Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

குடிநீரைச் சுத்திகரித்து வழங்க ஆட்சியர் அறிவுரை

Print PDF

தினமணி         24.11.2010

குடிநீரைச் சுத்திகரித்து வழங்க ஆட்சியர் அறிவுரை

தேனி, நவ. 23:தேனி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் குடிநீரைச் சுத்திகரித்து விநியோகம் செய்ய வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமலும், தொற்று நோய் பரவாமலும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுச் சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், குடிநீரை முறையாக குளோரினேசன் செய்து, தர பரிசோதனைக்குப் பின்பு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சி ஆற வைத்து பயன்படுத்த வேண்டும் என்றார்.

Last Updated on Wednesday, 24 November 2010 11:32
 

"கன்னியாகுமரி தொகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ. 79 கோடி ஒதுக்கீடு'

Print PDF

தினமணி                   28.10.2010

"கன்னியாகுமரி தொகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ. 79 கோடி ஒதுக்கீடு'

நாகர்கோவில், அக்.27: கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த ரூ. 79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது என்று அமைச்சர் என். சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.

ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் தாணுமாலயம்புதூரில் ரூ. 13 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்து அவர் மேலும் பேசியதாவது:

ஆரல்வாய்மொழி பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக பெருமாள்புரம், தேவசகாயம் மவுண்ட் ஆகிய பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

அடுத்த கட்டமாக ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதர பகுதிகளுக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து மக்களுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் குடிநீர்த் திட்டப் பணிகளை துணை முதல்வர் மு.. ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார் என்றார் அமைச்சர்.

பேரூராட்சித் தலைவர் பியூலா பாக்கியஜெயந்தி, ஹெலன்டேவிட்சன் எம்.பி.,

பேரூராட்சி துணைத் தலைவர் நாகராஜன், செயல்அலுவலர் அம்புரோஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

ரூ3 கோடியில் மறைமலை நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

Print PDF

தினகரன்                26.10.2010

ரூ3 கோடியில் மறைமலை நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

செங்கல்பட்டு, அக்.26: மறைமலைநகரில் ரூ3 கோடியே 75 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

மறைமலைநகர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் 6 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் அமலில் உள்ளது. கீழக்கரணை, கூடலூர், ரயில் நகர் ஆகிய பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்தப் பகுதிகளில் வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிக்க ரூ3 கோடியே 75 லட்சம் செலவில் மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் எதிரே நவீன சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை, நகராட்சி நிர்வாக ஆணையர் செந்தில்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆணையர் மக்வானா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். நகராட்சி தலைவர் சசிகலா, துணைத்தலைவர் சண்முகம், நகராட்சி பொறியாளர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து, நகராட்சி தலைவர் சசிகலா கூறுகையில், ‘மறைமலைநகர் தொழிற்பேட்டையில் 250 தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தனித்தனியாக சுத்திகரிக்க சுத்திரிகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது 6 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. 21 வார்டுகளிலும் பாதாள சாக்கடை அமைக்கப்படும். இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுஎன்றார். மறைமலைநகரில் நவீன சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சி நிர்வாக ஆணையர் செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார்.

 


Page 7 of 28