Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

மாநகராட்சி அலுவலகத்தில் 9 கண்காணிப்பு காமிராக்கள்

Print PDF

தினகரன்             09.10.2013

மாநகராட்சி அலுவலகத்தில் 9 கண்காணிப்பு காமிராக்கள்

மதுரை, : மதுரை மாநகராட்சியில் வெளி ஆட்கள் நடமாட்டத்தை கண்காணி த்து கட்டுப்படுத்த கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த ஆணையர் நந்தகோபால் நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதார பிரிவில் சான்றிதழ் வழங்குமிடம், தகவல் மையம், பார்க்கிங் பகுதி, கேண்டீன், ரிக்கார்டு பிரிவு உள்பட 9 இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தும் பணி தொடங்கியது. இதனை ஆணையரின் தனிப்பிரிவில் இருந்து கண்காணிக்க வசதி செய்யப்படுகிறது. இது தவிர மண்டல அலுவலகங்களிலும் கண்காணிப்பு கா மிரா பொருத்தப்படுகிறது.

 

சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் ஆன்லைனில் செலுத்தும் வசதி

Print PDF

தினமணி           04.10.2013

சொத்து வரி, குடிநீர்க் கட்டணம்  ஆன்லைனில் செலுத்தும் வசதி

நாகர்கோவில் நகராட்சியில் ஆன்-லைன் மூலம் சொத்துவரி, குடிநீர்க் கட்டணம் செலுத்தும் வசதி வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

நாகர்கோவில் கே.பி சாலையில் உள்ள சைபர்கேட் இன்டெர்நெட் மையத்தில் நடைபெற்ற விழாவில், இந்த வசதியை ஆட்சியர் எஸ். நாகராஜன் தொடக்கிவைத்தார்.

தமிழகத்தில் ஏற்கெனவே மாநகராட்சிகளில் மட்டும் ஆன்-லைன் மூலம் வரி செலுத்தும் வசதி உள்ளது. நகராட்சிகளில் ஆன்-லைன் மூலம் வரி செலுத்தும் வசதி முதன்முறையாக நாகர்கோவில் நகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக மென்பொருள் புதிதாக வடிவமைக்கப்பட்டு நாகர்கோவில் நகராட்சி இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் பொதுமக்கள் எந்த இடத்திலிருந்தும், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு  மூலம் சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் செலுத்தலாம்.

நகர்மன்றத் தலைவர் எம். மீனாதேவ், ஆணையர் கே. ராஜன், துணைத் தலைவர் சைமன் ராஜ், பொறியாளர் ப. ஜார்ஜ், நகரமைப்பு அலுவலர் ஜானகிராமன், நகர்நல அலுவலர் சந்திரன், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

மாநகராட்சியில் கண்காணிப்புக் காமிரா

Print PDF

தினமணி           03.10.2013

மாநகராட்சியில் கண்காணிப்புக் காமிரா

மதுரை மாநகராட்சி கணினிப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சியில் பிறப்பு, இறப்புச் சான்று கணினிப் பிரிவில் சமீபத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ரா.அண்ணாதுரை ஆகியோரின் பெயரில் இறப்புச் சான்றுகள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சியின் ஆவண அறையில் கணினியில் பெண் ஊழியர் மீனாவின் ரகசியக் குறியீட்டைப் பயன்படுத்தி போலியாக சான்று தயாரிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி மற்றும் மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர், சான்றுகள் வாங்கித் தரும் தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, கணினிப் பிரிவு உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

 


Page 6 of 41