Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

பொள்ளாச்சி, உடுமலை சட்டமன்ற தொகுதிகளில் புதிதாக 3 குடிநீர் திட்டங்களுக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தகவல்

Print PDF

தினத்தந்தி             12.02.2014

பொள்ளாச்சி, உடுமலை சட்டமன்ற தொகுதிகளில் புதிதாக 3 குடிநீர் திட்டங்களுக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தகவல்

பொள்ளாச்சி, உடுமலை சட்டமன்ற தொகுதியில் புதிதாக 3 கூட்டுகுடிநீர் திட்டங்களுக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா ரூ.80 கோடிநிதி ஒதுக்கி உள்ளார் என்று துணை சபாநாயகர் பொள் ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

குடிநீர் பிரச்சினை

பொள்ளாச்சி அருகே குறுஞ்சேரியில் நடந்த விலை யில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழாவில் துணை சபாநாயகர் பொள் ளாச்சி ஜெயராமன் பேசும் போது கூறியதாவது:–

முதல்–அமைச்சர் ஜெயல லிதா கிராமப்புற மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க் கும் வகையில் 2005–ம் ஆண்டு ரூ.55 கோடியில் அம்பராம் பாளையம் ஆழியாற்றிலிருந்து 295 கிராமங்களுக்கானகூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல் பாட்டிற்கு கொண்டு வந்தார். இதன் மூலம் பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக் கடவு, குடிமங்கலம் ஆகிய ஒன்றிய பகுதி மக்கள் பயன் பட்டனர். இதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் காரணமாக குடிநீர் திட்டம் சரியாக பரா மரிக்கப்பட வில்லை.

26 ஊராட்சிகள்

அ.தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றவுடன் முதல்–அமைச்சர் ஜெயலலிதா குடிநீர் திட்டங் களை பராமரிக்க புதிய குடி நீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளார். ஏற்கனவே உள்ள 295 கிராமங்களின் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கடை கோடியில் உள்ள குடிமங்கலம் ஒன்றியப்பகுதி களுக்கு குடிநீர் வழங்கவும், உடுமலை ஒன்றியத்தில் குறுஞ்சேரி, சின்ன வீரம்பட்டி, பெரிய கோட்டை ஆகிய கிராமங்கள் உள்பட 26 ஊராட்சிகள் பயன்படும் வகையில் திருமூர்த்தி அணை யிலிருந்து ரூ.56.66 கோடியில் தனி குடிநீர் திட்டத்திற்கு முதல்–அமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார்.

இத்திட்டம் மூலம் தினசரி 1 கோடியே 3 லட்சத்து 500 லிட் டர் குடிநீர் கிடைக்கும். ஏற் கனவே இருந்த குடிநீர் திட் டத்தில் தினசரி 55 லட்சம்லிட் டர் தண்ணீர் தான் கிடைத்து வந்தது.

63 கிராமங்கள்

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு ரூ.7 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் தனியாக கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வரு கிறன்றன. இதன் மூலம் தினசரி 28 லட்சத்து 61 ஆயிரம் லிட் டர் தண்ணீர் கிடைக்கும். ஜமீன் ஊத்துக்குளி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.15 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக் கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் திட்டத்தில் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி, தெற்கு ஒன்றி யத்தில் மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, சின் னாம்பாளையம், சோல பாளையம், வடக்கு ஒன்றி யத்தில் ஜமீன்முத்தூர், ஆச்சி பட்டி, திப்பம்பட்டி, புளியம் பட்டி ஆகிய 8 ஊராட்சி பகுதிகளில் 63 கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கும். இதன் மூலம் 50 ஆயிரம் மக்கள்பயன் அடை வார்கள். தினசரி 29 லட் சத்து 28 ஆயிரம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப் படும்.

