Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

கோவையில் 11 கி.மீ.,க்கு சர்வதேச தரத்தில் ரோடு: திட்ட அறிக்கை தயாரிக்க அழைப்பு

Print PDF

தினமலர்            30.10.2013

கோவையில் 11 கி.மீ.,க்கு சர்வதேச தரத்தில் ரோடு: திட்ட அறிக்கை தயாரிக்க அழைப்பு

கோவை : கோவையில் எட்டு ரோடுகளில், 11 கி.மீ.,க்கு, சர்வதேச தரத்தில் ரோடு அமைக்க மாநகராட்சி முடிவு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கட்டட கலை வல்லுனர்களுக்கு அழைப்பு கொடுத்துள்ளது.

கோவை மாநகராட்சியில், சர்வதேச தரத்தில் ரோடு அமைக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் பனீந்தர் ரெட்டி, அறிவுறுத்தியுள்ளார். மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில், கோவையில் நேர்கோடாக உள்ள ரோடுகளில், குறிப்பிட்ட தொலைவுக்கு சர்வதேச தரத்தில் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டது.

இதையடுத்து, வார்டு எண் 50ல் ராஜூ ரோடு; ஆர்.எஸ்.புரம் வார்டு எண் 23, 24க்கு உட்பட்ட திவான்பகதூர் ரோடு; வார்டு எண் 51ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோடு; வார்டு எண் 52, 53க்கு உட்பட்ட சின்னசாமி ரோடு; வார்டு எண் 22ல் அழகேசன் ரோடு; வார்டு எண் 71ல் காமராஜர் ரோடு; வார்டு எண் 55ல் பாலசுந்தரம் ரோடு; வார்டு எண் 53ல் வி.கே.கே.மேனன் ரோடு ஆகிய எட்டு ரோடுகளில், மொத்தம் 11 கி.மீ.,க்கு சர்வதேச தரத்தில் ரோடு அமைக்க மாமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதான சாலைகளுக்கு, சர்வதேச தரத்துடன் மாதிரி ரோடுகள் அமைக்க கள ஆய்வு செய்து, வடிவமைப்பு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கட்டட கலை வல்லுனர்களிடம் இருந்து, விருப்பக் கேட்பு அறிக்கை பெற திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்துடன் அமைக்கப்படும் ரோடுகளில், கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், சைக்கிள், பாதசாரிகளுக்கு தனித்தனியாக வழித்தடம் ஒதுக்கப்படும். சென்டர் மீடியன், ரோட்டோரத்தில் சமையல் காஸ், மின் கேபிள், தொலைத்தொடர்புக்கான கேபிள், குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்படும்.

இந்த வசதிகளுடன் ஒரு கி.மீ.,க்கு சர்வதேச தரத்துடன் ரோடு அமைக்க 15 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவையில் 11 கி.மீ.,க்கு முதற்கட்டமாக சர்வதேச தரத்தில் ரோடு அமைக்கவும், இதற்கான நிதியை அரசிடம் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

வெங்கம்பூர் பேரூராட்சியில் ரூ.50 லட்சம் செலவில் புதிய தார் சாலை

Print PDF

தினத்தந்தி          30.10.2013

வெங்கம்பூர் பேரூராட்சியில் ரூ.50 லட்சம் செலவில் புதிய தார் சாலை

வெங்கம்பூர் பேரூராட்சிக்கு உள்பட்ட வெற்றிகோனார்பாளையத்தில் வடிகாலுடன் கூடிய தார்சாலை அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவுக்கு மொடக்குறிச்சி ஆர்.என்.கிட்டுசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். வெங்கம்பூர் பேரூராட்சி தலைவர் சூர்யாசிவக்குமார், செயல் அதிகாரி சின்னதுரை, ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், பேரூர் செயலாளர் நல்லசாமி, கவுன்சிலர்கள் ஈஸ்வரிகணபதி, வட்டார தலைவர் கோபால் உள்பட பலர் கலந்துகொண்டார்கள். முடிவில் கவுன்சிலர் சிவகாமி நன்றி கூறினார்.

 

சத்தி ரோடு விரிவாக்கம் மாநகராட்சி புதிய திட்டம் தனியார் இடத்தை கையகப்படுத்த முடிவு

Print PDF

தினமலர்           21.10.2013

சத்தி ரோடு விரிவாக்கம் மாநகராட்சி புதிய திட்டம் தனியார் இடத்தை கையகப்படுத்த முடிவு

கோவை :கோவையில் விபத்துகள் அதிகம் நடக்கும் சத்தி ரோட்டை, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விரிவு படுத்தாத நிலையில், திட்டப்பணிகளுக்காக மாநகராட்சி நிர்வாகமே விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. கோவை சத்தி ரோட்டில், காந்திபுரம் - ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வரையிலும் ரோடு அகலமாக இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளது.

டெக்ஸ்டூல் பாலம் முதல் மணியகாரம்பாளையம் வரையிலும் பாலமும், ரோடும் அகலமில்லாததால் உயிரிழப்பு விபத்துகள் ஏற்படுகிறது. "டெக்ஸ்டூல் பாலத்தை அகலப்படுத்த வேண்டும்; சத்தி ரோட்டை விரிவுபடுத்த வேண்டும்' என, மேயர், எம்.எல்.ஏ., - எம்.பி., ஆகியோர் பலமுறை கோரிக்கை வைத்தும், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், டெக்ஸ்டூல் பாலத்தை விரிவுபடுத்தும் வகையில், அதன் அருகிலே மற்றொரு பாலம் கட்டுவதற்கு முதல்வர் 20 கோடி ரூபாய் அறிவித்தார். ஆனால், மேம்பால பணிகள் இன்னும் துவங்கவில்லை. ரோட்டை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

டெக்ஸ்டூல் பாலம் முதல் மணியகாரம்பாளையம் ரோடு வரையிலும் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என, மாமன்றத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள, சத்தி ரோட்டை சொந்த பொறுப்பில் விரிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சத்தி ரோட்டில் விரிவுபடுத்த வேண்டிய பகுதிகளை மாநகராட்சி சர்வே மற்றும் நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். மேயர் வேலுச்சாமி கூறுகையில், ""டெக்ஸ்டூல் பாலம் கட்டுவதற்கு முன்பாக ரோடு அகலமாக இருந்தது.

தற்போதைய பாலத்தை இருவழிப்பாதையாக மட்டுமே பயன்படுத்த முடிகிறது. அதே இடத்தில் இன்னொரு இருவழிப்பாதை பாலம் கட்ட, முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார். சத்திரோட்டில் கட்டப்படும் மழைநீர் வடிகாலை, கணபதி பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ஓடையில் சேர்க்க வேண்டும். பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிக்கு, சத்திரோட்டை அகலப்படுத்த வேண்டும். ரோடு அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை முன்வராத நிலையில், மாநகராட்சி நிர்வாகம் மூலம் இப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சத்தி ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தனியார் நிலத்தை கையகப்படுத்தவும், புறம்போக்கு நிலங்களை எடுக்கவும் சர்வே நடக்கிறது. நில உரிமையாளர்களுக்கு மாநகராட்சி மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படும்,'' என்றார்.

 


Page 16 of 167