Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

முதன் முதலாக...செயற்கைக்கோள் மூலம் நகர கட்டமைப்புகள் கணக்கெடுப்பு தாம்பரம் நகராட்சியில் ரூ.18 லட்சம் செலவில் துவக்கம்

Print PDF
தினமலர்           19.09.2013

முதன் முதலாக...செயற்கைக்கோள் மூலம் நகர கட்டமைப்புகள் கணக்கெடுப்பு தாம்பரம் நகராட்சியில் ரூ.18 லட்சம் செலவில் துவக்கம்


தாம்பரம்:தமிழக நகராட்சிகளில் முதல் முறையாக, செயற்கைக் கோள் உதவியுடன், அடிப்படை கட்டமைப்புகளை கணக்கெடுக்கும் திட்டம் தாம்பரத்தில் நேற்று துவக்கப்பட்டது.

வேலூர், துாத்துக்குடி, ஈரோடு, சேலம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாநகராட்சிகள்; தாம்பரம், நாமக்கல், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ஊட்டி ஆகிய ஏழு நகராட்சிகள் என, மொத்தம் 12 இடங்களில், செயற்கைக்கோள் மூலம், இ.ஜி. ஐ.எஸ்., என்ற நிறுவனத்தின் உதவியுடன் அடிப்படை கட்டமைப்புகளை கணக்கெடுத்து, இணைய தளத்தில் வெளியிட, அரசு முடிவு செய்துள்ளது. 12 இடங்களில் கணக்கெடுப்பு நடத்த, மொத்தம் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளியூர்காரர்களுக்கு வசதி

இந்த திட்டத்தை முதன் முதலாக, தாம்பரம் நகராட்சியில் செயல்படுத்த, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அலுவலகம் முடிவு செய்தது. இதையடுத்து, அமைச்சர் சின்னையா நேற்று இந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.

இதன்படி, தாம்பரம் நகராட்சி நிலப்பரப்பில் அமைந்துள்ள அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை அடிப்படையில் நிலம், கட்டட வரைபடம், சாலைகளின் நீள அகலம், தெரு விளக்குகள், குடிநீர் தொட்டிகள், பள்ளிகளின் இருப்பிடம், கழிப்பிடங்கள், பூங்காக்கள், தெருக்களின் பெயர்கள், மின் கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள், நிலத்தடி நீர் பம்புகள், கட்டடங்களின் விவரங்கள், ஏரி மற்றும் குளங்கள், தனியார் சொத்துகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு, தாம்பரம் நகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்‌படும்.

இதன்மூலம், எதிர்காலத்தில் மழைநீர் வடிகால்வாய், பாதாள சாக்கடை, குடிநீரை விரிவுபடுத்துதல், சாலை அமைத்தல் போன்ற பணிகளை எளிதாகவும் மிக துல்லியமாகவும் திட்டமிட்டு, செயல்படுத்த முடியும்.

வெளியூர்களில் இருந்து ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் தாம்பரத்திற்கு வருவோர், கழிப்பிடம், ஓட்டல், தங்கும் விடுதி ஆகியவை எங்குள்ளன என்பதையும், அதற்கான வழியையும், அலைபேசி மூலம் பார்த்து தெரிந்து கொண்டு, பயனடைய முடியும்.

தாம்பரம் நகராட்சியில் இந்த திட்டத்தை செயல்படுத்த 18 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு எப்படி?

செயற்கைக்கோள் மூலம் தாம்பரத்தின் முழு நிலப்பரப்பு, படம் பிடிக்கப்படும்

இந்த படத்தில் ஒவ்வொரு கட்டமைப்பு மற்றும் இயற்கை அம்சங்கள் எந்த விதமானவை என்பதை பதிவு செய்ய, திட்ட ஊழியர்கள், ஒவ்வொரு கட்டமைப்பையும் பார்வையிடுவர்

இவர்களிடம் ‘டேப்லெட்’ எனப்படும் கையடக்க, தொடு திரை கணினி இருக்கும். அதில், குறிப்பிட்ட கட்டுமானம் குறித்த விவரங்களை பதிவு செய்து கொள்வர்

உதாரணத்திற்கு, செயற்கைக்கோள் படத்தில் உள்ள ஒரு கட்டுமானம், ஒரு வீடாக இருந்தால், கணினியில் உள்ள மென்பொருள் மூலம், அது படத்தில் வீடு என, குறிக்கப்படும். இது தவிர அந்த வீட்டில் உள்ள கழிப்பிடம், குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட வசதிகள் குறித்த விவரங்களும் பதிவு செய்யப்படும்

இப்படி படத்தில் உள்ள ஒவ்வொரு கட்டமைப்பு பற்றிய விவரமும், கள ஆய்வில் சேகரிக்கப்படும்

