Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.15.96 கோடி பற்றாக்குறை பட்ஜெட்

Print PDF

தினமணி 20.04.2010

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.15.96 கோடி பற்றாக்குறை பட்ஜெட்

தூத்துக்குடி, ஏப். 19: தூத்துக்குடி மாநகராட்சியில் 2010- 2011-ம் ஆண்டிற்கான ரூ. 15.96 கோடி பற்றாக்குறை பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம், மேயர் இரா. கஸ்தூரி தங்கம் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ஜெ. தொம்மை ஜேசுவடியான், ஆணையர் பெ. குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாதாரணக் கூட்டப் பொருளில் உள்ள அனைத்து தீர்மானங்களும் எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து 2010- 2011-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து மேயர் கஸ்தூரி தங்கம் பேசினார்.

2009-2010-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வருவாய் நிதியில் ரூ. 4,75,92,000 பற்றாக்குறை ஏற்படும் என உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால், வரவினங்களும், செலவினங்களும் இறுதி செய்யப்பட்டதில் ரூ. 5,35,33,000 பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என மேயர் குறிப்பிட்டார்.

நடப்பு ஆண்டிற்கான (2010- 2011) வருவாய் நிதியில் ரூ. 8,75,43,000 பற்றாக்குறை ஏற்படும் எனவும், குடிநீர் நிதியில் ரூ. 7,21,20,000 பற்றாக்குறையாகவும், கல்வி நிதியில் ரூ. 17.95 லட்சம் உபரி வருமானம் ஏற்படும் எனவும் உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.

வருவாய் நிதி: வருவாய் நிதியை பொறுத்தவரை சொத்துவரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலமாக ரூ. 5.87 கோடியும், அரசு சுழல் நிதியாக ரூ. 11.50 கோடியும், அரசு மானியமாக ரூ. 1.10 கோடியும், ஏனைய வருமானங்கள் மூலம் ரூ. 4,01,77,000 என மொத்தம் ரூ. 22,48,77,000 வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் சாலை பராமரிப்பு மற்றும் கட்டட பராமரிப்பு போன்றவற்றுக்கு ரூ. 1.8 கோடி, திட்ட செலவுகளுக்கு ரூ. 20 லட்சம், பொது சுகாதார பணிகளுக்கு ரூ. 1.75 கோடி, இதர செலவினங்களுக்கு ரூ. 27,49,20,000 என மொத்தம் ரூ. 31,24,20,000 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 8,75,43,000 பற்றாக்குறை ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

குடிநீர் மற்றும் வடிகால் நிதி: நடப்பு ஆண்டில் குடிநீர் வரியாக ரூ. 4.15 கோடி, இதர வருமானமாக ரூ. 4.92 கோடி என மொத்தம் ரூ. 9.07 கோடி வருமானம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குடிநீர் இயக்க செலவிற்காக ரூ. 2.60 கோடி, நிர்வாக செலவு மற்றும் இதர செலவினங்களுக்காக ரூ. 2.45 கோடி, கடன் செலுத்துதலுக்காக ரூ. 11.24 கோடி என மொத்தம் ரூ. 16.29 கோடி செலவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 7,21,20,000 பற்றாக்குறை ஏற்படும்.

கல்வி நிதி: உபரி கல்வி வரியாக ரூ. 1.85 கோடி வருமானம் கிடைக்கும். இதில் ரூ. 1.67 கோடி செலவு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 17.95 லட்சம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.தி.மு.. வெளிநடப்பு: இந்த பட்ஜெட் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என கூறி, அதிமுக உறுப்பினர்கள் அதன் கொறடா கே.டி. அன்புலிங்கம் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

Last Updated on Tuesday, 20 April 2010 10:20
 

15 வேலம்பாளையம் நகராட்சி திட்ட அறிக்கை ரூ. 135 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 16.04.2010

15 வேலம்பாளையம் நகராட்சி திட்ட அறிக்கை ரூ. 135 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

திருப்பூர், ஏப். 15: 15 வேலம்பாளையம் நகராட்சி பகுதியில் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ரூ. 135 கோடியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள திட்டஅறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரை அடுத்த 15 வேலம்பாளையம் நகராட்சியில் பெருகிவரும் மக்கள்தொகை, அதற்கு தேவையான குடிநீர் வசதிகள், சாலை, சாக்கடை கால்வாய், திடக்கழிவு மே லாண்மை உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து, 2010 முதல் 2015க்குள் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து திட்டப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர் உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அப்பட்டியலில், ரூ. 23.30 கோடியில் குடிநீர் வசதி, ரூ. 47.49 கோடியில் புதைவடிகால், ரூ. 2.29 கோடியில் திடக்கழிவு மேலாண்மை, ரூ. 27.49 கோடியில் மழைநீர் வடிகால், ரூ. 22.35 கோடியில் சாலை வசதி;ரூ. 3.75 கோடியில் தெருவிளக்கு வசதி, ரூ. 1.60 கோடியில் குடிசைப் பகுதி மேம்பாடு, ரூ. 5.20 கோடியில் இதர உள்கட்ட மைப்பு வசதிகள், ரூ. 1.33 கோடியில் கட்டங்கள் குறித்து வரைபடம் மற்றும் புவியலி ல் அமைப்பு என மொத்தம் ரூ. 134.80 கோடியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கருத்துருவை மாநில அரசுக்கு அனுப்பி செயல்படுத்த, தமிழ்நாடு நகர் உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம், நகராட்சி நிர்வாக இயக்குநரகம் மற்றும் 15 வேலம்பாளையம் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் செய்து கொள்ளவும், திட்டப்பட்டியல் வியாழக்கிழமை நடந்த நகர்மன்ற ஒப்புதலுக்கு முன்வைக்கப்பட்டது.

இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலை குறித்து தமிழ்நாடு நகர் உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன ஆலோசகர் லட்சுமணமூர்த்தி விளக்கம் அளித்தார். அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் இத்திட்டப்பட்டியலுக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Last Updated on Friday, 16 April 2010 10:22
 

கொடைக்கானல் நகராட்சியில் 'பட்ஜெட்' தாக்கல் தாமதம்

Print PDF

தினமலர் 07.04.2010

கொடைக்கானல் நகராட்சியில் 'பட்ஜெட்' தாக்கல் தாமதம்

கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சியில் இந்த நிதி ஆண்டிற்கான 'பட்ஜெட்' தாக்கல் செய்வது குறித்து எவ்வித நடவடிக்கையையும் அதிகாரிகள் மேற் கொள்ளவில்லை என்று கவுன்சிலர்கள் புகார் கூறுகின்றனர்.

அரசு, உள்ளாட்சி அமைப்புகள் வரவு- செலவு திட்டங் களை ஒவ் வொரு ஆண்டும் மார்ச் மாதத் திற்குள் பட்ஜெட் தாக்கல் செய்து, ஏப்., முதல் அமல் படுத்தும். கொடைக்கானல் நகராட்சியில் 2010-11ம் ஆண்டிற்கான பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப் படவில்லை. நகராட்சி கமிஷனர் விஜயகுமார் கூறுகையில், ' வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலுக்கான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் சமர்பிக்கப்படும்' என்றார்.

Last Updated on Wednesday, 07 April 2010 06:11
 


Page 19 of 31