Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

இணையதளத்தில் விண்ணப்பிப்போருக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் கூரியரில் அனுப்பப்படாது மாநகராட்சி முடிவு

Print PDF

தினகரன்           24.11.2010

இணையதளத்தில் விண்ணப்பிப்போருக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் கூரியரில் அனுப்பப்படாது மாநகராட்சி முடிவு

புதுடெல்லி, நவ. 24: இணையதளத்தில் விண்ணப்பிப்போருக்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனை அல்லது மண்டல அலுவலகத்தில் மட்டுமே பிறப்பு, இறப்பு சான்றிதழ் தரப்படும். இனிமேல் கூரியரில் இவை அனுப்பப்படாது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை தலைவர் வி.கே.மோங்கா கூறியதாவது:

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற மாநகராட்சியின் இணையதளத்திலேயே பதிவு செய்யும் வசதியை, சுகாதாரத்துறை அறிமுகப்படுத்தியது. கிரெடிட் கார்டு மூலம் இந்த சான்றிதழ்களுக்கு பணம் செலுத்திவிட்டால் போதும். அவர்களின் தகவல்களின் அடிப்படையில் கூரியர் மூலம் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

ஆனால், இணையதள வசதியை பயன்படுத்திக் கொண்டு பலர் போலி தகவல்களை தெரிவித்து இந்த ஆவணங்களை பெற்று வருவது தெரியவந்தது. இதனால் இனிமேல் இணையதளத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு கூரியர் மூலம் சான்றிதழ் அனுப்புவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மண்டல அலுவலகங்களில் மட்டுமே பெற்று கொள்ள வேண்டும் என்று புதிய விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணையதளத்தில் பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்போர், மருத்துவமனையில் குழந்தை பிறந்திருந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். வீட்டிலேயே குழந்தை பிறந்திருந்தால், மண்டல அலுவலகத்துக்கு சென்று பிறப்பு சான்றிதழை பெறலாம்.முதலில் மாநகராட்சியின்

ஷ்ஷ்ஷ்.னீநீபீஷீஸீறீவீஸீமீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளத்துக்கு சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும். இணையதளத்துடன் நகரில் உள்ள 281 மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தினமும் பிறப்பு, இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்படுகிறது என்றார்

 

குரூஸ் பர்னாந்து: குறுந்தகடு வெளியீடு

Print PDF

தினமணி            20.11.2010

குரூஸ் பர்னாந்து: குறுந்தகடு வெளியீடு

தூத்துக்குடி, நவ. 19: தூத்துக்குடி நகராட்சி முன்னாள் தலைவரான குரூஸ் பர்னாந்து குறித்த குறுந்தகட்டை ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எம்.பி. சுடலையாண்டி வெளியிட்டார்.

தூத்துக்குடி நகராட்சியில் 13 ஆண்டுகள் தலைவராக பணியாற்றியவர் குரூஸ் பர்னாந்து. தூத்துக்குடி நகருக்கு தாமிரபரணியில் இருந்து தனிக் குழாயில் தண்ணீர் கொண்டு வந்த இவர், தூத்துக்குடி நகரின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

இவரைப் பற்றி மாநகராட்சி ஊழியர் ரஸ்கின் எழுதிய பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா தூத்துக்குடி மட்டக்கடையில் நடைபெற்றது. விழாவில், சுடலையாண்டி எம்.எல்.. கலந்து கொண்டு குறுந்தகட்டை வெளியிட்டு பேசினார். பாடல்களை மதுரை மாயா இசைக்குழுவைச் சேர்ந்த யூசுப் என்பவர் பாடியுள்ளார். விழாவுக்கு காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவர் ரவிவர்மா தலைமை வகித்தார்.

