Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

மாநகராட்சி வணிக வளாக கடைகளுக்கு 15 சதவீதம் வாடகை உயர்வு

Print PDF
தினகரன்              17.08.2012

மாநகராட்சி வணிக வளாக கடைகளுக்கு 15 சதவீதம் வாடகை உயர்வு


கோவை,: மாநகராட்சி வணிக வளாக கடைகளுக்கு 15 சதவீதம் வாடகை உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி கவுன்சில் சிறப்பு கூட்டம் விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. மேயர் செ.ம.வேலுசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி முன்னிலைவகித்தார்.

கோவை மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, கவுன்சிலர்கள் சிங்கை பாலன் (அ.தி.மு.க), நந்தகுமார், மீனா (தி.மு.க), மகேஸ் (காங்.), மகாதேவன் (பா.ஜ.), ராஜேந்திரன் (ம.தி.மு.க), ராமமூர்த்தி (இ.கம்யூ), சாதிக் அலி (த.மு.மு.க.) ஆகியோர் பேசினர். இதன்பின்னர், மேயர் செ.ம.வேலுசாமி பேசியதாவது: தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி தேர்வுசெய்யப்பட்டு 25 லட்சம் ரூபாய் பரிசு தொகையுடன் விருதும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் கடந்த இரு வாரங்களுக்கு முன் அறிவித்தார். அறிவித்த இரண்டே வாரத்தில், தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் கோவை மாநகராட்சி சிறப்பான மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விருது ஒருவருடைய உழைப்புக்காக கிடைத்தது இல்லை. கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. நம்மை மேலும் செம்மைப்படுத்தவும், மாநகர மக்களுக்கு மேலும் பல பணிகளை திறம்பட செய்யவும் ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த விருது கிடைத்துள்ளது. கட்சி பாகுபாடின்றி, விறுப்பு, வெறுப்பின்றி, 100 வார்டுகளுக்கும் சமமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி பேசினார்.

மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் உள்ள வணிக வளாக கடைகளுக்கு மாதம்தோறும் வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த வாடகையை அதிகபட்சம் 15 சதவீதம் அதிகரிப்பது என்பது உள்பட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Friday, 17 August 2012 11:10
 

வாடகை கட்டணமாக மாநகராட்சி ரூ.7.3 கோடி வசூல் : 2013 ஏப்ரலுக்குள் ரூ.10 கோடிக்கு இலக்கு

Print PDF

தினமலர்     13.08.2012

வாடகை கட்டணமாக மாநகராட்சி ரூ.7.3 கோடி வசூல் : 2013 ஏப்ரலுக்குள் ரூ.10 கோடிக்கு இலக்கு

கோவை : மாநகராட்சி வணிக வளாக கடைகளின் வாடகைக் கட்டணம், பகுதிக்கு ஏற்ப உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகள் கடந்த கடைகளின் வாடகை 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. உரிமைக் கட்டணம் மற்றும் வாடகை கட்டணங்கள் வாயிலாக, ஆகஸ்டு மாதம் வரைமாநகராட்சியின் வரி வருவாய் ரூ.7.3 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு கூடுதலாக ரூ.2.5 கோடி வசூலித்து மாநகராட்சி சாதனை புரிந்துள்ளது.
கோவை மாநகராட்சியின் நிதிக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் 166 பழைய தொழில்களுக்கு, 13 ஆண்டுகளுக்குப் பின் உரிம கட்டணம் உயர்த்தப்பட்டது. 57 தொழில்களுக்கு புதிதாக உரிம கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் தற்போது பெறப்படும் வாடகை கட்டணங்களையும் உயர்த்த, இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகராட்சி விதிகளின்படி, ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்படும் வியாபாரங்களுக்கு, 10வது ஆண்டு முதல் 15 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் படி மொத்தம் 30 கடைகளின் வாடகை, 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

