Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சேலம் மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்

Print PDF

தினத்தந்தி           17.02.2014

சேலம் மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்

சேலம் மாநகராட்சி ஆணையாளர் அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நங்கவள்ளி குடிநீர் திட்டப்பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான வார்டு எண் 12, 15, 16, 20 முதல் 28 வரை, மேலும் 48, 49, 50, 51, 52, 55, 59, 60 ஆகிய வார்டுகளில் குடிநீர் வினியோகம் இருக்காது. இதனால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

ஆலந்தூர், நங்கநல்லூரில் குடிநீர் விநியோகம் ரத்து

Print PDF

தினமணி               15.02.2014

ஆலந்தூர், நங்கநல்லூரில் குடிநீர் விநியோகம் ரத்து

ஆலந்தூர், நங்கநல்லூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட உள்ளது.

இது குறித்து குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி:

மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஜி.எஸ்.டி. சாலையில் குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன.

இதற்கான பணிகள் வரும் திங்கள்கிழமை காலை 8 மணியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணிவரை நடைபெறவுள்ளன.

இதனால் ஆலந்தூர், ஆதம்பாக்கம், பாலாஜி நகர், பக்தவச்சலம் நகர், நங்கநல்லூர், கண்டோன்மென்ட் பகுதி, மீனம்பாக்கம், பம்மல், முனைவர் அவின்யூ, கண்ணபிரான் கோயில் தெரு, அனகாபுத்தூர், பொழிச்சலுர், கவுல்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினங்களில் குடிநீர் விநியோகம் தடைப்படும். லாரி குடிநீர் தேவைப்படுபவர்கள் 81449 30912, 81449 30365, 81449 30315, 044 - 28454040 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

தொட்டியம் பேரூராட்சியில் குடிநீர் ஆழ்துளை கிணறு பம்புகள் திறப்பு விழா

Print PDF

தினகரன்              13.02.2014

தொட்டியம் பேரூராட்சியில் குடிநீர் ஆழ்துளை கிணறு பம்புகள் திறப்பு விழா

தொட்டியம் : தொட்டியம் பேரூராட்சியில் பொது நிதியில் அமைக்கப்பட்டுள்ள 25எச்.பி. ஆழ்குழாய் கிணற்றையும், எடத்தெரு, அண்ணாநகர் காலனி, பஜனை மடத்தெரு உள்ளிட்ட தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மினி பவர் பம்புகளையும் முசிறி எம்எல்ஏ  என்.ஆர்.சிவபதி தலைமை வகித்து திறந்து வைத்தார்.

மாவட்ட கவுன்சிலர் ஏலுலீர்பட்டி தங்கவேல்,பேரூராட்சித் தலைவர் தமிழ்செல்வி, செயல்அலுவலர் சித்ரா, துணைத் தலைவர் ஐயப்பன் முன்னிலை வகித்தனர். விழாவில் ஒன்றிய பொருளாளர் திருஞானம், தா.பேட்டை சேர்மன் செல்வராஜ், முசிறி பேரூ. தலைவர் ராஜா, கவுன்சிலர்கள் ரமேஷ், ராஜேஸ்வரி, பொன்னுசாமி, ராஜ்மோகன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் குணா, ரத்தினம், சதாசிவம், வெள்ளுர்ராஜீ, ஊராட்சித் தலைவர் விஸ்வநாதன், கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் ராஜா, இயக்குனர் ராஜேந்திரன், அவைத் தலைவர்ராஜா, கிளை நிர்வாகிகள் திருஞானம், மலர் சுப்பிரமணி பேரூராட்சி பணியாளர்கள் சம்பத், ராஜேந்திரன், கிருஸ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 6 of 390