Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சாலை மேம்படுத்தும் பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

Print PDF

தினமலர்           21.11.2013

சாலை மேம்படுத்தும் பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

புதுச்சேரி:பெரம்பை ரோட்டில் இருந்து அரும்பார்த்தபுரம் வரையிலான பிரதான சாலையை மேம்படுத்தும் பணியை அமைச்சர் பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார்.

உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பிச்சைவீரன்பட்டு பெரம்பை ரோட்டில் இருந்து அரும்பார்த்தபுரம் வரையிலான பிரதான சாலையை மேம்படுத்த, நகர மற்றும் கிராம அமைப்புத்துறை நிதியிலிருந்து 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகர் உட்புற வீதிகளில் தார் சாலை அமைக்க 43 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகள் துவக்குவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, பணிகளை துவக்கி வைத்தார்.

உழவர்கரை நகராட்சி ஆணையர் அழகிரி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், செயற்பொறியாளர் குணசேகரன், உதவிப்பொறியாளர் கலியவரதன், இளநிலை பொறியாளர் சிவக்குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் நகர் தலைவர் குணசேகரன், துணைத் தலைவர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பன்னிமடை நஞ்சுண்டாபுரம்; ரூ.2¼ கோடி செலவில் தார்ச்சாலைகள் அமைத்தல்

Print PDF

தினத்தந்தி           20.11.2013 

பன்னிமடை நஞ்சுண்டாபுரம்; ரூ.2¼ கோடி செலவில் தார்ச்சாலைகள் அமைத்தல்

கோவை அருகே பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் ஊராட்சி பகுதிகளில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.2 கோடியே 18 லட்சம் செலவில் தார் சாலைகள் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் நடைபெற்றது. வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., பூமி பூஜைக்கு தலைமை தாங்கி, தார்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஊராட்சி தலைவர்கள் சரவணக்குமார்(பன்னிமடை), வி.கே.வி.சுந்தரராஜ்(நஞ்சுண்டாபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் விஜயன் வரவேற்று பேசினார். பன்னிமடை ஊராட்சி பகுதிகளில் இருந்து ராமநாதபுரம் வரை ரூ.1 கோடியே 73 லட்சத்திலும், நஞ்சுண்டாபுரம் பகுதியிகளில் தடாகம் சாலையில் இருந்து ஊராட்சி அலுவலகம் வரை ரூ.45 லட்சம் செலவிலும் தார்ச்சாலை அமைக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதிமணி பாலகிருஷ்ணன், குணசேகரன், டியூகாஸ் துணைதலைவர் செல்வராஜன், கவுன்சிலர்கள் செல்வராஜ், மகேஸ்வரன், சுமதி ஆனந்தன், சோமசுந்தரம், நாகராஜ், மருதையன், மற்றும் சின்னத்தம்மகவுடர், ஜெயபால், கூட்டுறவு சங்க துணை தலைவர் துரைசாமி, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

களக்காட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்

Print PDF

தினகரன்          18.11.2013 

களக்காட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்

களக்காடு, : களக்காடு பேரூராட்சி 13வது வார்டில் எம்.பி. நிதி, பேரூராட்சி நிதி மூலம் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. இதன் துவக்க விழா நடந்தது.

பேரூரட்சி தலைவர் ராஜன் பணிகளை துவங்கி வைத்தார். நிர்வாக அதிகாரி முத்துக்குமார், கவுன்சிலர்கள் அருள்பிரகாஷ், முத்தப்பா, உமாநாத், சவுந்தரபாண்டியன் மற்றும் சர்தார் அலிகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 15 of 167