Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஜெயலலிதா தொடங்கி வைத்த குடிநீர் திட்டத்தின் மூலம் திருச்சி மாநகரில் மேலும் ஒரு லட்சம் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும்

Print PDF

தினத்தந்தி                13.02.2014

ஜெயலலிதா தொடங்கி வைத்த குடிநீர் திட்டத்தின் மூலம் திருச்சி மாநகரில் மேலும் ஒரு லட்சம் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும்

திருச்சி மாநகராட்சியில் ரூ.221 கோடி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை முதல் –அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மேலும் ஒரு லட்சம் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றும் தினமும் ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிநீர் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

குடிநீர் அபிவிருத்தி திட்டம்

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு திருச்சி மாநகராட்சி பகுதியில் ஜப்பான் பன்னாட்டு கழக நிதி உதவியுடன் ரூ.221 கோடியே 42 லட்சம் திட்ட மதிப்பீட்டில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் 37 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் புதிதாக கட்டப்பட்டு உள்ளன. 79 கி.மீ நீளத்திற்கு பிரதான உந்து குழாய்களும், 355 கி.மீ நீளத்திற்கு குடிநீர் பகிர்மான குழாய்களும் பதிக்கப்பட்டு உள்ளன. குடிநீர் உறிஞ்சி எடுப்பதற்காக கொள்ளிடம் ஆற்றில் 3 இடங்களில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார்

இந்த குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை முதல் –அமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதற்காக காஜாமலை காலனி அரசு ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், மேயர் ஜெயா, பரஞ்சோதி எம்.எல்.ஏ, மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, துணைமேயர் மரியம் ஆசிக், கோட்ட தலைவர்கள் சீனிவாசன், மனோகரன், கவுன்சிலர்கள் அய்யப்பன், கலைவாணன், ஏர்போர்ட் விஜி, மகாலட்சுமி மலையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதல் –அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் சார்பில் சிலர் பேசினார்கள். அங்கு அமைக்கப்பட்டிருந்த பொது குடிநீர் குழாய்களில் பெண்கள் குடங்களில் தண்ணீர் பிடித்து சென்றார்கள்.

தினமும் 135 லிட்டர் தண்ணீர்

முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததை தொடர்ந்து 37 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் நேற்று உடனடியாக தண்ணீர் ஏற்றப்பட்டது. இதன் மூலம் திருச்சி நகர மக்களுக்கு இனி தினமும் ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்றும், இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

நகரில் நாளை குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்

Print PDF

தினமணி             12.02.2014

நகரில் நாளை குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்

மதுரை மாநகராட்சி பகுதியில் 4 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பிப். 12 (புதன்கிழமை) தென்கரை பகுதியில் ரேஸ்கோர்ஸ், செல்லூர், புதூர், மருதங்குளம், ராஜாஜி பூங்கா, அண்ணாநகர், கோரிப்பாளையம், சுந்தரராஜபுரம் மேல்நிலைத்தொட்டிகள் மூலம் குடிநீர் பெறும் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வடகரை பகுதியில், கீழமாரட் 1-ஆவது பகிர்மானம், அரசரடி மேல்நிலைத்தொட்டி, பழங்காநத்தம் மேல்நிலைத்தொட்டி, ஜான்சிராணி மேல்நிலைத்தொட்டி-1, ஜோசப் பார்க் மேல்நிலைத்தொட்டி-2 விநியோக பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

பிப். 13 (வியாழக்கிழமை) தென்கரை பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்:

காலை 4 மணி முதல் 7 மணிவரை: ஆரப்பாளையம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான எல்லீஸ்நகர், எஸ்.எஸ். காலனி, மகபூப்பாளையம், அன்சாரி நகர் பகுதிகள்.

காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை: பழங்காநத்தம் மேல்நிலைத்தொட்டி 2-வது பகிர்மானப் பகுதிகளான பசும்பொன் நகர், கீழத்தெரு, மருதுபாண்டியர் தெரு, பழங்காநத்தம், நேருநகர், மாடக்குளம், விகேபி நகர், வடக்குத்தெரு.

பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை: அரசரடி கீழ்நிலைத் தொட்டியிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்.