விழாவில், ஓய்வு பெற்ற நகராட்சி, மாநகராட்சி ஊழியர் சங்க மண்டலத் தலைவர் ஆர். மாடசாமி, முன்னாள் துறைமுக ஊழியர் வில்சன், காங்கிரஸ் மாநில பேச்சாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இணையதளத்தில் டெல்லியின் முப்பரிமாண தோற்றம்

Print PDF

தினகரன்              16.11.2010

இணையதளத்தில் டெல்லியின் முப்பரிமாண தோற்றம்

புதுடெல்லி, நவ. 16: நாட்டிலேயே முதல் முறையாக டெல்லி நகரின் முப்பரிமாண தோற்றம் விரைவில் இணையதளத்தில் வெளியாக உள்ளது. நகரில் ஆங்காங்கே வயர்லஸ் கேமராக்கள் வைக்கப்படுவதால், அறையில் இருந்தபடி போக்குவரத்தை கட்டுப்படுத்துவது, அங்கீகாரமற்ற கட்டுமானங்களையும் கண்காணிப்பது என்று சகல பணிகளையும் மேற்கொள்ள முடியும்.

லேண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்’ (எல்..எஸ்.) என்ற பெயரில் நகரின் முப்பரிமாண தோற்றத்தை உருவாக்கும் திட்டத்துக்காக மாநில அரசு ரூ120 கோடி ஒதுக்கியது.

இத்திட்டத்தை மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயல்படுத்தி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் நகரின் மருத்துவமனைகள், பூங்காக்கள், சாலைகள், தெருக்கள், பூமிக்கடியில் செல்லும் போன் கேபிள், குடிநீர் குழாய்கள், சமையல் எரிவாயு குழாய்கள், கழிவு நீர் குழாய்கள் போன்ற எல்லாவற்றையும் டிஜிட்டல் வடிவத்தில் படம் பிடித்து கம்ப்யூட்டரில் பதிவு செய்துள்ளது. இதேபோல் கட்டிடங்களின் படங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில் கம்ப்யூட்டரில் வீடியோ கேமில் பார்ப்பது போன்று ஒரு சாலையில் இருந்து அப்படியே கடந்து கொண்டே சென்று நகரை பார்க்கலாம். அதேபோல், ஆகாய மார்க்கமாக விமானத்தில் இருந்து பார்ப்பது போன்றும் பார்க்கலாம். இந்த முப்பரிமாண நகரின் டிஜிட்டல் வரைபடம் தயாரிப்பு திட்டம் முடிவடையும் தருவாயில் உள்ளது. அடுத்த மாதத்தில் இதற்கான பணிகள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டிலேயே எந்த நகரத்தின் முப்பரிமாண வரைபடமும் இதுவரையில் தயாரிக்கப்படவில்லை. டெல்லி அரசுதான் முதல் முறையாக இத்தகைய வரைபடத்தை தயாரிக்கிறது. இத்திட்டத்தின் அடுத்தக்கட்டம் நகரின் எல்லா பகுதிகளிலும் வயர்லஸ் கேமரா பொருத்தப்பட்டு இந்த டிஜிட்டல் வரைபடத்துடன் இணைக்கப்படும். இதைக் கொண்டு போக்குவரத்து நெரிசலை எப்படி தீர்க்க முடியும் என்பதை போலீசார் உடனடியாக முடிவு எடுக்க முடியும். அதாவது ஒரு இடத்தில் நெரிசல் ஏற்பட்டால், அதற்கு முன்னதாக எந்த வழியில் இருந்து போக்குவரத்தை திருப்பி விட முடியும் என்பதை அறையில் இருந்தபடியே பார்த்து அப்பகுதியில் உள்ள போலீசாருக்கு உத்தரவிட முடியும்.

இதேபோல் ஏற்கனவே கட்டிடங்களின் படங்கள் அனைத்தும் உள்ளதால், அனுமதியின்றி யாராவது கட்டிடம் கட்டுவதோ, முன் அனுமதி இல்லாமல் சாலைகளை தோண்டுவதோ போன்றவற்றை கண்காணிக்கலாம். இயற்கை சீற்ற காலங்களில் பொதுமக்களை பாதுகாக்க இந்த முப்பரிமாண வரைபடம் மிகவும் உதவும்.

விரைவில் இந்த முப்பரிமாண வரைபடம் இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த இணையத்தில் அரசின் எல்லா துறைகளும் இணைக்கப்பட உள்ளன. இதனால் ஒரே இணையதளத்தில் அரசு சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும்.

நாட்டிலேயே முதல் முறை

 


Page 20 of 41