பின், படம் பிடிக்கப்பட்ட பரப்பளவில் உள்ள ஒவ்வொரு கட்டுமானம் குறித்த விவரங்கள் அடங்கிய மென்பொருள் தயாராகும். இதன் மூலம், ஆய்வு செய்யப்பட்ட இடம் குறித்த அனைத்து தகவல்களையும் எளிதாக கணினி மூலம் தெரிந்து கொள்ளலாம்

அதன்படி, தாம்பரம் நகராட்சி குறித்த, இத்தகைய வரைபடத்துடன் கூடிய தகவல்கள் தாம்பரம் நகராட்சி இணையதளத்தில் வெளியிடப் படும்

அதேநேரம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில தகவல்கள், இணையதளத்தில் வெளிவராது

கூகுள் வரை­ப­டத்தில் இருப்­ப­தை­விட கூடுதல் தக­வல்­களை இந்த திட்டம் மூலம் பெற முடியும் என, தெரி­கி­றது

இதுகுறித்து, நகராட்சி தலைவர் கரிகாலன் கூறியதாவது:

ஆறு மாதத்தில் இந்த பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம், 60 பேர் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வார்டுக்கும் சென்று, கையடக்க கணினி மூலம் கணக்கெடுப்பர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

மாநகராட்சி வாகனங்களை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி!

Print PDF

தினமணி             05.09.2013

மாநகராட்சி வாகனங்களை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி!

கோவை மாநகராட்சி வாகனங்களின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காகப் பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ். கருவி செயல்பாட்டை மேயர் செ.ம.வேலுசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். மாநிலத்தில் முதன்முதலாக கோவை மாநகராட்சியில் தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

  கோவை மேயர் செ.ம.வேலுசாமி, ஜி.பி.எஸ். செயல்பாட்டைத் துவக்கி வைத்துப் பேசியது:

கோவை மாநகரை குப்பையில்லாத, தூய்மை நகரமாகப் பராமரிக்கவும், குப்பை அள்ளும் வாகனங்களின் எரிபொருள் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும், தமிழகத்திலேயே முதன்முறையாக ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு, நாள் முழுவதும் வாகனம் சென்று வரும் விவரங்களை முழுமையாகக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இதன்மூலம் ஒவ்வொரு வாகனமும் குப்பைகளை அள்ளுவதற்குச் சென்றுவர வேண்டிய வழித்தடம் மற்றும் குப்பை சேகரிக்க வேண்டிய குப்பைத் தொட்டிகள் விவரமும்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு பகுதியிலும் குப்பைகள் எடுக்காமல்  விடுபடும் வாய்ப்புகள் தவிர்க்கப்படும்.

  இத்திட்டத்தில் முதல்கட்டமாக 25 வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியில் உள்ள 227 வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

  மாநகராட்சி ஆணையர் க.லதா, துணை யேமர் சு.லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு, மண்டலத் தலைவர்கள் ஆதிநாராயணன், சாவித்திரி, மாநகரப் பொறியாளர் சுகுமார், நகர்நல அலுவலர் பி.அருணா, நிர்வாகப் பொறியாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

குப்பைகள் அகற்றுவதைக் கண்காணிக்க நவீன தொழில்நுட்பம்: மாநகராட்சி ஏற்பாடு

Print PDF

தினமணி            21.08.2013

குப்பைகள் அகற்றுவதைக் கண்காணிக்க நவீன தொழில்நுட்பம்: மாநகராட்சி ஏற்பாடு

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றுவதைக் கண்காணிக்க நவீன தொழில்நுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகளில், குப்பைகள் சரியான நேரத்தில் அகற்றப்படுவதைக் கண்காணிக்கவும், முறைபடுத்தவும் மென்பொருள் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் படி, முறையாக குப்பைகள் அகற்றப்பட்ட தொட்டிகள் எவை, குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கும் தொட்டிகள் எவை என்பதை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்தே இனம் பிரித்து கண்காணிக்க முடியும்.

முதல் கட்டமாக இந்த திட்டம் 9, 10 மற்றும் 13-வது மண்டலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. குப்பைத் தொட்டிகளின் எண்ணிக்கை மற்றும் குப்பை அகற்றப்படும் நேரம் உள்ளிட்ட தகவல்களை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீம்ள்ஜ்.ஸ்ரீர்.ண்ய் என்ற இணையதளப் பக்கத்தின் வழியாக தெரிந்து கொள்ளலாம். குப்பை அகற்றுவது குறித்த புகார்களுக்கு 1800 425 1566 மற்றும் 1913 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Last Updated on Wednesday, 21 August 2013 07:38
 


Page 7 of 41