Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

எப்போது வரும் பஸ் ஸ்டாண்ட்?:பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 01.10.2010

எப்போது வரும் பஸ் ஸ்டாண்ட்?:பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தல்

பந்தலூர்:"பந்தலூர் பஜாரில், பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.நெல்லியாளம் நகராட்சியின் 15வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது பந்தலூர் பஜார். அரசு மேல்நிலை மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, தாசில்தார் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை, வட்ட வழங்கல், நகராட்சி உட்பட பல அலுவலகங்கள் உள்ளன. பந்தலூர் தனி தாலுகாவாக மாறி 12 ஆண்டுகள் கடந்தும், பஸ் ஸ்டாண்டோ, அரசுப் போக்குவரத்து கழக கிளையோ அமைக்கப்படாத நிலையில், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நீண்டகால கோரிக்கைக்கு பின், பஜாரின் கீழ் பகுதியில் நிழற்கூரை அமைக்கப்பட்டது.

ஒரு பக்கம் மட்டுமே நிழற்கூரை உள்ளதால், கூடலூர், ஊட்டி உட்பட பகுதிகளுக்கு செல்லும் மக்கள், கடைகளோரம் நிற்க வேண்டியுள்ளது. மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகரிப்பதால், பலர், கூடுதல் கட்டணம் கொடுத்து தனியார் வாகனங்களில் பயணிக்க வேண்டியுள்ளது. கூடலூர் அரசுப் போக்குவரத்து கழகக் கிளை மற்றும் ஊட்டி கிளையிலிருந்து. உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ், சிறிது நேரம் மட்டுமே, இப்பகுதியில் நிறுத்தப்படுகிறது. எனவே, பந்தலூர் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால், நகராட்சி நிர்வாகம் சார்பில், வணிக வளாகத்துடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பந்தலூர் மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இதில் ஆக்கிரமிப்பு கடைகள், தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. கட்டடங்களை அகற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததுடன், நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், திட்டம் துவக்கப்பட்டு இரு ஆண்டுகள் கடந்தும், பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்காததால், பஸ் ஸ்டாண்ட் வருமா? என்ற சந்தேகம், மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நகராட்சி மன்றத் தலைவர் காசிலிங்கத்திடம் கேட்டபோது, ""பஸ் ஸ்டாண்ட் அமைக்க, எம்.பி., எம்.எல்..,விடம் நிதி பெற்று தர, நகராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. தற்போது, நகராட்சி நிர்வாகமே 82 லட்சம் ஒதுக்கியுள்ளது. பணி துவங்குவதற்கான அனுமதி கிடைத்தவுடன், பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி துவக்கப்படும்; அதற்கான பூர்வாங்கப் பணிகள், நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.

Last Updated on Friday, 01 October 2010 11:36
 

மாநகராட்சி அலுவலகம் அருகில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல் உதவி மையம் துவக்கம்

Print PDF

தினமணி 29.09.2010

மாநகராட்சி அலுவலகம் அருகில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல் உதவி மையம் துவக்கம்

திருப்பூர், செப்.28: சாலை நெருக்கடியை சீர்செய்யவும், வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு காவல் உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது.

÷திருப்பூர் பழைய பஸ் நிலையம், காமராஜர் சாலை, மாநகராட்சி சாலை என 4 பகுதிகளில் இருந்தும் வரும் வாகனங்கள் சந்திக்கும் மாநகராட்சி பகுதியில் போ க்குவரத்து நெருக்கடி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முக்கிய நாட்களில் மேலும் நெரிசல் அதிகரித்து வாகனங்கள் தொடர்ந்து செல்வதில் சிக்கல் நிலவுகிறது.

÷தவிர, ஜவுளி மற்றும் நகைக் கடைகள் நிறைந்த அப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் வழிப்பறி, திருட்டுச் சம்பவங்கள் குறித்து பாதிக்கப்படுவோர் உடனுக்குடன் போலீஸôரிடம் தெரிவித்து உதவி பெற மாவட்ட காவல்துறை சார்பில் மாநகராட்சி முன்பு காவல் உதவி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

÷அதனடிப்படையில், அப்பகுதியில் காவல் உதவி மையம் செவ்வாய்க்கிழமை துவங்க ப்பட்டது. மாவட்ட எஸ்பி ஏ.அருண் இக்காவல் உதவி மையத்தை துவங்கி வைத்தார். மேலும், அப்பகுதிகளிலுள்ள 4 சாலைகளிலும் ஒலி பெருக்கி வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து குறித்த ஆலோசனைகளை போலீஸôர் காவல் உதவி மையத்தில் அமர் ந்தபடியே தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

÷போக்குவரத்து பிரச்னையை தீர்ப்பதோடு மட்டுமின்றி பொதுமக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தெரிவித்து போலீஸôரின் உதவியை பெறவும் இந்த காவல் உதவி மையம் வழிவகை செய்யும். இதேபோல், நகரின் பல பகுதிகளில் காவல் உதவி மையங்கள் திறக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

350 வெளியூர் துப்புரவு பணியாளர் தூய்மை பணி

Print PDF

தினகரன் 23.09.2010

350 வெளியூர் துப்புரவு பணியாளர் தூய்மை பணி

தஞ்சை, செப்.23: தஞ்சை பெரியகோயில் ஆயிரமா வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நகரை தூய் மையாக வைத்திருக்க வெளிமாவட்டம் மற்றும் குடந்தை, பட்டுக்கோட்டை நகராட்சிகளிலிருந்து 350 துப்புரவு பணியாளர்கள் நேற்று தஞ்சைக்கு வந் தனர்.

தஞ்சை பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவுவிழா நேற்று முதல் துவங்கி வரும் 26ம்தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி பெரியகோயில், ஆயுதப்படை மைதானம், திலகர் திடல், அரண்மனை வளாகம், தொல்காப்பியர் சதுக்கம், மணிமண்டபம், கரந்தை ஆகிய இடங்களில் விழா நிகழ்ச்சிகளும், சங¢கமம் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இந்த இடங்களில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடுவர். எனவே சுகாதார வசதியை பேணுவதற்காக தஞ்சை நகராட்சி விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி மொபைல் கழிவறைகளும், குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது. நகரில் குவியும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் விதமாக பிற நகராட்சிகளிலிருந்து துப்புரவு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் 300 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று வந்த துப்புரவு பணியாளர்கள் தஞ்சை கீழராஜவீதியில் துப்புரவு பண¤ செய்தனர்.

 


Page 19 of 57