Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

வேலூர் மாவட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு சிம்கார்டு கலெக்டர் வழங்கினார்

Print PDF
தினத்தந்தி         26.04.2013

வேலூர் மாவட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு சிம்கார்டு கலெக்டர் வழங்கினார்


தமிழக அரசு சார்பில் பேரூராட்சிகள் இயக்குனரால் வேலூர் மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கும், பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க ஏதுவாக செல்போன் சிம்கார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சிம்கார்டுகளை கலெக்டர் சங்கர் வேலூர் மாவட்ட செயல் அலுவலர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
 

மாநகராட்சி பள்ளி குழந்தைகளின் கல்வித்திறன் மேம்படுத்த புதிய சாப்ட்வேர்

Print PDF
தினகரன்         20.04.2013

மாநகராட்சி பள்ளி குழந்தைகளின் கல்வித்திறன் மேம்படுத்த புதிய சாப்ட்வேர்

கோவை, : கோவை மாநகராட்சி பள்ளி குழந்தைகளின் கல்வித்திறனை மேம்படுத்த புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் 80க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயிலுகின்றனர். இவர்களது கல்வித்திறனை கணினி வழியாக மேம்படுத்த புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செயல்விளக்கம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. மேயர் செ.ம.வேலுசாமி, கமிஷனர் லதா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் செயல்விளக்கம் செய்துகாண்பித்தனர்.

இந்த புதிய சாப்ட்வேர் உதவியுடன் ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல், படித்துமுடித்துவிட்டு வெளியே செல்லும் வரை நன்னடத்தை, முன்னேற்றத்துக்கு தேவையான வழிமுறைகள் கற்றுத்தரப்படுகிறது. வினா-வங்கி, வினாத்தாள் உள்ளிட்ட மாடல்களும் உருவாக்கி கொடுக்கப்படுகிறது. பெற்றோர் வீட்டில் இருந்தபடியே தங்களது குழந்தைகளின் கல்வித்திறனை கம்ப்யூட்டர்வாயிலாக அறிந்து  கொள்ளும் வகையில் இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், கோவை மாநகராட்சி கல்வித்துறையில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
 

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் தமிழகத்தில் முதல் முறையாக ஜிபிஎஸ் கருவியுடன் மின்விளக்கு நகராட்சி நடவடிக்கை

Print PDF

தினகரன்                  05.04.2013

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் தமிழகத்தில் முதல் முறையாக ஜிபிஎஸ் கருவியுடன் மின்விளக்கு நகராட்சி நடவடிக்கை


தாம்பரம்: தாம்பரம் நகராட்சி சார்பில் தமிழகத்திலேயே முதன் முறையாக ஜி.எஸ்.டி. சாலையில் ரூ2 கோடி செலவில் ஜிபிஎஸ் கருவியுடன் தெருவிளக்கு அமைக்கப்படுகிறது.

தாம்பரம் நகராட்சி சார்பில் ஜிஎஸ்டி சாலை யில் ரூ2 கோடி மதிப்பில் 180 தெருவிளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த விளக்குகள் மற்றும் கம்பங்கள் அகற்றப் பட்டு, புதிதாக சாலையின் நடுவே 9 மீட்டர் உயரத்தில், 28 மீட்டர் இடைவெளியில், 3 கிலோ மீட்டர் தூரம் மின் விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு அதிக போக்குவரத்து இருப்பதால் இந்த நவீன மின்விளக்குகள் அமைக்கப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி தலைவர் கரிகாலன் கூறுகையில், இங்குள்ள மின்விளக்கு 270 வாட்ஸ் கொண்டவை. இப்போது அமைக்கப்படும் மின்விளக்கு 210 வாட்ஸ். நள்ளிரவு நேரத்தில் தானாகவே 210ல் இருந்து 150 வாட்சாக குறையும். இதனால், மின்சாரம் சேமிக்கப்படும். மேலும் மாதம் ரூ4 லட்சம் நகராட்சி மூலம் மின்வாரியத்துக்கு செலுத்தப்படுகிறது. இந்த தொகையும் குறையும்.

இந்த நவீன மின்விளக்குகள் அமைக்கப்படுவதால், ரூ2.50 லட்சம் மட்டும் மின்வாரியத்துக்கு கட்டவேண்டி வரும். இந்த மின்விளக்குகளில் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்படுகிறது. இதனால், அலுவலகத்தில் இருந்து மின்விளக்குகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், பராமரிக்கவும் முடியும். ஏப்ரல் 14ம் தேதி இந்த விளக்குகள் இயக்கப்படும் என்றார். தற்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Page 14 of 41