Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

பயணிகள் நிழற்குடை திறப்பு

Print PDF

தினகரன் 23.09.2010

பயணிகள் நிழற்குடை திறப்பு

ஏரல், செப் 23: தூத்துக்குடி எம்பி ஜெயதுரை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பண்டாரவிளையில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ.2 லட்சம் ஒதுக்கியிருந்தார். இந்த நிதியில் பஸ் நிறுத்தம் அமைக்க பெருங்குளம் பேரூராட்சி தலைவர் சிவகுமார் தனக்கு சொந்தமான இடத்தை இலவசமாக வழங்கியிருந்தார். இந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு பேரூராட்சி தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். ஜெயதுரை எம்பி பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். ஏரல் பேரூராட்சி தலைவர் கண்ணன், கவுன்சிலர் மணிவண்ணன், பெருங்குளம் திமுக இளைஞரணியை சேர்ந்த செந்தில், பண்டாரவிளை திமுக கிளை செயலாளர் சொர்ணபாண்டிமற்றும் பலர் கலந்து கொண்டனர். பண்டாரவிளையில் புதிய பயணிகள் நிழற்குடையை ஜெயதுரை எம்பி திறந்து வைத்தார்.

 

பெஸ்ட் பஸ் கட்டண உயர்வுக்கு ஒப்புதல்

Print PDF

தினகரன் 09.09.2010

பெஸ்ட் பஸ் கட்டண உயர்வுக்கு ஒப்புதல்

மும்பை,செப்.9: மும்பையில் பெஸ்ட் பஸ் கட்டண உயர் வுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் கொடுத்துள் ளது. மும்பையில் இயக்கப்படும் பெஸ்ட் பஸ் கட்டணத்தை அதிகரிக்க சமீபத்தில் பெஸ்ட் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன் படி குறைந்த பட்ச கட்டணத்தை 3 ரூபாயில் இருந்து 4 ரூபாயாக அதிகரிக்கவும், அதன் பிறகு வரும் கட்டணங்கள் அனைத்திலும் இரண்டு ரூபாய் கட்டண உயர்வை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்தவுடன் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு ஒப்புதல் கொடுப்பதற்குக் மாநகராட்சியின் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பஸ் கட்டண உயர்வு தொடர்பான கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பஸ் கட்டணத்தை அதிகரிக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால் அவர்களின் எதிர்ப்பையும் மீறி கட்டண உயர்வுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சி கமிட்டி கூட்டம் மற்றும் மேயரும் ஒப்புதல் கொடுத்துள்ளனர். இதையடுத்து வட்டார போக்குவரத்து ஆணையம் இக்கட்டண உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியபிறகு கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்புதல் தொடர்பாக நேற்றிரவு தொடர்ந்து ஆலோசனை நடைபெற்றது. கட்டண உயர்வு 12.50 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. அதேசமயம் மாதாந்திர மற்றும் காலாண்டு பஸ் பாஸ் கட்டணம் சாதாரண மற்றும் ஏசி பஸ்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு மாநகராட்சியில் 110 உறுப்பினர்களும் சிவசேனா&பாஜக கூட்டணிக்கு 115 உறுப்பினர்களும் இருக்கின்றனர். கட்டண உயர்வு குறித்து பெஸ்ட் கமிட்டி தலைவர் சஞ்சய் அளித்தபேட்டியில்,‘ எரிபொருள் விலை அதிகரித்து விட்டதால் கட்டண உயர்வை அமல்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசிடம் மானியம் கொடுக்கும் படி கேட்டுக்கொண்டோம்.

ஆனால் மாநில அரசிட மிருந்து எந்தவித பதிலும் இல்லை. தற்போது பெஸ்ட் நிதிப்பற்றாக்குறை 351 கோடி ரூபாயாக இருக்கிறதுஎன்று தெரிவித்தார்.

Last Updated on Thursday, 09 September 2010 10:17
 

ரூ92 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சேத்துப்பட்டு பஸ் நிலையம் திறக்கப்படுமா?

Print PDF

தினமணி 04.09.2010

ரூ92 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சேத்துப்பட்டு பஸ் நிலையம் திறக்கப்படுமா?

ஆரணி, செப். 3: சேத்துப்பட்டில் ரூ92 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பஸ் நிலையம்(படம்) விரைவாகத் திறக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சேத்துப்பட்டு பேரூராட்சியில் சிமென்ட் ஷீட்டால் அமைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் இயங்கி வந்தது. இதனால் இங்கு பஸ்கள் நிற்காமல், செஞ்சி சாலையில் நின்று வந்தன.

மாவட்ட நிர்வாகம் உத்தரவிடும்போது, பஸ் நிலையத்தில் சில நாள்கள் மட்டும் இங்கு பஸ்கள் நின்று செல்லும். பின்னர் பழைய நிலையே தொடர்ந்து வந்தது.

இதையடுத்து, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என தமிழக அரசு மற்றும் உணவுத் துறை அமைச்சர் எ.. வேலுவிடம் எம்எல்ஏ கோ.எதிரொலிமணியன் வலியுறுத்தினார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு இங்கு பஸ் நிலையம் கட்ட ரூ30 லட்சத்தை தமிழக அரசு வழங்கியது. பின்னர் பேரூராட்சி நிதியிலிருந்தும் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரூ92 லட்சத்தில் பஸ் நிலையமும் கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் நிறைவு பெற்று, சில மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. இதுகுறித்து எம்எல்ஏ கோ.எதிரொலிமணியன் கேட்டபோது, பஸ் நிலையம் திறப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.

 


Page 20 of 57