Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

பயணியர் நிழற்குடை பணி: எம்.பி. ஆய்வு

Print PDF

தினமணி            24.08.2012

பயணியர் நிழற்குடை பணி: எம்.பி. ஆய்வு

செங்கம், ஆக. 23: செங்கம் பேரூராட்சி சார்பில் புதிய பஸ் நிலையத்தில் நடைபெறும் புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணிகளை திருவண்ணாமலை எம்.பி. த.வேணுகோபால் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

செங்கம் துக்காப்பேட்டை புதிய பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 25 லட்சம், செங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சம் என மொத்தம் ரூ. 40 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு வருகிறது.

இப் பணிகளை த.வேணுகோபால் எம்.பி. பார்வையிட்டு பணிகள் தரமாக நடைபெற்றுள்ளதா என ஆய்வுசெய்தார். பின்னர் புதிய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பேரூராட்சித் தலைவர் சென்னம்மாள் முருகன், திமுக ஒன்றியச் செயலர் க.பிரபாகரன், நகரச் செயலர் சாதிக்பாஷா, மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவர் மு.பெ.கிரி, கவுன்சிலர்கள் செந்தில்குமார், அப்துல்வாகித், பன்னீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

அவினாசி புதிய பஸ் நிலையம் சீரமைப்பு பணி தீவிரம்

Print PDF

தினகரன்      23.08.2012

அவினாசி புதிய பஸ் நிலையம் சீரமைப்பு பணி தீவிரம்

அனுப்பர்பாளையம்,;  அவினாசி புதிய பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.


அவினாசி நகரம் தேசிய நெடுஞ்சாலை 47-ல் அமைந்துள்ளது. அவினாசியின் வழியாக தினசரி  3000-க்கும் மேற்பட்ட பஸ்கள், 4 சக்கர வாகனங்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள மைசூர், பெங்களூர், பாலக்காடு போன்ற நகரங்களுக்கும் சென்று வருகின்றன. இவை போக, டவுன் பஸ்கள் மற்றும் மினி பஸ்களும் அதிகளவில் உள்ளன. மேலும் பனியன் தொழிலாளர்களின் இரு சக்கர வாகனங்களும் ஆயிரக்கணக்கில்  சென்று வருகின்றன.

அவினாசி கைகாட்டிபுதூரில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தும்,   அந்த புதிய பஸ்நிலையதிற்குள் வர பஸ் ஓட்டுனர்கள் மிரளுகின்ற அளவிற்கு  இங்கு 6 வருடங்களாக குண்டும் குழியுமாகவே இருந்தது.

அவினாசி புதிய பஸ் நிலையத்தை சீரமைக்க, பொதுமக்கள் பல ஆண்டு காலமாக கோரி வந்தனர். இதையடுத்து, ஒருங்கினைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ், அவினாசி புதிய பஸ் நிலையத்தை சீரமைப்பதற்காக ரு. 1.20 கோடி செலவில் நிதி ஒதுக்கப்பட்டு,  கடந்த பிப்ரவரி மாதம்   தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

கடந்த ஏழு மாதகாலமாக புதிய பஸ் நிலைய ஓடுதள சீரமைப்புப்பணிகள் மிகவும் மெதுவாக நடந்து வந்தன. இதனால் பொது மக்கள் புழுதியிலும்,சாலை ஓரத்திலும் அங்கும் இங்கும் ஓடி நிற்கின்றனர். ஏழு மாதமாக வெளியூர் பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல முடிவதில்லை இதனால் எந்த பஸ் எங்கு நின்று செல்கிறது என்று தெரியாமல் பொது மக்கள் குழப்பம் அடைந்து வந்தனர். எனவே,ரூ ரு. 1.20 கோடி செலவில் நடைபெறும் அவினாசி புதிய பஸ் நிலைய ஓடுதள சீரமைப்புப்பணிகளை விரைவு படுத்த வேண்டும் என பொது மக்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர்.

