Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

தெற்குப்பாளையத்தில் தார்ச் சாலை அமைக்க பூமிபூஜை

Print PDF

தினமணி             24.09.2013

தெற்குப்பாளையத்தில் தார்ச் சாலை அமைக்க பூமிபூஜை

பெரியநாயக்கன்பாளையம் அருகே, கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட தெற்குப்பாளையத்தில் புதிய தார்ச் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள 13-ஆவது வார்டுக்குட்பட்ட காந்தி நகரில் பேரூராட்சி பொது நிதியின் கீழ் ரூ.6.20 லட்சம் செலவில் புதிய தார்ச் சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை நடைபெற்ற தார்ச் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் அ.அறிவரசு தலைமை வகித்து பணியைத் தொடங்கி வைத்தார். பேரூராட்சித் துணைத் தலைவர் ஆர்.செல்வராஜன், வார்டு கவுன்சிலர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஊர்க்கவுண்டர் கிட்டுசாமி, கவுன்சிலர்கள் ஜெயராஜ், கவிதா துரைராஜ், முருகானந்தம், காந்தி நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், மகளிர் குழு நிர்வாகிகள், பேரூராட்சி பொறியியல் உதவியாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

நீலாங்கரையில் ரூ. 8.66 கோடியில் சாலைப் பணிகள் தொடக்கம்

Print PDF

தினமணி             24.09.2013

நீலாங்கரையில் ரூ. 8.66 கோடியில் சாலைப் பணிகள் தொடக்கம்

சென்னை நீலாங்கரையில் ரூ. 8.66 கோடி மதிப்பில் 118 சாலைகள் அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீலாங்கரை (வார்டு 192) பகுதியில் ரூ. 8.66 கோடியில் 118 சாலைகள் அமைக்கும் பணிகளை தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மேலும் நீலாங்கரையில் ரூ. 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தொழிலாளர் குடியிருப்பு பூங்காவையும் அவர்கள் திறந்து வைத்தனர்.

பின்னர் தரமணி மத்திய பல்தொழில்நுட்ப வளாகத்தில் ரூ. 97.60 லட்சம் மதிப்பில் 600 மீட்டர் நீளமுள்ள 2 சாலைகளை சீரமைக்கும் பணியையும் மேயர் தொடங்கி வைத்தார் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரூ.3.4 கோடியில் சி.பி.டி.,வளாக சாலை பணி துவக்கம் மாந­க­ராட்சி நட­வ­டிக்கை

Print PDF

தினமலர்             24.09.2013

ரூ.3.4 கோடியில் சி.பி.டி.,வளாக சாலை பணி துவக்கம் மாந­க­ராட்சி நட­வ­டிக்கை

தர­மணி: தர­மணி சி.பி.டி.,வளா­கத்தில் உள்ள சாலை­களை சீர­மைப்­ப­தற்­காக, நேற்று பூமி பூஜை நடந்­தது.

தர­மணி, கானகம், களிக்­குன்றம், பள்­ளிப்­பட்டு ஆகிய பகு­தி­களை சேர்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் பயன்­ப­டுத்தும் சி.பி.டி., வளாக நான்­கா­வது சாலை போக்­கு­வ­ரத்­திற்கு லாயக்­கற்று காணப்­பட்­டது.

இது­கு­றித்து பகு­தி­ வா­சிகள் சம்­பந்­தப்­பட்ட துறை அதி­கா­ரி­க­ளிடம் பல­முறை புகார் கொடுத்தும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை.

கடந்த மாதம் ஜனா­தி­பதி வரு­கையை முன்­னிட்டு, சி.பி.டி.,வளாக மூன்­றா­வது சாலை மட்டும் அமைக்­கப்­பட்­டது. பொது­மக்கள் அதிகம் பயன்­ப­டுத்தும் நான்­கா­வது சாலை கண்­டு­கொள்­ளாமல் விடப்­பட்­டதால், பகு­தி­வா­சிகள் அதி­ருப்­தி­ய­டைந்­தனர்.

இது­கு­றித்து ‘தின­மலர்’ நாளிதழ் படத்­துடன் கூடிய விரி­வான செய்­தியை வெளி­யிட்­டது. செய்தி வெளி­யான அன்று மாந­க­ராட்சி கமி­ஷனர் விக்­ரம்­கபூர் சம்­பவ இடத்­திற்கு சென்று ஆய்வு மேற்­கொண்டார்.

அப்­போது, அவர் கூறு­கையில்,‘‘சி.பி.டி., வளாக சாலைகள் அனைத்தும் தொழில்­நுட்ப கல்­வித்­துறை கட்­டுப்­பாட்டில் உள்­ளன. அவற்றை சீர­மைக்க அந்த துறை­யிடம் அனு­மதி கோரப்­பட்­டுள்­ளது,’’ என்றார்.

ஆனால், அன்றே சி.பி.டி.,வளாக சாலைகள் அமைக்க சம்­பந்­தப்­பட்ட துறை கமி­ஷனர், மாந­க­ராட்­சிக்கு அனு­ம­தி­ய­ளித்தார். இதை­ய­டுத்து, திட்ட மதிப்­பீடு தயா­ரிக்­கப்­பட்டு ஒப்­பந்தம் கோரப்­பட்­டது.

இந்த நிலையில், சி.பி.டி., நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் எட்டு பகு­தி­க­ளாக பிரிக்­கப்­பட்டு 3.4 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் அமைப்­ப­தற்­கான பூமி பூஜை நேற்று நடந்­தது. நிகழ்ச்­சியில் மேயர் சைதை துரை­சாமி, எம்.எல்.ஏ., அசோக், மண்­டலக் குழு தலைவர் முருகன் உள்­ளிட்டோர் பங்­கேற்­றனர்.

 


Page 20 of 167