Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வாகன காப்பகத்தில் “ஸ்மார்ட் கார்டு” முறை மேயர் விஜிலா சத்யானந்த் தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி            27.08.2013

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வாகன காப்பகத்தில் “ஸ்மார்ட் கார்டு” முறை மேயர் விஜிலா சத்யானந்த் தொடங்கி வைத்தார்

 

 

 

 

 

நெல்லை புதிய பஸ் நிலைய வாகன காப்பகத்தில் “ஸ்மார்ட் கார்டு“ முறையை மேயர் விஜிலா சத்யானந்த் நேற்று தொடங்கி வைத்தார்.

வாகன காப்பகம்

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது. வெளியூர் செல்லும் பயணிகள் தங்கள் வாகனங்களை அங்கு நிறுத்தி விட்டு செல்கிறார்கள். இதனால் ஏராளமான பயணிகள் பயன்பெற்று வருகிறார். இந்த வாகன காப்பகம் மாநகராட்சி நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டு உள்ளது.

கட்டணம்

இந்த வாகன காப்பகத்தில் சைக்கிளுக்கு ரூ.3, மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5, ஆட்டோவுக்கு ரூ.10, காருக்கு ரூ.15, வேனுக்கு ரூ.20 என வசூல் செய்யப்படுகிறது. இந்த வாகன காப்பகத்தில் ஏற்கனவே “ஸ்மார்ட் கார்டு“ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நிறுத்தப்பட்டது. தற்போது ஸ்மார்ட் கார்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கார்டு நவீனமுறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் அறிமுக விழா நெல்லை புதிய பஸ் நிலைய வாகன காப்பகத்தில் நேற்று நடந்தது. மேயர் விஜிலா சத்யானந்த தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல தலைவர் எம்.சி.ராஜன், மாநகராட்சி பொறியாளர் ஜெய்சேவியர், உதவி செயற்பொறியாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கம்ப்யூட்டரில் பதிவு

பயணிகளுக்கு, ஸ்மார்ட் கார்டு கொடுக்கும் நேரம் கம்ப்யூட்டரில் பதிவாகி விடும். ஒரு மாதத்துக்கூட கார்டு வாங்கிக் கொள்ளலாம். ஒருவேளை கார்டு தவறி விட்டால், வண்டி எண் மூலம் கம்ப்யூட்டரில் பதிவை கண்டுபிடித்து விடலாம். ஆனால், தொலைந்த ஸ்மார்ட் கார்டுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

 

10,000 பேருந்துகள் வாங்குவதற்கு அமைச்சரவை குழு அனுமதி

Print PDF

தினமணி              16.08.2013

10,000 பேருந்துகள் வாங்குவதற்கு அமைச்சரவை குழு அனுமதி

ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் (ஜேஎன்என்யுஆர்எம்) கீழ், நகர்ப்புறப் போக்குவரத்துக்கு 10,000 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான நிதியை வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டத்தில் மலைப்பிரதேச மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், அனைத்து நகரங்களுக்கும் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

புது தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ஜேஎன்என்யுஆர்எம் திட்டத்தின் கீழ் பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கும், துணை உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவதற்கும் ரூ. 6,300 கோடி செலவாகும்.

இந்த வகையில், கூடுதல் மத்திய உதவி சுமார் 4,450 கோடியாக உள்ளது.

இந்த நிதி, குறிப்பாக பெருநகரங்களிலும், நகரங்களிலும் நகர்ப்புறப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு உதவிடும் என்று அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

திருத்தங்கலில் ரூ. 3.69 கோடியில் புதிய பஸ் நிலையம்

Print PDF

தினமணி                28.06.2013

திருத்தங்கலில் ரூ. 3.69 கோடியில் புதிய பஸ் நிலையம் 

திருத்தங்கலில் ரூ. 3.69 கோடியில் புதிய பஸ் நிலையம்  திருத்தங்கல் நகராட்சியில் ரூ. 3.69 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக நகர்மன்றத் தலைவர் தனலட்சுமி கணேசமூர்த்தி, துணைத் தலைவர் பொ.சக்திவேல் ஆகியோர் தெரிவித்தனர்.

 இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

  விருதுநகர் மாவட்டத்தில் திருத்தங்கல் நகர் ஒரு வளர்ந்துவரும் நகராகும். நகரில் தீப்பெட்டி, அச்சுத் தொழில் உள்ளிட்ட பல தொழில்கள் நடைபெற்று வருகின்றன.திருத்தங்கல் நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்னர், பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

  பொதுமக்கள் கோரிக்கையை முதல்வருக்கு அனுப்பி வைத்தோம். பின்னர், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் திருத்தங்கலில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தினார். இதையடுத்து, திருத்தங்கல்-விருதுநகர் சாலையில் கருப்பசாமி கோவிலருகே நகராட்சிக்குச் சொந்தமான 1.54 ஏக்கர் பரப்பளவில் சி கிளாஸ் பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

  இதையடுத்து, அதற்கான வரைபடம் தயாரித்து மதுரை நகர் ஊரமைப்பு துணை இயக்குநரால் ஒப்புதல் பெறப்பட்டது. பஸ் நிலையம் அமைக்கத் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. மதிப்பீட்டுத் தொகை ரூ. 3.69 கோடி. பஸ் நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீட்டுத் தொகையை அரசிடம் பெற நகராட்சி நிர்வாக ஆணையரகத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.

   இதைத் தொடந்து, புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு முதல்வரால் மானியக் கோரிக்கையில் உத்தரவு வழங்கப்பட்டது. அதன்படி, நகராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு மதிப்பீட்டுத் தொகை ரூ. 3.69 கோடி நிர்வாக அனுமதி பெறுவதற்கு நகராட்சி நிர்வாக ஆணையாளர் (சென்னை)க்கு பிரேரணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் பஸ் நிலையம் அமைக்க பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

 


Page 6 of 57