Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

கோவை உயர்கல்வி மையத்தில் படித்த 5 பேர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி

Print PDF
தினத்தந்தி               04.05.2013

கோவை உயர்கல்வி மையத்தில் படித்த 5 பேர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி


கோவை உயர்கல்வி மையத்தில் படித்த 5 பேர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

உயர்கல்வி மையம்

கோவை அரசு கலைக்கல்லூரி மற்றும் கோவை மாநகராட்சி சார்பில், கோவை–நஞ்சப்பா ரோட்டில் உயர்கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சிவில் சர்வீசஸ் படிப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் மாணவ– மாணவிகளுக்கு கோவை அரசு கலைக்கல்லூரி அரசியல் சார் அறிவியல் துறை பேராசிரியரும், உயர்கல்வி மைய தலைவருமான டாக்டர் பி.கனகராஜ் இலவச பயிற்சி அளித்து வருகிறார்.

தேர்வு முடிவு வெளியீடு

உயர்கல்வி மையத்தில் மாணவர்களுக்கு ஆண்டு வதும் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இது தவிர நாடு முழுவதும் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் மூலம் டெல்லியில் நடைபெறுவதை போலவே பல்வேறு கட்டங்களாக சிவில் சர்வீசஸ் மாணவ–மாணவிக ளுக்கு மாதிரி நேர்காணல்கள் நடத்தி பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் உயர்கல்வி மையத்தில் படித்த 5 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். அவர்களின் பெயர் விவரம் வருமாறு:–

5 பேர் தேர்ச்சி

திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் 460–வது இடம், திண்டுக்கல்லை சேர்ந்த சுரேஷ்குமார் 343–வது இடம், காங்கயத்தை சேர்ந்த அபிநயா நிஷாந்தினி 817–வது இடம், டெல்லியை சேர்ந்த மனோஜ் 271–வது இடம், ஈரோட்டை சேர்ந்த கார்த்திகேயன் 789–வது இடம் பெற்று தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இந்த தகவலை இலவச சிவில் சர்வீசஸ் பயிற்சியாளர் பேராசிரியர் பி.கனகராஜ் தெரிவித்தார்.
 

மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ.34 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள்

Print PDF
தினகரன்                 29.04.2013

மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ.34 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள்


திருப்பூர், :  அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி பள்ளிகளில் ரூ.34 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்களை அமைச்சர் ஆனந்தன் திறந்து வைத்தார்.பள்ளிக் கல்வித்துறை மூலமாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் திருப்பூர் சுண்டமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.24 லட்சம் மதிப்பில் 3 கூடுதல் வகுப்பறை, தலைமையாசிரியர் அறை கட்டடங்கள், செல்வம் நகர் மாநகராட்சி  தொடக்கப் பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடம் என மொ த்தம் ரூ.34 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதன் திறப்பு விழா நேற்று நடந்து. கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம் முன்னிலை வகித்தார். கூடுதல் வகுப்பறை கட்டடங்களைத் திறந்து வைத்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆனந்தன் பேசினார். இவ்விழாவில், மாவட்ட ஊராட்சித் தலைவர் சண்முகம், மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ், முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி, மாநகராட்சி நகரமைப்பு நிலைக்குழுத் தலைவர் அன்பகம் திருப்பதி, கல்விக் குழுத்தலைவர் பட்டுலிங்கம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அழகர்சாமி, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா கணித உபகரண பெட்டி , காலணிகள்

Print PDF
தினகரன்         20.04.2013

லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா கணித உபகரண பெட்டி , காலணிகள்


கோவை: அரசு பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு  இலவச கணித உபகரண பெட்டி மற்றும் காலணிகள் வழங்கும் விழா  நேற்று மணி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நடைபெற்றது. இதில் 12 பள்ளிகளை சேர்ந்த 120 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா கணித உபகரண பெட்டி மற்றும் காலணிகள் வழங்கப்பட்டது. கோவை கல்வி மாவட்டத்தில் 96 ஆயிரத்து 954 கணித உபகரண பெட்டிகள் மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில்  27 ஆயிரத்து 468 கணித உபகரண பெட்டிகள் வழங்கப்பட்டது.

மேலும் கோவையில் 90 ஆயிரத்து 250 காலணிகள் மற்றும் பொள்ளாச்சியில் 27 ஆயிரத்து 468 காலணிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு கோவை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமை தாங்கினார். கோவை மாநகர மேயர் வேலுசாமி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு காலணிகள் மற்றும் கணித உபகரண பெட்டிகளை வழங்கினார்.  மாவட்ட ஆட்சியர் கருணாகரன் பேசுகையில்:

கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 500 பேருக்கு பிளஸ் 2வில் மடிக்கணினி வழங்கப்பட்டது. கஞ்சம் பட்டி போன்ற பகுதிகளில் மேல்நிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை மற்றும் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்றார்.
 


Page 18 of 111