சமீபத்தில் கடந்த வாரம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் அவினாசி புதிய பஸ் நிலையப்பணிகளை நேரில் பார்த்து ஆய்வு செய்து, புதிய பஸ் நிலைய ஓடுதள சீரமைப்புப் பணிகளை விரைவு படுத்த உத்தரவிட்டார்.  இதனையடுத்து, அவினாசி புதிய பஸ் நிலைய   ஓடுதளத்தில் கான்கிரீட்  அமைக்கும் பணிகளை ஏழு மாதங்களுக்கு பிறகு மிக வேகமாக  செய்து வருகின்றனர்.

 

ரூ.4 கோடியில் அடுக்குமாடி இரு சக்கர வாகன நிறுத்தம்

Print PDF

தினமலர்             20.08.2012

ரூ.4 கோடியில் அடுக்குமாடி இரு சக்கர வாகன நிறுத்தம்

சென்னை:சென்னையில் முதல் முறையாக, நெருக்கடி நிறைந்த பாரிமுனை என்.எஸ்.சி., போஸ் சாலையில், நான்கு கோடி ரூபாயில், அடுக்கு மாடி, இரு சக்கரவாகன நிறுத்தத்தை மாநகராட்சி அமைக்கிறது.சென்னை பாரிமுனை எப்போதும் பரபரப்புடன் காணப்படும் பகுதி. இங்கு வர்த்தக மையங்கள், மொத்த நிறுவனங்கள், நகைக்கடைகள், கிடங்குகள் நிறைந்துள்ளதோடு, ஐகோர்ட்டும் உள்ளதால், தினமும் பல ஆயிரம் பேர் இங்கு வந்து செல்கின்றனர். இந்த பகுதியில், இருசக்கர வாகனங்களைக் கூட நிறுத்த வழியில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகமாக உள்ளது.9,000 சதுர அடியில்...இதைக் கருத்தில் கொண்டு, பாரிமுனை என்.எஸ்.சி., போஸ் சாலையில், அடுக்குமாடி இரு சக்கர வாகன நிறுத்த மையம் அமைக்கப்படும் என மாநகராட்சி அறிவித்தது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த அறிவிப்பை, மாநகராட்சி தற்போது துரிதப்படுத்தியுள்ளது."டுபிசல்' நிறுவன உதவியோடு, ஆலோசனை நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, இதற்கான வரைவுத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தரைத்தளம் மற்றும் நான்கு அடுக்கு மாடிகளுடன், மொத்தம், 9,000 சதுர அடியில், வாகன நிறுத்த மையம் அமைக்கப்பட உள்ளது. 800 முதல் ஆயிரம் இருசக்கர வாகனங்களை இந்த மையத்தில் நிறுத்த முடியும்.இதில், தளங்களை இணைக்கும் தாய் தள வசதி, கண்காணிப்பு கேமரா, தீ விபத்து பாதுகாப்பு கட்டமைப்பு, சூரிய சக்தி விளக்கு ஆகிய வசதிகள் அமைகின்றன. இதற்கு, 4.06 கோடி ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறும்போது, ""இந்த திட்டத்திற்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் துவங்கும். இதுபோன்று, தி.நகர் பனகல் மாளிகை அருகே, பாஷ்யம் சாலையில், அடுக்குமாடி கார் நிறுத்த மையம் அமைக்கவும், திட்ட வரைவு தயாராகி வருகிறது. விரைவில் அந்தப் பணிகளும் துவங்கும்,'' என்றார்.இதுதவிர, சென்னையில், கார் நிறுத்த மையம் அமைக்க வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து, வடிவமைத்தல், கட்டுதல், பராமரித்தல், ஒப்படைக்கும் முறையில், பணிகளை மேற்கொள்ள உலகளாவிய அளவில், ஆர்வம் காட்டும் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நிலவும் நெருக்கடி நிலைக்கு, இத்தகைய முயற்சிகள் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated on Monday, 20 August 2012 07:17
 


Page 10 of 57