வாடகை மற்றும் உரிமக்கட்டணங்கள் வாயிலாக, இதுவரை ஆண்டுக்கு ரூ.4.8 கோடி வருவாய் கிடைத்து வந்தது. கட்டண வசூலை முடுக்கி விட்டதால், இந்த ஆண்டு ஆகஸ்டு வரை கூடுதலாக ரூ.2.5 கோடி வருவாய் சேர்ந்து, மொத்தம் ரூ.7.3 கோடி கிடைத்துள்ளது.
ஏப்ரல் மாதத்துக்குள் ரூ.10 கோடி கட்டணம் வசூலிக்க இலக்கிடப்பட்டுள்ளது. ஆனாலும் வாடகை மற்றும் உரிமைக் கட்டண வசூல் தொடர்பாக, 838 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வ.உ.சி.மைதான வாடகை உயர்வு

வ.உ.சி., மைதானத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான வாடகை, ஐந்தாண்டுகளுக்குப் பின் உயர்த்தப்பட்டுள்ளது.அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த ரூ.7500 லிருந்து ரூ.10 ஆயிரம் ஆகவும், இசைஇரவு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான வாடகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் ஆகவும், நான்கு சக்கர வாகன இலவச பரிசோதனை முகாம் நடத்துவதற்கான வாடகை ரூ.5,000லிருந்து ரூ.20 ஆயிரம் ஆகவும், இரு சக்கர வாகன முகாம் நடத்த, ரூ.5,000 லிருந்து ரூ.10 ஆயிரம் ஆகவும், மதம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கான கட்டணம் நாளொன்றுக்கு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் ஆகவும், தனியார் பொருட்காட்சிகளுக்கான கட்டணம் ரூ.12,500லிருந்து ரூ.20 ஆயிரம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளின் வாடகை, பார்க்கிங் கட்டணம் ஆகியவை பகுதிக்கு ஏற்ப உயர்த்தப்பட்டுள்ளது.நிதிக்குழுக் கூட்டத்தில், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் பிரபாகரன், துணை கமிஷனர் சிவராசு, துணை மேயர் லீலாவதி உண்ணி, உதவி நகர்நல அலுவலர் அருணா, மண்டல உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள், நிதிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
Last Updated on Tuesday, 14 August 2012 05:50
 

காயல்பட்டினம் நகராட்சிக்கு ரூ. 20 லட்சம் மத்திய அரசு மானியம்

Print PDF

தினமணி               10.08.2012

காயல்பட்டினம் நகராட்சிக்கு ரூ. 20 லட்சம் மத்திய அரசு மானியம்

ஆறுமுகனேரி, ஆக. 9: காயல்பட்டினம் நகராட்சிக்கு மத்திய அரசின் மானியம் ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டது

÷13-வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த ஐந்தாண்டு காலகட்டத்தில், சுமார் ரூ. 2371.22 கோடியை மத்திய அரசு, தமிழக உள்ளாட்சி மன்றங்களுக்கு மானியமாக தவணை முறையில் வழங்கவுள்ளது.

÷இத்தொகை இருவகையாக பிரிக்கப்பட்டு, பொது அடிப்படை மானியம் வகையில் ரூ.1550.97 கோடியும், பொது செயல்பாடு மானியம் வகையில் ரூ. 820.25 கோடியும் மத்திய அரசால் வழங்கப்படும்.

மத்திய அரசால் வழங்கப்படும் பொது அடிப்படை மானியம் 2010-11 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், இரு தவணையாக மாநில அரசால் உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி மூன்றாம் ஆண்டின் (2012-13) முதல் தவணை உள்ளாட்சி மன்றங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காயல்பட்டினம் நகராட்சிக்கு, ரூ. 20 லட்சத்து 79 ஆயிரத்து 291 வழங்கப்பட்டுள்ளது.

÷இந்த மத்திய அரசின் மானிய தொகை, உள்ளாட்சி மன்றங்களின் குடிநீர் திட்டங்கள் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டங்களில் உள்ளாட்சி மன்றங்களின் பங்களிப்பு தொகையை வழங்கவும், நிலுவையில் உள்ள மின்சார கட்டணங்களை கட்டவும், நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணங்களை கட்டவும் முன்னுரிமை கொடுத்து பயன்படுத்தப்பட வேண்டும்.÷உள்ளாட்சி மன்றங்களே நிறைவேற்றும் குடிநீர் திட்டங்கள் வகைக்கு இந்த தொகையை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


Page 7 of 37