இந்த 3 தனி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.80 கோடி நிதியை முதல்–அமைச்சர் ஒதுக்கி உள்ளார். இந்த 3 குடிநீர் திட்டங்கள் மூலம் தின சரி 1 கோடியே 60 லட்சம் லிட் டர் குடிநீர் கிடைக்கும். குடி நீர் திட்டம் செம்மை படுத்தும் திட்டத்தில் 2013– 14–ம் ஆண்டிற்கு ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப் பீட்டில் புதிய மின் மோட்டார் கள் ஜமீன் ஊத்துக்குளி, வடுக பாளையம், குளத்தூர் ஆகிய 3 நீருந்து நிலையங்களில் பொருத் தப்படுகின்றன. இந்த திட்டங் கள் பயன்பாட்டிற்கு வரும் போது பொள்ளாச்சி, உடு மலை, கிணத்துக்கடவு, சட்ட மன்ற தொகுதிகளில் அனைத்து கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். இவ்வாறு துணை சபா நாயகர் பொள்ளாச்சி ஜெய ராமன் கூறினார்.

 

நகரில் நாளை குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்

Print PDF

தினமணி             11.02.2014

நகரில் நாளை குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்

மதுரை மாநகராட்சியிலுள்ள முந்தைய 72 வார்டு பகுதிகளில் 4 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாநகராட்சி மூலம் குழாயில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பிப். 11 செவ்வாய்க்கிழமை அருள்தாஸ்புரம் மேல்நிலைத்தொட்டி, ரிசர்வ்லைன் மேல்நிலைத்தொட்டி, பி அன்ட் டி நகர் பகுதிகள், அண்ணாநகர் மேல்நிலைத்தொட்டி, சுந்தரராஜபுரம் பகுதிகள், ரேஸ்கோர்ஸ் மேல்நிலைத்தொட்டி, செல்லூர் மேல்நிலைத்தொட்டி, புதூர் மேல்நிலைத்தொட்டி, ராஜாஜி பூங்கா மேல்நிலைத்தொட்டி, கேகே நகர் மேல்நிலைத்தொட்டி, கோரிப்பாளையம், சுந்தரராஜபுரம் மேல்நிலைத் தொட்டி விநியோக பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

பிப்ரவரி 12 புதன்கிழமை வடகரையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்:

காலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை: ரேஸ்கோர்ஸ் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான மருதுபாண்டியன் மெயின் சாலை, குறுக்கு, மேற்கு வடக்குத் தெரு, பாண்டியன் தெரு, கட்டபொம்மன் நகர், ராமமூர்த்தி தெரு.

காலை 4 மணி முதல் 6 மணி வரை: செல்லூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகள்.

காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை: புதூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான சிங்காரவேலன் தெரு, பாரதிஉலா சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, கணேசபுரம், மாதா கோவில் மெயின் ரோடு, உலகநாதன் சேர்வை தெரு, பாரதியார் மெயின் ரோடு, ஐடிஐ மெயின் ரோடு, சிட்கோ காலனி தெரு பகுதிகள்.

மாலை 3 முதல் 6 மணி வரை: மருதங்குளம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான கற்பகநகர், பாரத்நகர், கொடிக்குளம், சம்பக்குளம், சூரியாநகர், சங்கர்நகர் பகுதிகள்.

காலை 6 முதல் மாலை 5 மணி வரை: ராஜாஜி பூங்கா மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான ஷா தியேட்டர், குருவிக்காரன் சாலை, தல்லாகுளம், அழகர்கோவில் சாலை, ஆழ்வார்புரம், பனகல்சாலை, செனாய்நகர்.

காலை 6 முதல் பகல் 12 மணி வரை: அண்ணாநகர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான அண்ணாநகர் கிழக்குத்தெரு, சாத்தமங்கலம்.

மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை: கோரிப்பாளையம், சொக்கிகுளம், ராமமூர்த்தி தெரு.

இரவு 7 மணி முதல் 12.30 மணி வரை: சுந்தரராஜபுரம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான என்எஸ் கோனார் தெரு, நேதாஜி தெரு, வீரகாளியம்மன் தெரு முதல் ஜீவாநகர் 2-வது மற்றும் குறுக்குத் தெருக்கள்.

தென்கரையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்:

காலை 4 முதல் 9 மணி வரை: கீழமாரட் 1-ஆவது பகிர்மானம் தாசில்தார் பள்ளிவாசல் தெரு, ஆட்டுமந்தை பொட்டல், கீழமாரட் வீதி, கரிம்பள்ளி வாசல், சுங்கம் பள்ளிவாசல், காயிதேமில்லத் தெரு, இஸ்மாயில்புரம், அருணாசலபுரம், கீழவெளி வீதி, லட்சுமிபுரம், கான்பாளையம் மற்றும் குறுக்குத் தெருக்கள்.

