Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா

Print PDF

தினமணி                  19.05.2013

அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா

அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கும், பாதுகாவலர்களை நியமிப்பதற்கும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னையின் 200 வார்டுகளிலும் உள்ள அம்மா உணவகங்களில் ரூ.1-க்கு இட்லியும், ரூ.5-க்கு சாம்பார் சாதமும், ரூ.3-க்கு தயிர்சாதமும் வழங்கப்பட்டு வருகிறது.

அம்மா உணவகம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை சுமார் ஒரு கோடியே 75 லட்சம் இட்லிகளும், 35 லட்சம் சாம்பார் சாதங்களும், 22 லட்சம் தயிர் சாதங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் அம்மா உணவகத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த சென்னை மாநகராட்சியில் மட்டும் ஆண்டுக்கு ரூ.34.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அம்மா உணவகத்துக்கு மக்களிடம் அமோக வரவேற்பு இருப்பதால், அங்கு காலையில் ரூ.5-க்கு பொங்கலும், மதியம் ரூ.5-க்கு எலுமிச்சை சாதம் அல்லது கறிவேப்பிலை சாதமும், மாலையில் ரூ.3-க்கு 2 சப்பாத்திகளும் வழங்கப்படும் என அண்மையில் முதல்வர் அறிவித்திருந்தார்.

கண்காணிப்பு கேமரா: முதல்வரின் புதிய அறிவிப்பு காரணமாக அம்மா உணவகங்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் 200 இடங்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்கள் மற்றும் திருட்டைத் தடுக்க பாதுகாவலர்களை நியமனம் செய்யவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது:

அம்மா உணவகத்துக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் 200 வார்டுகளிலும் உள்ள அம்மா உணவகங்களின் பாதுகாப்பைக் கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. பாதுகாவலர்களை நியமிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார் அவர்.

Last Updated on Tuesday, 21 May 2013 06:41
 

கணினி மின்ஆளுமையை பரவலாக்க புதிய திட்டங்கள்

Print PDF

தினபூமி               09.05.2013

கணினி மின்ஆளுமையை பரவலாக்க புதிய திட்டங்கள்

http://www.thinaboomi.com/sites/default/files/Cm-Jaya5(C)_15.jpg

சென்னை, மே.9 - அரசுத் துறைகளில் கணினி மின்ஆளுமையை பரவலாக்க ரூ.100 கோடியில் புதிய திட்டங்களும், புவிசார் தகவல்களை கொண்ட மின்னணு வரைப்பட காப்பக தளமும்  உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன்கீழ் நேற்று பேரவையில் முதலமைச்சர்  ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டு கூறியதாவது:-

அனைத்து மக்களும் உடனுக்குடன் தொடர்பு கொள்ள வழி ஏற்படுத்தி, உலகை மிகச் சிறிய பரப்புடையதாக்கி `உலகமே சிறு கிராமம்' என்று சொல்லும் அளவுக்கு தகவல் தொழில் நுட்பவியல் துறை உலகையே சுருக்கியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. 

எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், 2002 ஆம் ஆண்டு  அறிவிக்கப்பட்ட புதிய தகவல் தொழில் நுட்பவியல் கொள்கை தான் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வித்திட்டது.  

அரசுத் துறைகளில் மின் ஆளுகை முயற்சிகளை செயல்படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ள,  மின் ஆளுமை இயக்குனரகம் பலப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, அதன் கட்டுப்பாட்டின் கீழ் தகவல் தொழில் நுட்பவியல் ஆற்றல் மற்றும் பயிற்சி பெற்றவர்களைக் கொண்ட ஒரு தகவல் தொழில் நுட்பவியல் பணி நிலைப் பிரிவு, அதாவது ஐகூ ஊயனசந உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பிரிவிலிருந்து தலைமை செயலகம் மற்றும் மாநிலத்தில் உள்ள துறை தலைமை அலுவலகங்களுக்கு பணிபுரிய அலுவலர்கள் அனுப்பப்படுவர். அவர்கள் அரசு துறைகளில் மின் ஆளுகை முயற்சிகளை செயல்படுத்த உதவி புரிவர்.

