Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

பிளாஸ்டிக் கழிவுகளால் சாலை அமைப்பு

Print PDF

தினமலர்             09.10.2013

பிளாஸ்டிக் கழிவுகளால் சாலை அமைப்பு

கிருமாம்பாக்கம்:தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை, பயன்படுத்தி பிளாஸ்டிக் தார் சாலை அமைக்கப்பட்டது.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், மறு சுழற்சி முறையில் அழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றை முழுமையாக மறு சுழற்சி செய்வதில்லை. இதனால், ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி, தார் சாலை அமைக்கும் திட்டம் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார்சாலை அமைக்கும் திட்டம் இதுவரை பெரிய அளவில் செயல்படுத்தப்படவில்லை.

புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு 30 டன் பிளாஸ்டிக் குப்பைகள் வெளியேற்றப்படுகிறது. அதில், ஒரு சில சதவீதம் மட்டுமே மறு சுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ள கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தபடாமல், எரிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது.

இந்நிலையில், காட்டுக்குப்பத்தில் உள்ள பேக்கேஜிங் இந்தியா என்ற தனியார் நிறுவனத்தில், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் வாசுதேவன் வழிகாட்டுதலின் படி, 200 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி, நிறுவன வளாகத்தினுள் 200 மீட்டருக்கு பிளாஸ்டிக் தார் சாலை அமைக்கப்பட்டது.

இது குறித்து சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் கூறுகையில்"" தார் சாலை 3 முதல் 5 ஆண்டுகள் மட்டுமே தாக்கு பிடிக்கும். தார் சாலையில் மழை நீர் தேங்கினால் ஜல்லிகளுக்கும், தாருக்கும் இடையிலான பிணைப்பு குறைந்து, தார் சாலை விரைவில் குண்டும் குழியுமாக மாறிவிடும்.

ஆனால், பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி போடப்படும் தார் சாலைகள் குறைந்தது 10 ஆண்டுகள் வரை நீடிக்கும். இதனால், அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளும் அப்புறப்படுத்தப்படும். புதுச்சேரியில், தனியார் தொழிற்சாலையில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார் சாலை அமைப்பது இதுவே முதல்முறை'' என்றார். பொது மேலாளர் ரவிசந்திரன், மேலாளர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். 

 

சி.பி.டி., வளாக சாலை பணி 3.4 கோடி ரூபாயில் துவக்கம்

Print PDF

தினமலர்             08.10.2013

சி.பி.டி., வளாக சாலை பணி 3.4 கோடி ரூபாயில் துவக்கம்

தர­மணி : தர­மணி, சி.பி.டி., வளாக சாலை, பல ஆண்­டு­க­ளாக சீர­மைக்­கப்­ப­டாமல் இருந்­தது குறித்து. இந்த நிலையில், 3.4 கோடி ரூபாய் செலவில், சாலை­களை சீர­மைக்கும் பணி நேற்று துவங்­கி­யது.

தர­மணி, கானகம், களிக்­குன்றம், பள்­ளிப்­பட்டு பகு­தி­வா­சிகள் பயன்­ப­டுத்தும் சி.பி.டி., வளாக சாலை, போக்­கு­வ­ரத்­திற்கு லாயக்­கற்று காணப்­பட்­டது. இது குறித்து, அந்த பகு­தி­வா­சிகள், சம்­பந்­தப்­பட்ட துறை அதி­கா­ரி­க­ளிடம் பல முறை புகார் கொடுத்தும், நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

இந்த நிலையில், ஜனா­தி­பதி வரு­கை­யை­யொட்டி, கடந்த மாதம், சி.பி.டி., வளா­கத்தின், மூன்­றா­வது சாலை மட்டும் சீர­மைக்­கப்­பட்­டது. ஆனால், பிர­தான சாலை சீர­மைக்­கப்­ப­டா­ததால், அந்த பகு­தி­வா­சிகள் அதி­ருப்தி அடைந்­தனர். இதை அடுத்து, மாந­க­ராட்சி சார்பில், திட்ட மதிப்­பீடு தயா­ரிக்­கப்­பட்டு, ஒப்­பந்தம் கோரப்­பட்­டது.

இந்த நிலையில், சி.பி.டி., நகரில் உள்ள சாலைகள் அனைத்தும், எட்டு பகு­தி­க­ளாக பிரிக்­கப்­பட்டு, 3.4 கோடி ரூபாய் செலவில் சீர­மைக்கும் பணிகள் நேற்று துவங்­கின.

தங்­களின் பல ஆண்­டு­கால கோரிக்கை, தின­மலர் நாளிதழ் செய்தி மூலம் நிறை­வே­றிய மகிழ்ச்­சியில், கானகம் வைகை காலனி நலச்­சங்­கத்­தினர் மற்றும் அந்த பகு­தியை சேர்ந்­த­வர்கள், தின­மலர் நாளி­த­ழுக்கு நன்றி தெரி­வித்து, பதா­கைகள் வைத்­துள்­ளனர்.

 

நவீன கான்கிரீட் கலவை மூலம் மாதிரி சாலை அமைப்பு

Print PDF

தினமணி             08.10.2013

நவீன கான்கிரீட் கலவை மூலம் மாதிரி சாலை அமைப்பு

சாலை அமைத்து 24 மணி நேரத்தில் போக்குவரத்தை அனுமதிக்கும் வகையிலான மாதிரி கான்கிரீட் சாலைப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை சி.ஐ.டி நகர் ரவுண்டானாவில் இருந்து அண்ணா சாலையை வரையிலான லிங்க் சாலையில், சாலை அமைத்து 24 மணிநேரத்தில் போக்குவரத்தை அனுமதிக்கும் வகையில் எம்95 கான்கிரீட் மாதிரி சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இதனை மேயர் சைதை துரைசாமி மற்றும் ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மாநகராட்சியில் 170 கி.மீ. நீளத்துக்கு ரூ. 175 கோடி மதிப்பில் 1,120 கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலைகள் அமைக்கப்பட்டு 72 மணி நேரத்தில் போக்குவரத்தை அனுமதிக்கும் வகையிலான எம்40 வகை கான்கிரீட் கலவை இதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

இப்போது எம்95 வகை கான்கிரீட் கலவை மூலம் மாதிரி சாலை அமைக்கப்படுகிறது. இந்த மாதிரி சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சியில் துணை மேயர் பா. பெஞ்சமின், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.பி. கலைராஜன், ஜி. செந்தமிழன், இணை ஆணையர் (பணிகள்) விஜய் பிங்ளே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 18 of 167