Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ரூ. 17 கோடியில் இரண்டடுக்கு வாகனம் நிறுத்தும் வளாகம்

Print PDF

தினகரன்          27.12.2010

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ரூ. 17 கோடியில் இரண்டடுக்கு வாகனம் நிறுத்தும் வளாகம்

சென்னை, டிச. 27:

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ரூ. 17 கோடியில் 6,000 சதுரமீட்டர் பரப்பளவில் இரண்டடுக்கு தாழ்தள இரு சக்கர வாகன நிறுத்தும் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமை தாங்கினார். டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி., .ரங்கநாதன் எம்எல்ஏ, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அரசு செயலாளர் அசோக் டோங்ரே, கவுன்சிலர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணை முதல்வர் மு..ஸ்டாலின் வாகன நிறுத்தத்தை தொடங்கி வைத்து, சிறிது நேரம் வாகன நிறுத்தத்தை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர் வெ.கண்ணுச்சாமி, உறுப்பினர் செயலர் தயானந்த் கட்டாரியா, துணை தலைவர் சூசன் மாத்யூ, மண்டல குழு தலைவர் கே,தனசேகரன், கோயம்பேடு பேருந்து நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது: கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு தினமும் 10 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக இந்த வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகளுக்கும், பாதுகாப்பிற்கும் வழிவகை செய்யும் வீதத்தில் தீயணைப்பு வசதி, கண்காணிப்பு கேமிரா போன்றவை அமைக்கப்பட்டுள் ளது. வாகன நிறுத்துமிடம் தரைக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்தாலும், பூமியின் மேற்பரப்பில் கூரைப்பூங்கா அமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. பூங்காவில் செயற்கை மணற்பாறைகளில் அமைக்கப்பட்ட நீரூற்றுகளும், நீர் வீழ்ச்சிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2008ம் ஆண்டு துணை முதல்வர் மு..ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

 

சேலத்தில் ரூ.1 கோடி அபராதம் வசூல்

Print PDF
தினமலர்      24.12.2010

சேலத்தில் ரூ.1 கோடி அபராதம் வசூல்


சேலம்: ""தமிழக அளவில் போக்குவரத்து விதி மீறிய வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து, சேலம் போலீஸார் ஒரு கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளனர்,'' என, போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங் தெரிவித்தார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் மாநகரில் கடந்த பத்து ஆண்டுகளை காட்டிலும், மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அப்போது, போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய 100 போலீஸாரே, இப்போதும் பணியாற்றி வருகின்றனர். வாகன பெருக்கம் மற்றும் ஜன தொகை அதிகரித்துள்ள நிலையில், குறைந்தளவு போக்குவரத்து போலீஸார் மூலம் முழு அளவில் போக்குவரத்து விபத்து மற்றும் குற்றங்களை தடுப்பது எளிதான காரியம் அல்ல. சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில், "ஸ்பாட் ஃபைன்' சிஸ்டம் அமலில் உள்ளது. இந்த, "ஸ்பாட் ஃபைன்' சிஸ்டம் மூலம் போக்குவரத்து விதி முறை மீறும் வாகனங்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, போலீஸார் அபாராதம் விதிக்க முடியும். ஆனால், சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களில், "ஸ்பாட் ஃபைன்' சிஸ்டம் இல்லாததால், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கு பதிவு செய்து, வாகன ஓட்டிகளுக்கு, "சம்மன் சர்வ்' செய்து, நீதி மன்றம் மூலம் அபாராதம் விதித்து, வசூல் செய்வதில் பல்வேறு நடைமுறைகளை கடை பிடிக்க வேண்டியுள்ளது. பெங்களூரு, சென்னை நகரங்களில் (டி.ஆர்.எம்.எஸ்.,) டிரான்ஸ்போர்ட் ரெகுலேஷன் மானிட்டரிங் சிஸ்டம் அமலில் உள்ளது. இதன் மூலம், "கன்ட்ரோல் ரூம்'மில் நான்கு போலீஸார் அமர்ந்து கொண்டு, நகரின் அனைத்து பகுதியிலும் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா மூலம் வாகன விதி முறை மீறல்களை கண்காணித்து, அபராதம் விதிக்க முடியும். குறைவான போக்குவரத்து போலீஸாரை கொண்டு, தொழில்நுட்ப அடிப்படையில் போக்குவரத்து விதி முறை மீறலை தடுக்க முடியும். சேலம் மாநகரத்தில் 2010 ஜனவரி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை போக்குவரத்து விதி மீறியதாக 73 ஆயிரத்து 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், "ஹெல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது மட்டும் 25 ஆயிரத்து 325 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அளவில் போக்குவரத்து விதி மீறிய வழக்குகளில் சேலம் மாநகர போலீஸ் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக அபாரதம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளனர். போக்குவரத்து விதி முறை மீறிய வழக்குகளில் சிக்கியவர்களிடம் இருந்து ஒரு கோடியே 20 லட்சத்து 83 ஆயிரத்து 115 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகர பகுதியில் கள்ளச்சாராயம் என்பது கிடையாது. மாநகர எல்லைக்கு அப்பால் உள்ள மாவட்ட பகுதியில் இருந்து கள்ளச்சாராய வியாபாரிகள் நகருக்குள் ஊடுருவி சாராயம் விற்பனை செய்கின்றனர். சாராயம் விற்பனை செய்பவர்களை போலீஸார் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார், என்றார்.