மேகக் கணினியம், என்பது கணினித் திறனை  இணையத்தின் வாயிலாக பெறக் கூடிய ஒரு அமைப்பாகும்.  இதன் மூலம் கணினித் திறன்களை வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து உள் கட்டுமான சேவை, மென் பொருள் தள சேவை, மென் பொருள் சேவை ஆகியவற்றை பெற முடியும்.

இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த மேகக் கணினியத்தை மாநிலத் தரவு மையத்தில் ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முன் மாதிரி ஆய்வுகள் நல்ல பலனை அளித்ததால், மாநிலத் தரவு மையத்தில்   முழுமையான மேகக் கணினியம் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் கணினி மென் பொருட்கள் மற்றும்  வன் பொருட்கள் உள்ளடங்கிய கட்டமைப்பை பயன்பாட்டு கட்டண முறையில் அரசுத் துறைகள் பெற இயலும் என்பதால், வன் பொருட்கள், மென் பொருட்கள், கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்காக ஏற்படும் செலவினங்கள் பெருமளவில் குறையும்.

தமிழ்நாடு பெரும் பரப்பு வலையமைப்பு, அரசுத் துறைகளை இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரத்தியேகமான இணைப்பாகும்.   இந்த இணைப்பின் மூலம் குரல், தரவு, வலையம் மற்றும் காணொலி ஆகிய சேவைகளை வழங்க இயலும்.  இதன் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவை உள்ளடக்கிய 708 வலைய இணைப்பு முனைகள் டடிவேள டிக யீசநளநஉேந எல்காட் நிறுவனம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை வணிகவரித் துறை, தமிழ் நாடு குடிநீர் வழங்கல் வாரியம், சுகாதாரத் துறை போன்ற பல அரசுத் துறைகளின் 1853 அலுவலகங்களுக்கு கிடைமட்ட  இணைப்பு,  கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் முடிவுற்று  தற்பொழுது இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.  இத்திட்டத்தின் மூலம் பல்வேறு அரசுத் துறைகளும் தங்களது துறை சார்ந்த சேவைகளை பொது மக்களுக்கு அளித்து வருகின்றன. இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட செயல்பாட்டிற்கு எல்காட் நிறுவனம் நிதி உதவி கோரியுள்ளது.  இத்திட்டத்திற்கான அலை வரிசை இணைப்பு ஒரே நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளதால் அந்த இணைப்பில் ஏதேனும் எதிர்பாராத இடையூறுகள் ஏற்படும் போது, அரசின் சேவைகளை தொடர்ந்து அளிக்கும் விதத்தில் பதிலி இணைப்பு, ஒன்று அவசியம் ஆகிறது. மேலும் இவ்வலைய இணைப்பு முனைகளில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள பல அரசு அலுவலகங்களுக்கு கிடைமட்ட இணைப்பையும் அளிக்க வேண்டியுள்ளது. 

எனவே, தமிழ்நாடு பெரும்பரப்பு வலையமைப்பின் இரண்டாம் கட்ட செயல்பாட்டிற்கு 50 கோடி ரூபாயும், பதிலி இணைப்பிற்கு 10 கோடி ரூபாயும், கிடைமட்ட இணைப்பிற்கு  40 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 100 கோடி ரூபாய் நிதியினை எனது தலைமையிலான அரசு வழங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதன் மூலம் இன்னும் பல அரசு அலுவலகங்கள் தமிழ்நாடு பெரும்பரப்பு வலையமைப்புடன் இணைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அரசுத் துறைகளின் மின் ஆளுமை முயற்சிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கான சேவைகள் துரிதமாக வழங்கப்படும்.         

