Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

அதிகாரி தகவல் ஆகஸ்ட் 8ல் பெங்களூர் பட்ஜெட் இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

Print PDF

தினகரன் 23.07.2010

அதிகாரி தகவல் ஆகஸ்ட் 8ல் பெங்களூர் பட்ஜெட் இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

பெங்களூர், ஜூலை 23: இந்நிதியாண்டுக்கான பெங்களூர் பட்ஜெட் ஆக.8ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாநகராட்சி நிதி மற்றும் வரி நிலைக்குழு தலைவர் சதாசிவா தலைமையில் உள்ள 6 நிலைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கடந்த ஒருவாரமாக 2010&11ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதில் எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்தும் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்வது என்பது உள்பட பல விஷயங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவுநீர் கால்வாய், சுத்தமான குடிநீர், தடையில்லா மின்சாரம், நவீன வசதிகளுடன் கூடிய பூங்கா, புதிய கட்டிட புனரமைப்பு உள்பட பல புதிய திட்டங்களுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்க சதாசிவா முடிவு செய்துள்ளார்.

மாநகரில் கொட்டி கிடக்கும் திட கழிவுகளை அகற்ற ஒரு நிறுவனத்திற்கு குத்தகை கொடுப்பதில் முறைகேடு நடப்பதை தவிர்க்க. ஒவ்வொரு வார்ட்டிலும் திட கழிவுகள் அகற்ற தனிதனியாக குத்தகை கொடுக்கும் திட்டத்தை பட்ஜெட்டில் அறிமுக்க நிலைக்குழு தலைவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சாலை விபத்துகளில் பலியாகும் கால்நடைகளை தகனம் செய்ய தனியாக மின்சார இடுகாடு அமைப்பது, பெரிய கால்வாய்களில் தூர்வாரும் பணி மேற்கொள்வது, வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகளில் மேம்பாலம் மற்றும் சுரங்க பாலம் அமைப்பது உள்பட பல புரட்சிகரமான திட்டங்களை பட்ஜெட்டில் அறிமுக்க சதாசிவா முடிவு செய்துள்ளதாகவும், பட்ஜெட்டை வரும் ஆகஸ்ட் 8ம் தேதி தாக்கல் செய்யப்படும்.

 

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.400 உதவித் தொகை மேயர் வழங்கி தொடங்கி வைத்தார்

Print PDF

மாலை மலர் 05.05.2010

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.400 உதவித் தொகை மேயர் வழங்கி தொடங்கி வைத்தார்

சென்னை, மே. 5-

மாற்றுத் திறனாளிகளுக்கு      மாதம் ரூ.400 உதவித் தொகை      மேயர் வழங்கி தொடங்கி வைத்தார்

 

சென்னை மாநகராட்சி யும், சென்னை மாவட்ட நிர்வாகமும் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் உதவித்தொகைகள் வழங்கும் சிறப்பு முகாமை ரிப்பன் மாளிகையில் இன்று நடத்தின.

இம்முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கி மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஆதரவற்ற மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் செவித்திறன் குறைவுடையோருக்கும் மற்றும் வாய்பேச முடியாத வர்களுக்கும் தகுதிகள் அடிப்படையில் மாதம் ரூ.400 உதவித்தொகை வழங்க அறிவித்துள்ளார். அதன் பொருட்டு, 213 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூபாய் 400/- வழங்கும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாதந் தோறும் வழங்கப்படும் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதியுள்ள நபர்களும் மற்றும் பாரதப்பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பெறும் கடன் தொகையில் தங்கள் பங்காக செலுத்த வேண்டிய 5 சதவீதம் பங்குத்தொகையை தமிழக அரசு மானியமாக வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவ்வாறு மேயர் கூறினார்.

