Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சேலம் அம்மாபேட்டை பகுதிகளில் ரூ.2½ கோடி மதிப்பில் பிளாஸ்டிக் தார்சாலைகள் பணிகளை மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி           04.10.2013

சேலம் அம்மாபேட்டை பகுதிகளில் ரூ.2½ கோடி மதிப்பில் பிளாஸ்டிக் தார்சாலைகள் பணிகளை மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்

சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சி வாசகசாலை 3–வது குறுக்குத்தெருவில் நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் அசோகன் தலைமை தாங்கினார்.

துணை மேயர் நடேசன் முன்னிலை வகித்தார். பிளாஸ்டிக் தார்சாலை அமைக்கும் பணியினை மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் கூறுகையில், ‘சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் தார் சாலைகள் அமைக்க ரூ.2 கோடியே 40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் சேலம் மாநகராட்சியின் 4 மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் அண்மையில் பெய்த மழையின் போது பழதடைந்துள்ள சாலைகளை புதுப்பிக்கவும், பிளாஸ்டிக் தார்சாலை அமைக்கவும், கழிவுநீர் பாதை அமைக்கவும், சிறிய பாலங்கள் அமைக்கவும் தமிழக அரசு ரூ.21 கோடியே 21 லட்சம் ஒதுக்கீடு செய்து உள்ளது. விரைவில் இந்த பணிகள் தொடங்கப்படும்‘ என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன், மண்டலக்குழுத் தலைவர் ஜெயபிரகாஷ் செயற்பொறியாளர் காமராஜ், உதவி ஆணையாளர் புஷ்பலதா, உதவி செயற்பொறியாளர் எம்.ஆர்.சிபிசக்ரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ரூ.2.40 கோடியில் தார்சாலை திட்டப்பணி துவக்கம்

Print PDF

தினமலர்             04.10.2013 

ரூ.2.40 கோடியில் தார்சாலை திட்டப்பணி துவக்கம்

சேலம்: சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட, வார்டு, 11ல் உள்ள வாசக சாலை குறுக்குத்தெருவில், தார்சாலை அமைக்கும் பணியை, மேயர் சவுண்டப்பன் துவக்கி வைத்தார்.

நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் மூலம், வார்டு, 9ல், செங்கல் அணை சாலை, 30 லட்சம் ரூபாயிலும், வார்டு 10ல், 28 லட்சம் ரூபாய் மதிப்பிலும், வாசக சாலை தெருவில், 18.50 லட்சம் ரூபாயிலும், வார்டு 33ல், லட்சுமி நகரில், 29 லட்சம் ரூபாயிலும், நாராயணநகர், சீனிவாச நகர், கடம்பூர் முனியப்பன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களிலும், மொத்தம் 10 சாலைகள், 3.91 கி.மீ., தூரத்துக்கு, 2.40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.

கமிஷனர் அசோகன், துணை மேயர் நடேசன், மண்டல தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

ரூ.2,350 கோடியில் 18,264 உட்புற சாலைகள் சீரமைப்பு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்டம்

Print PDF

தினமலர்            01.10.2013  

ரூ.2,350 கோடியில் 18,264 உட்புற சாலைகள் சீரமைப்பு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்டம்

சென்னை:மாநகராட்சி வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், இந்த நிதியாண்டில், 2,350 கோடி ரூபாய் செலவில், 18 ஆயிரத்து, 264 உட்புற சாலைகள் புதுப்பிக்கப்பட உள்ளன. இந்த பணிகள், அடுத்த ஆண்டு மே மாதம் முடியும், என, மாநகராட்சி கூட்டத்தில், மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில், அவர் வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை மாநகராட்சியில் உள்ள, மொத்த உட்புற சாலைகள், 30 ஆயிரத்து, 560. தற்போது, நல்ல நிலையில் உள்ள சாலைகள், 12 ஆயிரத்து, 296. சிதிலமடைந்த சாலைகள், 18 ஆயிரத்து 264.இந்த சிதிலமான சாலைகள், இந்த நிதியாண்டில், மெகா சிட்டி 1 சேமிப்பு நிதி, மெகா சிட்டி 2, மெகா சிட்டி 3, மாநகராட்சி மூலதன நிதி ஆகியவை மூலம்சீரமைக்கப்பட உள்ளன.முதல் கட்டமாக, 8,146 சாலைகள், 1,150 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும். இந்த பணிகள், வரும் ஜனவரிக்குள் முடியும்.மீதமுள்ள, 10 ஆயிரத்து, 118 சாலைகள், 1,200 கோடி ரூபாய் செலவில் சீரமைக்க, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மூலம் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.டிசம்பர் இறுதிக்குள் இதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு, பணி ஆணை வழங்கப்படும். அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் பணிகள் முடியும். இதன் மூலம் சென்னையில் ஓட்டையான சாலைகள் எங்கும் இருக்காது.இவ்வாறு மேயர் அறிவித்தார்.

 


Page 19 of 167