பிற்பகல் 2.30 முதல் 6 மணி வரை: ஜான்சிராணி மேல்நிலைத்தொட்டி 2-வது பகிர்மானம் பகுதிகளான தென்னோலைக்காரத்தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்குமாரட் வீதி, தெற்குவெளி வீதி, நாடார் வித்யாசாலை, மீன்கடை, கு.கு.சாலை, மகால் மற்றும் பந்தடி தெருக்கள்.

மாலை 6 முதல் இரவு 11 மணி வரை: ஜோசப் பார்க் மேல்நிலைத்தொட்டி 1 மற்றும் சன்னியாசி ஊருணி மேல்நிலைத்தொட்டி பகுதிகளான காமராஜர்புரம் பகுதிகள், பாலரெங்காபுரம், சின்னக்கண்மாய், பங்கஜம் காலனி, தெப்பக்குளம் பகுதிகள், தமிழன் தெரு, மீனாட்சிநகர், அனுப்பானடி பகுதிகள், நரசிம்மபுரம், நவரத்தினபுரம் பகுதிகள், சீனிவாசன் பெருமாள் கோவில்தெரு, ரசாயன பட்டறை, கீழச்சந்தைப் பேட்டை.

இரவு 11 முதல் அதிகாலை 4 மணி வரை: அரசரடி கீழ்நிலைத் தொட்டியிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்.

வடகரை பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்:

காலை 3.30 முதல் 6 மணி வரை:ரேஸ்கோர்ஸ் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான வல்லபாய் சாலை, ஜவஹர்சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, காக்கைப்பாடினியார் பள்ளி, ராமமூர்த்தி சாலை, பாரதிஉலா சாலை, சிங்கராயர் காலனி, நரிமேடு மெயின் ரோடு, பிடிஆர் சாலை, பீபீகுளம், பெசன்ட் சாலை.

காலை 4 முதல் 6 மணி வரை: செல்லூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகள்.

காலை 6 முதல் மாலை 4 மணி வரை: புதூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான அழகர்நகர் 1 முதல் 7 தெருக்கள், கற்பக நகர் 4 முதல் 14 தெருக்கள், லூர்துநகர், ராமலட்சுமிநகர், காந்திபுரம், பெரியார்நகர், கன்னிமாரியம்மன் கோவில் தெரு, கற்பக விநாயக கோவில் தெரு.

காலை 6 முதல் மாலை 5 மணி வரை: ராஜாஜி பூங்கா மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான நரிமேடு, சாலை முதலியார் தெரு, தாமஸ்வீதி, சின்னசொக்கிகுளம், சரோஜினி தெரு, கமலா 1,2 தெருக்கள், கோகலே சாலை, பிடி காலனி, இந்திராநகர், கோரிப்பாளையம், சாலமுத்து தெரு, கரும்பாலை கிழக்குத்தெரு, காந்திநகர்.

காலை 6 முதல் பகல் 12 மணி வரை: கேகே நகர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான மகாத்மா காந்தி 1முதல் 8 தெருக்கள், பழைய எல்ஐஜி காலனி, புதிய எல்ஐஜி காலனி, ஏரிக்கரை சாலை, மானகிரி, டிஆர்ஓ காலனி, காமராசர் நகர்.

மாலை 5 முதல் இரவு 7 மணி வரை: கோரிப்பாளையம்-சொக்கிகுளம், அண்ணாநகர் பகுதிகள்.

இரவு 7 முதல் பகல் 12.30 மணி வரை: சுந்தரராஜபுரம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான நல்லமுத்துப்பிள்ளை, மேலத்தோப்பு, லாடபிள்ளை மற்றும் காளியம்மன் கோவில் தெரு, கிழக்குத்தெரு, மணிகண்டன் நகர், பாரதியார் தெரு, நந்தவனம், வில்லாபுரம் மெயின்ரோடு பகுதிகள்.

 

கோபியில் ரூ.1 கோடி செலவில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள்

Print PDF

தினத்தந்தி             12.02.2014

கோபியில் ரூ.1 கோடி செலவில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள்

கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன் காலனியில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் கூடிய புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்காக ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கோபி –சத்திரோட்டில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு கோபி நகராட்சி தலைவர் ரேவதிதேவி தலைமை தாங்கினார். விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் காளியப்பன், நகராட்சி பொறியாளர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 8 of 390