Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

வீரவநல்லூரில் பயணிகள் நிழற்குடை திறப்பு

Print PDF

தினமணி                02.11.2010

வீரவநல்லூரில் பயணிகள் நிழற்குடை திறப்பு

அம்பாசமுத்திரம், நவ. 1: வீரவநல்லூரில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா, உள்ளாட்சி தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வீரவநல்லூர் பஸ் நிலையத்தில் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா, உள்ளாட்சி தினவிழா பேரூராட்சித் தலைவர் வி.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ரா. கோகிலா முன்னிலை வகித்தார்.

விழாவில் பா. வேல்துரை எம்.எல்.. பயணிகள் நிழற்குடையை திறந்துவைத்து பேசினார்.

பேரூராட்சி உறுப்பினர்கள் பி. ரவிச்சந்திரன், பி. குமார், எம்.. ரஹ்மான், கே.எஸ். திருமலையப்பன், நடராஜன், பூமிநாதசுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முடிவில் நிர்வாக அதிகாரி சங்கரன் நன்றி கூறினார்.

 

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் சீரமைப்பு பஸ் போக்குவரத்தில் மாற்றம்

Print PDF

தினகரன்                02.11.2010

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் சீரமைப்பு பஸ் போக்குவரத்தில் மாற்றம்

நாகர்கோவில், நவ.2: நாகர்கோவில், மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் நிலையம் சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியு மாக மாறிவிட்டது.

பஸ் ஸ்டாண்டை சீர மைக்க நாகர்கோவில் நகராட்சியால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அரசால் ரூ1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலைய சீரமைப்புக்கு தொழில்நுட்ப அனுமதி, நிர்வாக அனுமதி கிடைக்கப் பெற்றுவிட்ட நிலையில், டெண்டர் பிறப்பிக்கப்பட்டு பணி தொடங்குவதற்கான ஆணையும் வழங்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்ற அரசு போக்குவரத்து கழக பஸ்கள், மினி பஸ்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்வது குறித்து நாகர்கோவில் நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து போலீசார், அதிகாரிகள் மற்றும் தன் னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது. இதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு விபரங்கள் கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர் ந்து இன்று மாலை 5 மணிக்கு கலெக்டர் ராஜேந் திர ரத்னூ தலைமை யில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

மாவட்ட வருவாய் அலு வலர் கலைச்செல்வன், நகராட்சி சேர்மன் அசோ கன் சாலமன், ஆணையர் ஜானகி ரவீந்திரன், போக்குவரத்து கழக பொதுமேலாளர் ரவிவர்மா மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். கூட்டத்தில் பஸ் போக்குவரத்தில் செய்யப்பட வேண் டிய மாற்றங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக நாகர்கோவில் நகராட்சி சேர்மன் அசோகன் சாலமன் கூறியதாவது: நாகர்கோவில் அண்ணா பஸ் நிலைய சீரமைப்புக்கு முன்னதாக பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதில் ஏற்கனவே நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கலெக்டருக்கு கடிதம் எழுதியிருந்தோம். அதில் அண்ணா பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்ற பஸ்களின் ஒரு பகுதியை வடசேரியில் உள்ள கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்குவது, இதர பஸ்களை இந்து கல் லூரி அருகே உள்ள பொருட்காட்சி திடல் பகுதியில் இருந்து இயக்குவது அல்லது நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் பகுதியில் வந்து திரும்பி செல்லச்செய்வது உள்ளிட்ட முடிவு கள் தெரிவிக்கப்பட்டன. கலெக்டர் தலைமையில் நடைபெறுகின்ற கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

 

சேலாஸ் பகுதியில் விரைவில் புதிய நிழற்குடை பேரூராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன்                   01.11.2010

சேலாஸ் பகுதியில் விரைவில் புதிய நிழற்குடை பேரூராட்சி தலைவர் தகவல்

குன்னூர், நவ.1: சேலாஸ் பகுதியில் ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும் என்று மன்ற கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

உலிக்கல் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ஆல்துரை, துணை தலைவர் ராதா முன்னிலையில் வகித்தனர்.ஜோசப்(திமுக): சேலாஸ் பகுதியில் நெடுஞ்சாலை துறை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றும் போத அங்கிருந்த நிழற்குடையும் இடிக்கப்பட்டது. இதனால் பயணிகள் வெயில், மழை காலத்தில் ஒதுங்க இடமின்றி அவதியுறுகின்றனர். தலைவர்: சேலாஸ் பகுதியில் முதற்கட்டமாக ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் நிழற்குடை அமைக்கப்படும். இன்னொரு நிழற்குடை அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும். தமிழ்செல்வன்(திமுக): ட்ரூக் சாலை சீரமைப்பது எப்போது? குன்னூர்&மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி சந்திப்பில் பேரூராட்சி சார்பில் நுழைவு வாயில் ஏற்படுத்தும் திட்டம் என்னவானது?தலைவர்: ட்ரூக் சாலையை சீரமைக்க அரசு அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தனியார் எஸ்டேட் பகுதியில் சாலை அமைக்க நில அளவை செய்யப்பட்டு இதற்கான அறிக்கையும் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ள து. பேரூராட்சி சார்பில் ரூ.20 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டு இருப்பதால் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. காட்டேரி பகுதியில் நுழைவு வாயில் ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றி 2 ஆண்டுக்கு மேலாகிறது. ஆனால் அதிகாரிகளின் மெத்தன போக்கால் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. மீண்டும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்படும்.

பகவதி(திமுக): பில்லூர் மட்டத்தில் இருந்து ஆணைப்பள்ளம் செல்லும் சாலையில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி ரூ.4 லட்சம் செலவில் நடந்து வருகிறது. ஆனால் தரமான பணி மேற்கொள்ளப்படாததால் தற்போது மழைக்கு முழுமையாக இடிந்து விழும் நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரருக்கு உரிய பணம் வழங்க கூடாது.

தலைவர்: கண்டிக்கப்பாக பணியில் தரத்தை ஆய்வு செய்த பின்னர் தான் பணம் வழங்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

 


Page 17 of 57