்கள், 33 ஆரம்பப் பள்ளி, 18 நடுநிலைப்பள்ளி, 6 உயர்நிலைப்பள்ளி, 13 மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது.

நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள சாலைகளின் நீளம் 319.43 கி.மீ. இதில் 301.33 கி.மீ நகராட்சியால் பராமரிக்கப்படுகிறது. 2009&10ல் சாலை பராமரிப்புக்கான செலவு ரூ.6,15,300. 2009&10ல் பொது நிதி பணியின்கீழ் ரூ.2.85 கோடியில் 47 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குடிநீர் வடிகால் நிதி பணிகளின் கீழ் ரூ48.69 லட்சத்தில் 22 பணிகள், குடிநீர் வடிகால் நிதியில் மேலும், ரூ48.80

லட்சத்தில் 20 இதர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் வார்டு எண் 34ல் ரூ3.60 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.79 லட்சத்தில் 15 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நகராட்சிக்கு சொந்த மான 12 வாகனங்களுக்கு பராமரிப்புக்காக 2009&10ம் ஆண்டில் மட்டும் ரூ18,49,043 செலவு செய்யப்பட்டுள்ளது. நகராட்சிப் பகுதியில் 7,180 குழல் விளக்குகளும், 12 உயர் மின் கோபுர விளக்குகளும், 2,553 சோடியம் ஆவி விளக்குள் உட்பட 9,745 விள க்குகள் உள்ளன. 2009&10ல் புதிதாக 137 மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான பராமரிப்பு செலவு (மின் கட்டணம் நீங்கலாக) ரூ51,58,900. தஞ்சை நகராட்சியில் 2009&10ம் ஆண்டில் மொத்த வருவாய் ரூ30.51கோடியே 31 ஆயிரத்து 809. மொத்த செலவு ரூ33 கோடியே 63 லட்சத்து 79 ஆயிரத்து 411 என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.

Last Updated on Tuesday, 26 October 2010 11:29
 

2010&11ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் அரசு ஒப்புதல் நிலைக்குழு தலைவர் தகவல்

Print PDF

தினகரன் 13.10.2010

2010&11ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் அரசு ஒப்புதல் நிலைக்குழு தலைவர் தகவல்

பெங்களூர், அக். 13: பெங்களூர் மாநகராட்சியின் 2010&2011 பட்ஜெட்டுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ரூ. 8 ஆயிரத்து 848 கோடி மதிப்பிலான நலத்திட் டங்கள் தொடங்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த 2006 நவம்பர் மாதம் மாநகராட்சியின் பதவி காலம் முடிந்தது. கடந்த மே மாதம் வரை 41 மாதங்கள் மக்களாட்சி இல்லாமல் இருந்த மாநகராட்சிக்கு தேர்தல் நடந்ததின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் நிர்வாகம் வந்துள்ளது. இழுப்பறிக்கு பின் கடந்த மாதம் ரூ.8 ஆயிரத்து 848 கோடி மதிப்பில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மாநகராட்சி நிதி மற்றும் வரி நிலைக்குழு தலைவர் சதாசிவா தாக்கல் செய்தார். இதற்கு மாநகராட்சி கூட்டத்திலும் ஒப்புதல் பெறப்பட்டது. இதை மாநில அரசின் ஒப்புதலுக்காக மாநகராட்சி அனுப்பியுள்ளது.

இதனிடையில் மாநில அரசில் கடந்த ஒருவாரமாக நிகழ்ந்த சம்பவங்கள் மாநகராட்சி பட்ஜெட் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று முன்தினம் பேரவையில் முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்த நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மாநகராட்சி நிலைக் குழு தலைவர் சதாசிவா தலைமையில் குழு ஒன்று மாநில நகர வளர்ச்சிதுறை முதன்மை செயலாளரை சந்தித்து பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கும்படி கேட்டனர். இதை ஏற்று உடனடியாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது குறித்து நிதி மற்றும் வரி நிலைக்குழு தலைவர் சதாசிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடப்பு நிதியாண்டில் 6 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் மீதியுள்ள 6 மாதத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.8 ஆயிரத்து 848 கோடி மதிப்பிலான திட்டங்கள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருமாதமாக மாநில அரசின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்த பட்ஜெட்டிற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளதால், உடனடியாக வார்டு வாரியாக என்னென்ன பணிகள் மேற்கொள்வது என்பது குறித்து திட்டம் தயாரிக்கப்படும். இதை தொடர்ந்து வளர்ச்சி பணி மேற்கொள்ள டெண்டர் கோரப்படும். டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் குறித்த காலத்திற்குள் பணி முடிக்கும் வகையில் நிபந்தனை விதிக்கப்படும்.

மாநகராட்சியில் அதிகாரிகள் நிர்வாகம் இருந்த போது டெண்டர் மூலம் செயல்படுத்தப்பட்ட பல பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதை தவிர்க்க தற்போது பார்கோட்என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன் கையில் எடுத்துள்ள திட்டங்களில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டுப்பிடிப்பதுடன், புதியதாக தொடங்கப்படும் திட்டங்களில் முறைகேடு நடக்காமல் தவிர்க்கப்படும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் குறைவில்லாமல் செயல்படுத்த போதிய கவனம் செலுத்தப்படும். கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் பணி விரைந்து முடிக்க வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 14 of 31