அரசின் பல்வேறு துறைகளில், துறை சார்ந்த முடிவுகளை எடுப்பதற்காக இடம் சார், மற்றும் இடம் சாராத,  தரவுகளை சீராக இணைக்கும்  புவி சார் தகவல்கள் மிகவும் அவசியமானதாகும். இதனை நிறைவு செய்யும் வகையில், 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புவி சார் தகவல்களைக் கொண்ட ஒரு பொதுவான மின்னணு வரைபடக் காப்பக தளம் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த மின்னணு வரைபடக் காப்பகத் தளத்திலிருந்து தேவையான வரைபடங்களை, தேவைப்படும் துறைகள் பதிவிறக்கம் செய்து உபயோகிக்க, அனுமதி வழங்கப்படும்.  இதன் மூலம் அரசுத் துறைகளுக்கு மின்னணு வரைபடங்கள் சுலபமாக கிடைப்பதோடு அல்லாமல் தொழில்நுட்ப பக்கபலமும் கிடைக்கும்.

மின் ஆளுமையின் மூலம் பல்வகையான அரசின் சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்று அடைவதற்கென, சிறப்பு நோக்குத் துறைகள்  தேர்ந்தெடுக்கப்பட்டு, அத்துறைகள் முழுமையாக கணினிமயம் ஆக்கப்பட்டு வருகின்றன. இக்கணினிமயம் ஆக்கல் திட்டச்  செலவினங்களை இத்துறைகள் மேற்கொள்வதற்காக பிரத்தியேகமாக சிறப்பு நிதி ஒதுக்கீடு அரசால் செய்யப்பட்டு வருகிறது. 

இதே போன்று, சிறப்பு நோக்குத் துறைகள் அல்லாத மற்ற துறைகளிலும், மின் ஆளுமை முயற்சிகளை ஒருங்கிணைத்து பொது மக்களுக்கு அரசின் சேவைகளை வழங்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக ஒரு மின் ஆளுமை முயற்சிக்கான நிதி உருவாக்கப்படும். இதற்கென 10 கோடி ரூபாய் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் சிறப்பு நோக்குத் துறைகளில் மட்டுமன்றி, அனைத்து அரசுத் துறைகளிலும் அரசிடமிருந்து குடிமக்களுக்கு, அரசிடமிருந்து வணிகர்களுக்கு,  அரசிடமிருந்து அரசுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் சரியான நேரத்தில்,  சரியான இடத்தில், முறையாக மற்றும் விரைவாக  வழங்கப்படும். 

மேற்காணும் நடவடிக்கைகள், அரசின் சேவைகள் அனைத்துத் தரப்பு மக்களையும் விரைவாகவும், எளிதாகவும்  சென்றடைய வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

 

அரகண்டநல்லூர் பேரூராட்சியில் கணினியில் வரி ரசீது

Print PDF
தினமணி        04.05.2013

அரகண்டநல்லூர் பேரூராட்சியில் கணினியில் வரி ரசீது


திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் பேரூராட்சியில் கணினி மூலம் வரி ரசீதுகள் வழங்கும் சேவை செவ்வாய்கிழமை தொடங்கப்பட்டது.

இப்பேரூராட்சியில் இதுவரை வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி போன்ற வரிகள் ரசீது புத்தகம் மூலம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதில் ஒவ்வொருவரின் கணக்குகளையும் தேடி எடுத்து, ரசீது போட்டு அதை லெட்ஜரில் வரவு வைப்பது மக்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் சிரமமாக இருந்தது.

இந்த சிரமத்தைப் போக்கும் வகையில் இப்பேரூராட்சியில் கணினி மூலம் வசூலிக்கும் வரிகளுக்கு ரசீது வழங்கும் சேவை செவ்வாய்கிழமை முதல் தொடங்கப்பட்டது. பேரூராட்சித் தலைவர் ஏ.ஆர்.வாசிம்ராஜா சேவையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயலர் அலுவலர் செந்தில், துணைத் தலைவர் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 


Page 13 of 41