Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

ரூ.250 கோடியை பெறுவதில் மதுரை மாநகராட்சி தாமதம்!

Print PDF

தினமலர்    09.08.2012

ரூ.250 கோடியை பெறுவதில் மதுரை மாநகராட்சி தாமதம்!

மதுரை:மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சமர்ப்பிக்கும் வளர்ச்சி திட்ட மதிப்பீடு ஆவணங்கள் திருப்தியளிக்காததால், அரசால் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதனால், அரசின் ரூ.250 கோடி நிதியை பெறுவதில் தாமதம் நிலவுகிறது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்மூலம், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால் திட்டங்கள் துவங்கின. மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசு 20 சதவீதம், மாநகராட்சி 30 சதவீதம் நிதி பங்களிப்பு வழங்க, ஒப்பந்தம் செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் நிதியில் தொடங்கிய திட்டம், மாநகராட்சி யின் பங்களிப்பு இல்லாமல், பாதியில் முடங்கியது. மத்திய, மாநில அரசுகள் வழங்கிய நிதி, பல வகையில் சூறையாடப்பட்டதால், திட்டம் 50 சதவீதம் கூட நிறைவேறவில்லை. இதனால், முக்கிய மூன்று திட்டங்களை இழந்து, மாநகராட்சி மக்கள் தவிக்கின்றனர்.

ஆட்சி மாற்றத்திற்கு பின், மாநகராட்சியில் முடங்கிய திட்டங்கள் நிறைவு பெற, முதல்வர் ஜெயலலிதா ரூ.250 கோடி ஒதுக்கினார். அதற்குரிய திட்ட மதிப்பீடு ஆவணங்களை சமர்ப்பிக்க, மாநகராட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அடுத்த நொடியில், அவசரமாக ஆவணங்கள் தயாராகின.

சென்னைக்கு கிளம்பிய அதிகாரிகளுக்கு, அதன் பின் நடந்தவை அனைத்தும் சோகம். மாநகராட்சி சமர்ப்பித்த ஆவணங்களில் திருப்தி இல்லாமல், அரசு திருப்பி அனுப்பியது. சென்னை-மதுரைக்கு அலைந்து, அதிகாரிகளே வெறுத்து போகும் அளவுக்கு, ஆவணங்களில் குறைகள் இருந்தன. "நாள் கணக்கில் இருந்து, வாரக்கணக்கில் மாறி, தற்போது, மாதக்கணக்கில்' என்ற நிலைக்கு வந்து விட்டது. தற்போது தான், நகராட்சி நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று, நிதி தொடர்பான ஆவணங்கள், நிதித்துறையின் பரிசீலனைக்கு சென்றுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"மாநகராட்சியில்    நிதி   இல்லை; கிடைகும் நிதியை பெறுவதிலும் அக்கறை காட்டவில்லை,' என்பதற்கு,    இது    ஒரு    உதாரணம்.   இனி     ஒருமுறை    ஆவணம்    திரும்பி    வராதபடி, பார்த்துக்கொண்டால், மாநகராட்சிக்கு நல்லது.

 

உடன்குடி டவுன் பஞ்சாயத்தில்205 தெருவிளக்குகள் அமைக முடிவு

Print PDF

தினமலர்   02.08.2012

உடன்குடி டவுன் பஞ்சாயத்தில்205 தெருவிளக்குகள் அமைக முடிவு

உடன்குடி : உடன்குடி டவுன் பஞ்.,பகுதிகளில் ரூ.25 லட்சம் செலவில் 205 தெருவிளக்குகள் அமைக்கப்படும் என டவுன் பஞ்.,தலைவர் அறிவித்துள்ளார்.உடன்குடி      டவுன்   பஞ்.,ல்  18 வார்டுகள்  உள்ளது. தொழில்   நகரமாக   வளர்ந்து   வரும் உடன்குடியில் பொதுமக்களின்  நலன்  கருதி  அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்கு அமைக்க நிதி  ஒதுக்க  வேண்டும்  என  தமிழக முதல்வருக்கு டவுன் பஞ்.,நிர்வாகம் சார்பில்  கோரிக்கை மனு அனுப்பினர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார்   பொது நிதியில் இருந்து  உடன்குடி  டவுன்  பஞ்., பகுதியில்  205  மின்சார  தெருவிளக்கு  அமைக்க  ரூ.25 நிதி ஒதுக்கியுள்ளார். தற்போது உடன்குடி டவுன் பஞ்.,18 வார்டுகளில் தெரு விளக்கு அமைக்கப்படும் இடங்களை தேர்வு செய்து தற்போது விளக்குகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

பணிகள் அனைத்தும்  முடிவடைந்தால்  உடன்குடி  டவுன் பகுதி  முழுவதும்  இரவிலும்  பகல் போல்  காட்சியளிக்கும்.  உடனடியாக  நிதி  வழங்க  உத்திரவு  பிறப்பித்த தமிழக  முதல்வருக்கு உடன்குடி டவுன் பகுதி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்  கொள்வதாக  உடன்குடி டவுன் பஞ்.,தலைவர் ஆயிஷாஉம்மாள் அறிவித்துள்ளார்.

 

உடன்குடியில் ரூ. 25 லட்சத்தில் தெரு மின்விளக்குகள்: பேரூராட்சித் தலைவி

Print PDF

தினமணி                30.07.2012

உடன்குடியில் ரூ. 25 லட்சத்தில் தெரு மின்விளக்குகள்: பேரூராட்சித் தலைவி

உடன்குடி,ஜூலை 29:   உடன்குடி நகரப் பகுதியில் ரூ. 25 லட்சத்தில் 205 தெரு விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக பேரூராட்சித் தலைவி ஆயிஷா உம்மாள் தெரிவித்தார்.

 உடன்குடி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் புதியதாக தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டுமென பேரூராட்சித் தலைவி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்டஆட்சியர் ஆஷிஷ்குமார் பொதுநிதியில் இருந்து ரூ. 25 லட்சத்தில் 205 தெரு விளக்குகள் அமைக்க அனுமதி அளித்துள்ளதாகவும், உடன்குடி பகுதியில் 18 வார்டு பகுதிகளிலும் உள்ள முக்கியமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் பேரூராட்சித் தலைவி ஆயிஷா உம்மாள் தெரிவித்தார்.
 


Page 8 of 37