Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாந­க­ராட்சி பள்ளி மாண­வர்­க­ளுக்கு மன கட்டுப்பாடு ‘கவுன்­சிலிங்’

Print PDF

தினமலர்                04.09.2013

மாந­க­ராட்சி பள்ளி மாண­வர்­க­ளுக்கு மன கட்டுப்பாடு ‘கவுன்­சிலிங்’

சென்னை:மாந­க­ராட்சி பள்ளி மாண­வர்­களின் மன­நிலை மாற்­றத்தை கட்­டுப்­ப­டுத்த, கவுன்­சிலிங் வழங்கும் பணிகள், இம்­மாதம் துவங்­கப்­பட உள்­ளன.

சென்னை மாந­க­ராட்சி பள்­ளி­களில், 9 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாண­வி­ய­ருக்கு பொது கவுன்­சிலிங் வழங்கும் திட்டம் நடை­முறையில் உள்­ளது.

இந்த ஆண்டு, மாந­க­ராட்சி கட்­டுப்­பாட்டில் உள்ள, 70 உயர்­நிலை மற்றும் மேல்­நிலை பள்­ளி­களில், இந்த கவுன்­சிலிங் வகுப்­புகள், இம்­மாத இறுதிக்குள் துவங்­கப்­பட உள்­ளன.

கவுன்­சிலிங் செய்ய தகு­தி­யான நபர்­களை தேர்வு செய்யும் பணி நடந்து வரு­கி­றது. இதற்கு பி.எஸ்சி., மனோ­தத்­துவம் படித்­த­வர்கள் தேர்வு செய்­யப்­படுகின்­றனர். முதல்­கட்­ட­மாக, 80 விண்­ணப்­பங்கள் மாந­க­ராட்சிக்கு வந்­தன.

இதில், எட்டு பேர் மட்­டுமே தகு­தி­யா­ன­வர்­க­ளாக தேர்வு செய்­யப்­பட்­டனர். இரண்டாம் கட்ட நேர்­முக தேர்வு விரைவில் நடத்­தப்­பட உள்­ளது.

அதில், ஆறு பேர் தேர்வு செய்­யப்­பட உள்­ளனர். இவர்­களை கொண்டு மண்­ட­லத்­திற்கு இருவர் வீதம், ஏழு மண்டலங்­களில் உள்ள பள்­ளி­களில் கவுன்­சிலிங் வகுப்­புகள் நடை­பெறும்.

மதிய நேரத்தில் வகுப்­புகள் நடை­பெறும் என்றும், இதில், மாண­வர்­களின் தனிப்­பட்ட பிரச்­னைகள் கண்­ட­றி­யப்­பட்டு, அதில் இருந்து அவர்கள் மீள கவுன்­சிலிங் வழங்­கப்­படும் என்றும் கல்­வித்­துறை அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

 

மாநகராட்சியில் "இங்கிலீஷ் ஹெல்பர்' டிஜிட்டல் பாடத்திட்டம் குறித்து பயிற்சி துவக்கம்

Print PDF

தினமலர்            26.08.2013

மாநகராட்சியில் "இங்கிலீஷ் ஹெல்பர்' டிஜிட்டல் பாடத்திட்டம் குறித்து பயிற்சி துவக்கம்

கோவை:கோவை மாநகராட்சி பள்ளி ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கு, "இங்கிலீஷ் ஹெல்பர்' டிஜிட்டல் பாடத்திட்டம் குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.கோவை மாநகராட்சி பள்ளியில், "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்' சார்பில், பல்வேறு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாநகராட்சி பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவையும், பேச்சு திறனையும் மேம்படுத்த "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்' சார்பில், "இங்கிலீஷ் ஹெல்பர்' என்ற "சாப்ட்வேர்' புதிதாக நிறுவப்பட்டுள்ளது.ஒப்பணக்கார வீதி (பெண்கள்), ஆர்.எஸ்.புரம், ரத்தினபுரி, ராமகிருஷ்ணாபுரம், பீளமேடு, ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளிலும், செல்வபுரம் (பெண்கள்), கே.கே.புதூர், ராமலிங்கம்காலனி, கோவில்மேடு, புலியகுளம், வரதராஜபுரம், அனுப்பர்பாளையம் ஆகிய உயர்நிலைப்பள்ளிகளில் "இங்கிலீஷ் ஹெல்பர்' வகுப்பு துவங்கப்படுகிறது. இப்பள்ளில் 6-8ம் வகுப்பு வரையுள்ள 2424 மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு முன்,ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்' நிர்வாகி அலெக்ஸாண்டர் வரவேற்றார்.

