Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

உடன்குடி பேரூராட்சிக்கு ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 30.11.2010

உடன்குடி பேரூராட்சிக்கு ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு

உடன்குடி, நவ. 30: உடன்குடி பேரூராட்சி தலைவர் சாகுல்ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உடன்குடி பேரூராட்சியில் குடிநீர் மற்றும் சாலைப்பணிகள் மேற்கொள்வதற்காக அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ரூ. 8 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த நிதி மூலம் புதுமனை பகுதியில் சீரான குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டவும், மீதமுள்ள ரூ.3 லட்சத்துடன் பொதுநிதியும் சேர்த்து ரூ. 3.75 லட்சத்தில் கிறிஸ்தியாநகரம் வடக்கு தெருவில் சிமென்ட் சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு மாநகராட்சி ரூ. 9.40 லட்சம் நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர்             23.11.2010

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு மாநகராட்சி ரூ. 9.40 லட்சம் நிதி ஒதுக்கீடு

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத ஸ்வாமி கோவிலில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி 9.40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.திருச்சி ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் ஆறு முதல் 27ம் தேதி வரை 22 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. இதில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் வருவர். அங்கு சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள 200 தற்காலிக பணியாளர்களை நியமனம், பிளிச்சீங் பவுடர், நீர்த்த சுண்ணாம்பு.பொது சுகாதார தளவாடங்கள், நூவின் ஈ கொல்லி மருந்து, பினாயில், மின்விளக்கு, சிறுநீர் கழிப்பிட வசதி, மருத்துவ கொட்டகை அமைத்தல் ஆகிய செலவினங்களுக்கு9.40 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த தொகைக்கு அனுமதி வேண்டி நேற்று காலை நடந்த மாநகராட்சி அவசரக்கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எவ்வித விவாதமும் இல்லாமல் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

வீடுகளுக்கு வரி விதிக்காததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு

Print PDF

தினமலர்                20.11.2010

வீடுகளுக்கு வரி விதிக்காததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., தன்யா நகரில் வீடுகளுக்கு வரி விதிக்காததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவுன்சில் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஸ்ரீவி., நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் சுந்தரி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் அழகர்சாமி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: சக்கையா: ஐந்து நாளுக்கொருமுறை தண்ணீர் வந்தும் 6, 7வது வார்டுகளில் குடிநீர் சரிவர சப்ளை இல்லை. துணை தலைவர்: கம்மாபட்டியில் ஒரு பகுதியில் கடந்த நான்காண்டுகளாக குடிநீர் வரவில்லை. பிரேமா: தெற்கு ரதவீதியில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாகிறது. வேதவள்ளி ராஜம்: துப்புரவு பணி சரிவர நடப்பதில்லை. மகேஷ்வரன்: தன்யா நகர் பகுதியில் 120க்கும் மேலாக புது வீடுகள் வந்தும் இது வரை பத்து வீடுகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கமிஷனர் முத்துக்கண்ணு: டிச.31க்குள் அனைத்து வீடுகளுக்கும் வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடற்கரைசாமி: 20 சதவீதம் வீடுகளில் மின் மோட்டர் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

 


Page 12 of 37