Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

மாநகராட்சி ஐடிஐ-யில் புதிய பாடப் பிரிவுகள்

Print PDF

தினமணி 11.09.2009

மாநகராட்சி ஐடிஐ-யில் புதிய பாடப் பிரிவுகள்

சென்னை, செப்.10: மாநகராட்சி தொழில் பயிற்சி மையத்தில் (ஐடிஐ) 3 புதிய பாடப் பிரிவுகள் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) தொடங்கப்பட்டன.

சென்னை லாயிட்ஸ் காலனியில் மாநகராட்சி தொழில் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் கணினி இயக்குபவர், நிகழ்ச்சி தொகுப்பாளர், குழாய் பொருத்துனர் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது பொருத்துனர் (ஃபிட்டர்), மின் பணியாளர், மோட்டார் மெக்கானிக் உள்ளிட்ட புதிய பாடப் பிரிவுகள் வியாழக்கிழமை சேர்க்கப்பட்டன. மேயர் மா. சுப்பிரமணியன் இந்தப் புதிய பாடப் பிரிவுகளை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு புதிய பாடப் பிரிவின் கீழும் 19 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தொடக்க விழாவில் பயிற்சி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன

Last Updated on Friday, 11 September 2009 07:09
 

இந்தியாவிலேயே முதல் முறையாக எஸ்.எம்.எஸ். மூலம் சொத்துவரி செலுத்தும் முறை; சென்னையில் அறிமுகம்

Print PDF

மாலை மலர் 09.09.2009

இந்தியாவிலேயே முதல் முறையாக எஸ்.எம்.எஸ். மூலம் சொத்துவரி செலுத்தும் முறை; சென்னையில் அறிமுகம்

சென்னை, செப். 9-

எஸ்.எம்.எஸ். மூலம் சொத்து வரி செலுத்தும் முறை சென்னை மாநகராட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இதற்கான விழாவில் மேயர் மா.சுப்பிரமணியன் இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

சொத்து வரி எளிய முறையில் செலுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் வரி வசூல் செய்வதற்கு "பிளாக் பெர்ரி" கருவி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 4-வது மண்டலத்தில் 24 மணி நேரம் செலுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் சொத்து வரி வசூலிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு ரூ. 4 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் ஜி.பி.ஆர்.எஸ். பயன்பாட்டை பெற்றுள்ள செல்போன் மூலம் எந்தவித இடையூறு இல்லாமல் எஸ்.எம்.எஸ். அனுப்பி சொத்து வரியை செலுத்தலாம். NGPAY-என்ற தகவல் மையத்தை 56767 என்ற எண் மூலம் எஸ்.எம்.எஸ். வழியாக தொடர்பு கொண்டு பெயர் மற்றும் முகவரி, மின் அஞ்சல் ஆகிய தகவலை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்தவுடன் சொத்து வரி விவரத்தை பதிவு செய்து டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை கொடுத்து சொத்து வரி செலுத்தி பரி மாற்ற குறியீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலம் சென்னையில் அனைத்து சொத்து உரிமையாளர்களும் தங்களது சொத்து வரியை மிகவும் எளிய முறையில் செலுத்தி பயன் அடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, ஆளுங்கட்சி தலைவர் ந.ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

செல்போன் மூலம் சொத்து வரி செலுத்தலாம்

Print PDF

தினமணி 10.09.2009

செல்போன் மூலம் சொத்து வரி செலுத்தலாம்!

சென்னை, செப்.9: செல்போன் மூலம் மாநகராட்சி சொத்து வரிகளை இனி செலுத்தலாம்'' என மேயர் மா. சுப்பிரமணியன் புதன்கிழமை அறிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் இந்த ஆண்டு ரூ. 375 கோடி சொத்து வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செல்போன் மூலம் சொத்து வரி செலுத்தும் புதிய திட்டம் முதன்முறையாக சென்னையில் புதன்கிழமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இத் திட்டத்தை புதன்கிழமை தொடங்கிவைத்து மேயர் மா. சுப்பிரமணியன் பேசியது:

அயனாவரம் மண்டலம்-4 அலுவலகத்தில் சொத்து வரி செலுத்தும் இயந்திரம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அடையாறு மண்டலத்தில் ஆன்-லைன் மூலம் சொத்து வரி செலுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்தியாவிலேயே முதன்முறையாக செல்போன் மூலம் சொத்து வரி செலுத்தும் வசதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு நவீன வசதிகள் மூலம் 2006-07-ம் ஆண்டில் ரூ. 231.94 கோடியாக இருந்த சொத்து வரி வசூல், 2007-08-ம் ஆண்டில் ரூ. 291.26 கோடியாக உயர்ந்தது. 2008-09-ம் ஆண்டில் ரூ. 323.80 கோடியாக உயர்ந்தது. இந்த ஆண்டு ரூ. 375 கோடி சொத்து வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஜி.பி.ஆர்.எஸ். வசதி உள்ளவர்கள்... ஜி.பி.ஆர்.எஸ். வசதி உள்ள செல்போன் வைத்துள்ளவர்கள் மட்டுமே இந்த புதியத் திட்டத்தை பயன்படுத்தி சொத்து வரியை செலுத்த முடியும்.

ய்ஞ்ல்ஹஹ் என டைப் செய்து 56767 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி, பெயர், முகவரி, மின் அஞ்சல் முகவரி ஆகியவற்றை முதல் முறை பதிவு செய்து கொள்ளவேண்டும்.

பின்னர் சொத்து வரி விவரங்களை பதிவு செய்து, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் வரியை செலுத்தி, பரிமாற்ற குறியீட்டை (பழ்ஹய்ள்ஹஸ்ரீற்ண்ர்ய் ஐஈ) பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையில் பணம் செலுத்தியவர்களுக்கு இ-மெயில் மூலமும் பின்னர் தபால் மூலமும் வரி செலுத்தியதற்கான ரசீது அனுப்பப்படும். எந்த செல்போன் சேவையை வைத்திருப்பவர்களும், இந்த புதிய வசதி மூலம் வரி செலுத்தலாம்.

Last Updated on Wednesday, 21 October 2009 06:17
 


Page 37 of 41