Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

ஒப்பந்த துப்புரவு பணியாளருக்கு கைரேகை வருகைப்பதிவு முறை

Print PDF

தினமலர் 05.01.2010

ஒப்பந்த துப்புரவு பணியாளருக்கு கைரேகை வருகைப்பதிவு முறை

கோவை : கோவை மாநகராட்சி வார்டுகளில், துப்புரவு பணி மேற்கொள்ள பணியாளர்களும், மேற்பார்வையாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய, ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 416 துப்புரவு பணியாளர்களையும், 19 மேற்பார்வையாளர்களையும் மாநகராட்சி நியமனம் செய்துள்ளது. 20 துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் வீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளரோடு இணைந்து பணிமேற்கொள்வர்.

மேற்கு மண்டலத்தில் 130 பணியாளர்களும், ஆறு மேற்பார்வையாளரும், தெற்கு மண்டலத்திற்கு 70 பணியாளர்களும், நான்கு மேற்பார்வையளாரும் சனிக்கிழமை நியமிக்கப்பட்டனர். இன்று பணிகளை துவக் கினர்.
கிழக்கு மண்டலத்திற்கு 88 பணியாளர்களும், ஐந்து மேற்பார்வையாளரும், வடக்கு மண்டலத்திற்கு 128 பணியாளர்களும், ஆறு மேற்பார்வையாளர்களும் நேற்று நியமிக்கப்பட்டனர். இவர்கள் புதன்கிழமை முதல் பணி மேற்கொள்வர்.

ஒவ்வொருவரும் வார்டு அலுவலகத்தில் வருகையை உறுதி செய்து கொள்ள, வருகைப் பதிவு இயந்திரத்தில், கைரேகையை பதிவு செய்ய வேண்டும்; நேரம் தவறும்பட்சத்தில் சம்பளத்தொகையில் இழப்பு ஏற்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஒவ்வொரு துப்புரவு பணியாளருக்கும் மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை மற்றும் ஒப்பந்த நியமன உத்தரவை மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக் வழங்கினர்.

Last Updated on Tuesday, 05 January 2010 07:16
 

மாநகராட்சி வரி விவரங்கள் அறிய திரை தொடு கணினி அமைக்க திட்டம்

Print PDF

தினமணி 31.12.2009

மாநகராட்சி வரி விவரங்கள் அறிய திரை தொடு கணினி அமைக்க திட்டம்

வேலூர், டிச. 29: மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி விவரங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ள ரூ.3 லட்சத்தில் "திரை தொடு கணினி' அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

வேலூரில் மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் வரி வசூல் மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில், பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி விவரங்களை எளிதில் அறிந்துகொள்ளத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித்தர மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தற்போது சேவை மையத்தை நேரில் அணுகியே இவ்விவரங்களைப் பொதுமக்கள் பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து தாங்களே அறிந்து கொள்ளும் வகையில் ரூ.3 லட்சத்தில் இந்த திரை தொடு கணினியை வாங்கி மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளது.

இதேபோல் வரி வசூல் மையங்களில் பொதுமக்கள் சொத்துவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர். இதனை மேலும் சிறப்பாகச் செயல்படுத்த "கையடக்க வரி வசூல் இயந்திரம்' வாங்கவும் திட்டமிட்டுள்ளது.

வருவாய் உதவியாளர்கள் எவ்வித சிரமமின்றி எளிதாக இயக்கும்படி இந்த இயந்திரம் அமைந்துள்ளது. பொதுமக்கள் வரி கட்டியதும் உடனடியாக கணினி ரசீது கொடுக்க முடியும். வரி விதிப்புகளைத் திருத்தவோ, மாற்றவோ முடியாது.

எனவே சொத்துவரி வசூலுக்கு 8 கருவிகளும், தொழில்வரி வசூலுக்கு ஒன்றும், வரியில்லா இனம் வசூலிக்க ஒன்றும் என மொத்தம் 10 இயந்திரங்கள் ரூ.6 லட்சத்தில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் கேட்டு புதன்கிழமை நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன.

 

பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப கணினி மையம் : மாநகராட்சி

Print PDF

தினமணி 24.12.2009

பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப கணினி மையம் : மாநகராட்சி

திருப்பூர்,டிச.23: திருப்பூர் மாநகராட்சியில் பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப வரி செலுத்த 6 இடங்களில் கணினி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் சொத்துவரி, தண்ணீர் கட்டணத்தை மாநகராட்சியில் செலுத்தி வந்தனர். அனைவரும் ஒரே இடத்தில் செலுத்த நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்திற்கொண்ட மாநகராட்சி நிர்வாகம். பொதுமக்கள் வசதிகேற்ப அந்தந்த பகுதியில் வரிவசூல் செய்ய 6 இடங்களில் கணினி மையம் திறக்க முடிவு செய்யப்பட்டன.

இதனைதொடர்ந்து புதன்கிழமை ராயபுரம், பூச்சக்காடு பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் வரிகளை செலுத்த கணினிமையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டன.

மேலும், அவினாசி சாலை பாரதியார் நீர்த்தேக்க தொட்டி வளாகம், என்.ஆர்.கே புரம் நீர்த்தேக்கத்தொட்டி, பெரிச்சிபாளையம் நீர்த்தேக்கத்தொட்டி, தாராபுரம்

சாலையிலுள்ள நீர்த்தேக்க தொட்டி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் வரி செலுத்துவதற்காக கணினி மையம் வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளன.

இது குறித்து மாநராட்சி ஆணையாளர் ஆர்.ஜெயலட்சுமி கூறியது: பொதுமக்கள் வசதிகாக அமைக்கப்பட்டுள்ள கணினி மையத்தை பயன்படுத்தி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை வரி செலுத்தலாம். மாநகராட்சி அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வரிசெலுத்தலாம் என்றார்.

Last Updated on Thursday, 24 December 2009 10:21
 


Page 34 of 41