டில்லி "இங்கிலீஷ் ஹெல்பர்' நிறுவன மேலாளர் கல்பனா பேசியதாவது:மாநில அரசின் பாடத்திட்டம் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. "இங்கிலீஷ் ஹெல்பர்' முறையில், "ரீடு டூ மி' என்ற பெயரிலுள்ள சாப்ட்வேரில் 6 - 8 ம் வகுப்பு வரையிலும் மூன்று பருவத்துக்கான பாடங்கள் அடங்கியுள்ளன.எந்த பாடத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு வார்த்தையை தேர்வு செய்தால், அதற்கான இணைச்சொல், எதிர்ச்சொல், பொருள், உச்சரிப்பு போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். ஒரு வாக்கியத்தை தேர்வு செய்தால், அதற்கான அர்த்தத்தை பெறலாம். பாடத்திட்டத்திற்கான புகைப்படங்கள், 12 வகையான அகராதிகள் உள்ளன.

அனைத்து விளக்கங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.மாணவர்கள் பயிற்சியின் போது, "ஹெட் போன்' பொருத்திக்கொள்ள வேண்டும்; அவர்களின் ஆங்கில வார்த்தை உச்சரிப்புகள் கம்ப்யூட்டரில் பதிவாகும். இதன்மூலம் மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு திறன் மேம்படும். பாடங்களை படித்தும், பார்த்தும், அர்த்தம் புரிந்தும் படிக்கும் போது, எளிமையாக இருப்பதுடன், திறனை வளர்த்துக்கொள்ளவும் உதவும். இவ்வாறு, கல்பனா பேசினார்.

உச்சரிப்பில் ஒரே "ஸ்டைல்'

பயிற்சி வகுப்பு குறித்து, ஒக்கிலியர் காலனி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பிரமிளா கூறுகையில், ""ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி பாணியில் பாடம் கற்பிக்கிறோம். "இங்கிலீஷ் ஹெல்பர்' திட்டத்தால், ஆங்கில உச்சரிப்பு ஒரே மாதிரி இருக்கும். ஆசிரியர், மாணவர் இருதரப்புக்கும் எளிதாக இருக்கும். இந்த முறையை கடைபிடிக்கும் போது, மாணவர்கள் "ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புகளுக்கு செல்ல வேண்டியதில்லை,'' என்றார்.

 

நகராட்சி பள்ளியில் கலைப் பாடப்பிரிவு தொடக்கம்

Print PDF

தினமணி              02.08.2013

நகராட்சி பள்ளியில் கலைப் பாடப்பிரிவு தொடக்கம்

திருவள்ளூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முதன்முறையாக பிளஸ் 1 வகுப்பில் கலைப்பாடப் பிரிவு வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட ராஜாஜி தெருவில் இயங்கி வந்த நகராட்சி உயர்நிலைப்பள்ளி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

தரம் உயர்த்தப்பட்டது முதல், இப்பள்ளியில் முதல் குரூப்பில் உயிரியல் பிரிவும், இரண்டாவது குரூப்பில் கணினி அறிவியல் பிரிவு மற்றும் "பியூர் சயின்ஸ்' ஆகிய பாடப்பிரிவுகள் இருந்தன.

இந்நிலையில், இப்பள்ளியில் வியாழக்கிழமை முதல் கலைப்பாடப் பிரிவு (4-வது குரூப்) புதிதாக தொடங்கப்பட்டது. இப்பிரிவில் வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளாதாரம், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் அடங்கும்.

இப்பிரிவில் இதுவரை 22 மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

கலைப்பாடப் பிரிவு தொடக்கநாளையொட்டி, திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் ஏ.பாஸ்கரன், பள்ளி தலைமை ஆசிரியர் மோகன சுந்தரி ஆகியோர் மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினர்.

மேலும் இப்பள்ளியில் படிக்கும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா ஜாமன்டரி பாக்ஸ், காலணி ஆகியவையும் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் எழிலரசன், வீட்டு வசதி கூட்டுறவுச் சங்க இயக்குநர் விஜயன், ஆசிரியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 


Page 8 of 111