Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

நாளை குடிநீர் சப்ளையாகும் பகுதிகள்

Print PDF

தினமணி             07.02.2014

நாளை குடிநீர் சப்ளையாகும் பகுதிகள்

மதுரையில் சனிக்கிழமை (பிப்.8) குடிநீர் விநியோகமாகும் பகுதிகள் விவரம்:

அதிகாலை 3.30 முதல் 6.30 மணி வரை: ரேஸ்கோர்ஸ் மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகளான மருதுபாண்டியன் மெயின் ரோடு, மருதுபாண்டியன் குறுக்கு, மேற்கு, வடக்குத்தெரு, பாண்டியன் தெரு, கட்டபொம்மன் நகர், ராமமூர்த்தி தெரு.

அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை: செல்லூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகள்.

காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை: புதூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான, சிங்கார வேலன் தெரு, பாரதி உலா சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, கணேசபுரம், மாதாகோவில் மெயின் ரோடு, உலகநாதன் சேவை தெரு, பாரதியார் மெயின் ரோடு, ஐடிஐ மெயின் ரோடு, சிட்கோ காலனி தெரு.

மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை: மருதங்குளம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான, கற்பக நகர், பாரத் நகர், கொடிக்குளம், சம்பக்குளம், சூரியாநகர், சங்கர் நகர் பகுதிகள்.

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை: அண்ணாநகர் மேல்நிலைத்தொட்டி விநியோக பகுதிகளான அண்ணாநகர் கிழக்குத்தெரு, சாத்தமங்கலம் பகுதிகள்.

காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை: ராஜாஜி பூங்கா மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகளான, ஷா தியேட்டர், குருவிக்காரன் சாலை, தல்லாகுளம், அழகர்கோவில் சாலை, ஆழ்வார்புரம், பனகல்சாலை, ஷெனாய்நகர் பகுதிகள்.

மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை: கோரிப்பாளையம், சொக்கிகுளம், ராமமூர்த்தி தெரு பகுதிகள்.

இரவு 7 முதல் 12.30 வரை: சுந்தரராஜபுரம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான, என்எஸ் கோனார் தெரு, நேதாஜி தெரு, வீரகாளியம்மன் தெரு முதல் ஜீவாநகர் 2-வது மற்றும் குறுக்குத் தெருக்கள் பகுதிகள்.

வெள்ளிக்கிழமை (பிப்.7) அருள்தாஸ்புரம் மேல்நிலைத் தொட்டி, ரிசர்வ்லைன் மேல்நிலைத்தொட்டி, பி அன்ட் டி நகர் பகுதிகள், அண்ணாநகர் மேல்நிலைத் தொட்டி சுந்தரராஜபுரம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Print PDF

தினமணி             07.02.2014

குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கோடை கால குடிநீர் தேவையைச் சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை பொய்த்துப் போனதன் விளைவாக சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் போதிய நீர் இருப்பு இல்லை. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 3,142 மில்லியன் கன அடி மட்டுமே உள்ளது.

மேலும் நகரில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே வரும் கோடை காலத்தில் நகரில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படலாம் எனத் தெரிகிறது. இதைத் தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது: நெய்வேலி, தாமரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் மறுசீரமைக்கப்பட்டு கூடுதலாக 11 மில்லியன் லிட்டர் நீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பூண்டி, தாமரைப்பாக்கம், மீஞ்சூர் பகுதியில் ரூ.14 கோடியில் 250 விவசாய ஆழ்துளைக் கிணறுகளில் தினமும் 40 மில்லியன் லிட்டர் நீர் எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சோழவரம், புழல் ஏரிகளின் அடிமட்ட நீர் இருப்பையும் வீணாக்காமல் பம்புசெட் மூலம் உறிஞ்சி உபயோகப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர் தேவை அதிகம் உள்ள 10,245 இடங்களில் 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் சேதமடைந்த 500 தொட்டிகளுக்கு பதிலாக புதிய தொட்டிகளை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு குடிநீர் வாரியம் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

நாளை குடிநீர் வாரிய குறைதீர்வுக் கூட்டம்

Print PDF
தினமலர்              07.02.2014
 
நாளை குடிநீர் வாரிய குறைதீர்வுக் கூட்டம்

குடிநீர் மற்றும் கழிவு நீர் குறித்த பிரச்னைகளுக்கான குறைதீர்ப்புக் கூட்டம் சனிக்கிழமை (பிப்.8) நடைபெற உள்ளது.

இது குறித்து குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி:

குடிநீர் வாரியம் சார்பில் மாதத்தின் 2-ஆவது சனிக்கிழமைகளில் குறைதீர்க் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான குறைதீர்க் கூட்டம் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர் மற்றும் கழிவுநீர் குறித்த பிரச்னைகளை மனுக்கள் வாயிலாக தெரிவிக்கலாம்.

திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, மாதவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடிநீர் வாரிய பகுதி அலுவலங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குறைதீர்க் கூட்டம் நடைபெறும்.

ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் குடிநீர் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் குறைதீர்க் கூட்டம் நடைபெற உள்ளது.

கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் 18 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 17 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 11 of 390