கண்டு கொள்ளாத மாநகராட்சி போலீஸ் கமிஷனர் எரிச்சல் : மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங் கூறும் போது, ""போக்குவரத்து விதி முறை மீறல், விபத்து சம்பவங்களை முழு அளவில் கட்டுப்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். மாநகர போலீஸ் துறை மூலம் மட்டுமே போக்குவரத்து குற்றங்களை தடுத்துவிட முடியாது. மாநகராட்சி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து செயல்பட முன் வர வேண்டும். சேலத்தை பொருத்த வரை சாலை வசதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலை வசதி மேம்படுத்த வேண்டியது மாநகராட்சி தான். ஒரு ஆண்டுக்கு முன் மாநகர பகுதியில் மெயின் ரோடுடன் இணையும் 250 குறுக்கு சாலைகளை போலீஸார் கண்டறிந்து, அந்த இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டி மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை ஒரு இடத்தில் கூட வேகத்தடை அமைக்கப்படவில்லை. சேலத்தில் உள்ள 3.5 லட்சம் வாகனங்களுக்கு தேவையான சாலை வசதி, இல்லாத நிலையில் போக்குவரத்து விதி மீறல், விபத்துக்களை தடுப்பது என்பது மிகவும் சிரமம்,'' என்றார்.
 

ரூ. 24 லட்சத்தில் பஸ் நிறுத்தம்

Print PDF

தினமணி           07.12.2010

ரூ. 24 லட்சத்தில் பஸ் நிறுத்தம்

விழுப்புரம், டிச. 6: விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் ரூ.24 லட்சத்தில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தத்தை துணை முதல்வர் மு..ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டப்பட்ட இந்த பஸ் நிறுத்தத்தை திறந்து வைத்த துணை முதல்வர், கே.கே.சாலையில் நகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மின்மயானத்தை பார்வையிட்டார்.

அங்கு கந்தசாமி மரகதம்மாள் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட அமரர் ஊர்திக்கான சாவியை மின் மயான திட்ட பொறுப்பாளர் ரோட்டரி ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சியர் ஆர். பழனிச்சாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ந.வெங்கடாசலம், விசாலாட்சி பொன்முடி, சட்டபேரவை உறுப்பினர் செ.புஷ்பராஜ், நகர்மன்றத் தலைவர் இரா.ஜனகராஜ், நகராட்சி ஆணையர் அ..சிவக்குமார், பொறியாளர் கோ.பார்த்திபன், தளபதி நற்பணி மன்ற தலைவர் பொன்.கெüதமசிகாமணி, செயலர் சி.செல்வராஜ், நகரச் செயலர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கலைஞர் அறிவாலயம் அருகில் அவருக்கு திமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட அவைத் தலைவர் கே.எஸ். மஸ்தான், பொருளாளர் புகழேந்தி, வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் கு.ராதாமணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் மைதிலி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 14 of 57