காலை 9 மணி முதல் 10 மணி வரை: அரசரடி மேல்நிலைத்தொட்டி, துரைச்சாமி நகர், வேல்முருகன் நகர்.

காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை: பழங்காநத்தம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 3 தெருக்கள், குறுக்குத் தெருக்கள்.

பிற்பகல் 2 முதல் 3 மணி வரை: அரசரடி கீழ்மட்டத்தொட்டியிலிருந்து லாரிகள் மூலம் விநியோகம் செய்யும் பகுதிகள்:

மாலை 3 முதல் 6 மணி வரை: ஜான்சிராணி மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான தெற்குமாசி வீதி, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, காமாட்சியம்மன் கோவில் தெரு, முத்தையாபிள்ளை தெரு, ஜடாமுனிகோவில் தெரு, மகால், சின்னக்கடைத்தெரு, பந்தடி, கான்சாமேட்டுத்தெரு, தெற்காவணி மூலவீதி, ஓதுவார் தெரு, வெங்கலக்கடைத்தெரு, சப்பாணி கோவில் தெரு, காஜா தெரு பகுதிகள்.

மாலை 6 முதல் இரவு 11 மணி வரை: ஜோசப் பார்க் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான சிந்தாமணி சாலை, நாகுப்பிள்ளை தோப்பு பகுதிகள், வாழைத்தோப்பு பகுதிகள், கிருஷ்ணாபுரம் 1,2 தெருக்கள், பச்சரிசிக்காரத் தெரு, பாலுச்சாமி ஐயர் தெரு, புதிய மாகாளிப்பட்டி சாலை, குறுக்குத் தெருக்கள், ராமசத்திரம் குறுக்குத் தெருக்கள்.

இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை: அரசரடி கீழ்மட்டத் தொட்டியிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்.

 

காங்கயம், வெள்ளக்கோவிலுக்கு ரூ.91 கோடியில் குடிநீர் திட்டம்

Print PDF

தினமலர்              11.02.2014

காங்கயம், வெள்ளக்கோவிலுக்கு ரூ.91 கோடியில் குடிநீர் திட்டம்

காங்கயம் : காங்கயம், வெள்ளக்கோவில் நகராட்சிகள் மற்றும் 528 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், 91.4 கோடி ரூபாய் செலவில், புதிய கூட்டு குடிநீர் திட்டத்துக்கான பணிகள் துவங்கியுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம், வெள்ளக்கோவில் ஏரியா கடும் வறட்சி பகுதிகளான உள்ளன. நிரந்தர நீராதாரம் இல்லாமல், நிலத்தடி நீர் மற்றும் சிறிய குடிநீர் திட்டங்கள் மட்டுமே உள்ளன.

இதனால், இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது; கோடை காலத்தில் மிக பெரிய பிரச்னையாக மாறி வருகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில், காங்கயம், வெள்ளக்கோவில் நகராட்சிகள், ஒன்றியங்கள் மற்றும் மூலனூர் ஒன்றிய கிராமங்கள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள 528 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த, தமிழக அரசு 91.4 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தினமும் 25 எம்.எல்.டி., தண்ணீர் எடுக்கும் வகையில், நீர் உறிஞ்சு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

16 கி.மீ., தூரம் தண்ணீர் கொண்டு வந்து, இச்சிபாளையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படும். மேட்டுக்கடை, வாலிகாடு பகுதியில் நீருந்து நிலையமும், 54 கி.மீ., தூரம், பெரிய அளவிலான பிரதான குழாய்கள், 500 கி.மீ., தூரம் பகிர்மான குழாய் அமைக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இப்பகுதிகளில் உள்ள மூன்று லட்சம் மக்களுக்கு, தினமும் 135 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில், புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்ட பணிகளை 14 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், காங்கயம், குண்டடம், தாராபுரம் ஒன்றிய கிராமங்கள், நகராட்சிகள், சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள 1,262 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், மேலும் 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்ட வடிவமைப்பு, டெண்டர் பணி முடிந்து, இன்னும் சில மாதங்களில் இப்பணியும் துவங்கும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 9 of 390