Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

48.74 கி.மீ., ரோடுகளை சீரமைக்க ஒதுக்கீடு ரூ. 21.77 கோடி மாநகராட்சியின் 41 வார்டுகள் புறக்கணிப்பு

Print PDF

தினமலர்    18.11.2017

48.74 கி.மீ., ரோடுகளை சீரமைக்க ஒதுக்கீடு ரூ. 21.77 கோடி மாநகராட்சியின் 41 வார்டுகள் புறக்கணிப்பு  

மதுரை, மதுரை நகரில் பெரும்பாலான ரோடுகள் சேதமடைந்த நிலையில் 48.74 கி.மீ., ரோடுகளை மட்டும் சீரமைக்க, நகர்புற சாலைகள்மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 21.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நகரில் 1,500 கி.மீ.,க்கு சாலைகளை மாநகராட்சி பராமரிக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் 90 கி.மீ.,க்கு ரோடுகள் அவசர கதியாக சீரமைக்கப்பட்டன.பெரும்பாலான ரோடுகள் அனைத்தும் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை.இன்று குண்டும்,குழியுமாக உள்ளன. தொடர் மழையால் ரோடுகளில் மெகா பள்ளங்கள் உருவாகின.ரோடு சீரமைப்புக்குஉள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு 'கட்டிங்' கொடுக்கும் நடைமுறை இருந்ததால் ரோடு பராமரிப்புக்கான நிதி 20முதல் 35 சதவீதம் வரைவீணடிக்கப்பட்டது.தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில், ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள 21 கோடி ரூபாயில் தரமான தார் மற்றும் பேவர்பிளாக் ரோடுகள்அமைக்கப்பட உள்ளது.

இதற்காக 5 - 8, 10 - 22, 27, 33, 37- 42, 44 - 47, 75 -77, 80, 81, 83 - 85, 87 - 89, 90-93, 100 ஆகிய வார்டுகளில்குறிப்பிட்ட ரோடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ன.இதன்படி 59 வார்டுகளில் இப்பணி நடைபெறும். மீதமுள்ள41 வார்டுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நகரில் மிகவும் சேதமடைந்துள்ள ரோடுகள்அனைத்தும் தற்போதுமாநகராட்சியின் பொது நிதியில்'ஒட்டுவேலை' பார்க்கப்பட்டு வருகிறது.நகர்புற சாலைகள்மேம்பாட்டு திட்டத்தில் சீரமைக்கப்பட உள்ள ரோடுகள் மிகவும் பாழ் பட்டுள்ளன.அதனால் இவற்றிற்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளன. இந்த ரோடுகளுக்கான டெண்டர் டிச., 12 ல் நடைபெற உள்ளது. மழைக்காலம் முடிந்த பின் ஜன., முதல்ரோடுகள் அமைக்கப்படும்.மற்ற ரோடுகளை மேம்படுத்துவதற்கு மேலும்சில திட்டங்களில்நிதி ஒதுக்கீடுபெற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது,என்றனர்.
 

பெரியகுளம் வழியாக பேரூர்-கோவைபுதூர் இணைப்பு சாலை ரூ.35 லட்சத்தில் சீரமைப்பு பணி துவக்கம்

Print PDF
தினகரன்              13.02.2014

பெரியகுளம் வழியாக பேரூர்-கோவைபுதூர் இணைப்பு சாலை ரூ.35 லட்சத்தில் சீரமைப்பு பணி துவக்கம்

தொண்டாமுத்தூர், : கோவை அருகே பேரூர் பாரதிபுரத்தில் இருந்து புட்டுவிக்கி வழியாக கோவைபுதூர் மற்றும் உக்க டம் பகுதிகளை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனங்கள் செ ல்ல முடியாமல் இருந்தது. இதனால் கோவைபுதூர் பகுதியில் இருந்து பேரூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 4 கி.மீ தூரம் சுண்டக்காமுத்தூரை சுற்றி செல்ல வேண்டி இருந்தது. மேலும் இந்த ரோட்டில் இயக்கப்பட்டு வந்த மினி பஸ் நிர்வாகத்தினர் போக்குவரத்தை நிறுத்தி விட்டனர்.

இதுகுறித்து கவுன்சிலர்கள் பேரூர் மயில், புட்டுவிக்கி மணியன் ஆகியோர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து நபார்டு வங்கி உதவி திட்டத்தில் பேரூர்-கோவைபுதூர் மற்றும் உக்கடம் இணைப்பு சாலை ரூ.35 லட்சத்தில் மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது.

2 கி.மீ தூரத்திற்கு 3.75 மீட்டர் அகலத்தில் பேரூர் பெரி ய குளத்தின் கரையில் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் துவங்கியது. பணிகளை பேரூராட்சி தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் சசிகலா, துணைத்தலைவர் செந்தில்குமார், பேரூராட்சி பொ றியாளர் ராமசாமி மற்றும் கவுன்சிலர்கள் பார்வையி ட்டு விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
 

எடப்பாடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

Print PDF

தினமணி             13.02.2014

எடப்பாடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

எடப்பாடி நகராட்சிக்குள்பட்ட கவுண்டம்பட்டியில் புதிதாக சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணியை நகர்மன்றத் தலைவர் டி.கதிரேசன் தொடக்கி வைத்தார் .

கவுண்டம்பட்டி பகுதியில் சிமென்ட் சாலைகள் அமைக்க ரூ. 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை நகர்மன்றத் தலைவர் டி.கதிரேசன் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

இதில், துணைத் தலைவர் சி.ராமன், நகரமன்ற உறுப்பினர்கள் அழகம்பெருமாள், தனம், செல்வம், சீனிவாசன், சாந்தி நாகராஜன், அரசு வழக்குரைஞர் செந்தில்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 167