முகாமில் ஆணையாளர் ஆஷிஷ் சாட்டர்ஜி, சென்னை மாவட்ட கலெக்டர் சோபனா, துணை ஆணையர் (சுகாதாரம்) பா. ஜோதி நிர்மலா, துணை மேயர் சத்தியபாமா, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் (சுகாதாரம்) மணிவேலன், தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் கோபிநாத், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் வரத குட்டி, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர், நல அலுவலர் டாக்டர் பெ.குகானந்தம், மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

ரூ. 50 லட்சம் பற்றாக்குறை

Print PDF

தினமணி 29.04.2010

ரூ. 50 லட்சம் பற்றாக்குறை

புதுக்கோட்டை, ஏப். 28: புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் நிகழாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ. 50 லட்சம் பற்றாக்குறை உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் நகர்மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் உ. ராமதிலகம் தலைமை வகித்தார். ஆணையர் கே. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், 2009-2010-ம் நிதியாண்டின் திருந்திய வரவு செலவுத் திட்ட அறிக்கை மற்றும் 2010-2011-ம் நிதியாண்டின் வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், 2009-10 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வரவாக ரூ. 1341.62 லட்சமும், செலவாக ரூ. 1295.39 லட்சமும், மிகுதி இருப்பு ரூ 46.23 லட்சம் எனவும் 2010-11 ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வரவாக ரூ. 1,459.04 லட்சமும், செலவாக ரூ. 1,510 லட்சமும் பற்றாக்குறை தொகை ரூ. 50.96 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:

ஆறுமுகம்: ""2009-10-ல் ரூ. 46 லட்சம் மீதமிருக்கும் நிலையில்,அடுத்த ஆண்டில் ரூ. 50 லட்சம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க தொழில் வரி மற்றும் வரிவிதிக்கத்தக்க இனங்களுக்கு வரி விதிப்பு மூலம் வருவாய் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியமாகும்?''

ஆணையர்: ""கடந்த ஆண்டைவிட ரூ. 50 லட்சம் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு ஐஹெச்டிபி திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கியதுதான் முக்கிய காரணம். அடிப்படை வசதிகள் செய்யவும் நகர்புற ஏழை மக்களின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் வகையில் சொத்து வரிகேட்பு மற்றும் இதர செலவினங்களை கருத்தில் கொண்டு இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.''

ஆறுமுகம்: ""சொத்து வரி, வீட்டு வரி வசூலில் தீவிரம் காட்டுவதை விட வரிவிதிக்கத்தக்க இனங்களில் உள்ள 300 பேரிடம் செலுத்த வேண்டியதை வசூல் செய்தால் ரூ. 1.5 கோடி வசூலாகும். மேலும், வணிக நிறுவனங்களுக்கான 80 சத வரி உயர்வைக் குறைக்க வேண்டும்.''

சண்முக பழனியப்பன்: ""கடந்த ஆண்டில் நகர்மன்றத் தலைவர் வெளிநாடு சென்றிருந்தபோது துணைத் தலைவர் க. நைனாமுஹம்மது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு 5 சதம் கூடுதல் தொகை வைத்து ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், நகர்மன்றத் தலைவர் நாடு திரும்பியவுடன் அந்த தீர்மானத்தை சிறப்புக்கூட்டம் போட்டு ரத்து செய்தார். அதுபோல கூடுதல் வரி விதிப்பிலும் அக்கறை செலுத்தி வரியைக் குறைக்கலாம்.''

தலைவர்: ""வரியைக் குறைக்க முடிந்தவரை முயற்சி எடுக்கப்பட்டது, மேலிடத்துக்குச் சென்று விட்டதால் எதுவும் செய்ய முடியாது. நடந்து முடிந்ததை பேசக் கூடாது.''

கருணாகரன்: ""நகராட்சி வாயிலில் நகராட்சி ஒப்பந்தகாரர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு எதை எடுத்தாலும் பணம், பணம் எனக் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறீர்கள்?''

தலைவர்: ஒப்பந்தகாரர்கள் எதற்கெடுத்தாலும் பணம் கேட்பதாக கூறுகிறார்கள் என்றால் அவர்கள் ஏன் ஒப்பந்தம் எடுóக்கிறார்கள்? பேசாமல் போய்விட வேண்டியதுதானே? வீண் பழிக்குப் பதிலளிக்கத் தேவையில்லை.''

லியாகத்அலி: ""நகரின் மையப் பகுதியில் இருக்கு நைனாரிக்குளத்தை தூர்வார வேண்டும். குளத்தில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க வேண்டும்.''

இப்ராஹிம்பாபு: ""பல்லவன் குளத்தை தூய்மையாக வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

சந்திரசேகரன்: ""இந்த நிதிநிலை அறிக்கையில் அம்மையாபட்டி குடிநீர்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. குறைந்தபட்சம் 2 ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கத் தேவையான நிதி ஒதுக்க வேண்டும்.'' இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

 


Page 18 of 31