Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

2 இடங்களில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு

Print PDF

தினகரன் 08.09.2010

2 இடங்களில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு

மும்பை,செப்.8: மும்பையில் இரண்டு இடங்களில் கடல் நீரை நன்னீராக்கும் திட் டத்தை செயல்படுத்த எம்.எம்.ஆர்.டி.. திட்டமிட்டுள் ளது.

மும்பையில் கடந்த ஆண்டு சரியாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஆண்டு குடிநீர் தட் டுப்பாடு ஏற்பட் டது. இது போன்ற பிரச்னை எதிர் காலத்தில் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு மும் பையில் கடல் நீரை நன்னீ ராக்கும் திட்டத்தை அமல் படுத்த எம்.எம்.ஆர்.டி.. திட்டமிட்டுள்ளது.

இது போன்ற தொழிற் சாலைகள் இரண்டு இடத் தில் அமைக்கப்பட இருக் கிறது. ஒன்று தென் மும் பையிலும் மற்றொன்று மிராபயந்தரிலும் அமைக்கப் பட இருக்கிறது.

மும்பையில் அமைக்கப் படும் கடல் நீரை நன்னீ ராக்கும் தொழிற்சாலையை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கும். மீராபயந்தரில் அமைக்கப்படுவதை மும்பை பெருநகர வளர்ச்சி ஆணை யம் பராமரிக்கும். இரண் டையும் தனியார் உதவியு டன் செயல்படுத்து வது என்று எம்.எம்.ஆர்.டி.ஏ மற்றும் மாநக ராட்சி அதி காரிகள் கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றிலும் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் நன்னீராக்கப்படும் வகை யில் அமைக்கப்பட இருக் கிறது. இதில் கிடைக்கும் தண்ணீர் விலை அதிகமாக இருக்கும்.

எனவே இதில் கிடைக் கும் தண்ணீரை வர்த்தக தேவைக்கு விற்பனை செய் யப்படும். இத் திட்டத்தை 2013ம் ஆண்டுக் குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. தென் மும்பை மற்றும் புறநகர் பகுதியில் எந்த இடம் என் பது இன்னும் உறுதி செய் யப்படவில்லை. ஆனால் கடல்பகுதியில் இருந்து 100 மீட்டருக்குள் இத்தொழிற் சாலை அமைக் கப்படும். இத்திட் டத்திற்கு 600 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்று கருதப் படுகிறது. சென்னையில் அமைக்கப்படு வது போன்ற திட்டத்தில் இதனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

6 மாதத்தில் அமைக்க திட்டம் ஏழுகிணறு பகுதியில் கழிவுநீரகற்று நிலையம்

Print PDF

தினகரன் 04.09.2010

6 மாதத்தில் அமைக்க திட்டம் ஏழுகிணறு பகுதியில் கழிவுநீரகற்று நிலையம்

சென்னை, செப்.4: "ஏழுகிணறு பகுதியில் கழிவுநீர் அகற்றுவதற்காக ரூ1.46 கோடி செலவில் புதிய கழிவுநீரகற்று நிலையம் அமைக்கப்பட உள்ளது" என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்தார்.

துறைமுகம் தொகுதி, 29வது வார்டிலுள்ள ஏழுகிணறு காவல் நிலையம் அருகில் கழிவுநீர் அகற்றுவதற்காக புதிய பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட உள்ளது. இந்த இடத்தை மத்திய சென்னை எம்.பியும் மத்திய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறன் நேற்று பார்வையிட்டார். திட்ட பணிகள் குறித்து மேயர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் விளக்கினர்.

பின்னர் தயாநிதி மாறன் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த பகுதியில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண புதிய பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட உள்ளது. இதற்காக துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நிதி அமைச்சருமான அன்பழகன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ1.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பம்பிங் ஸ்டேஷன் அமைக்க ரூ26 லட்சம் மதிப்புள்ள 1,600 சதுர அடி நிலத்தை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. பம்பிங் ஸ்டேஷன் 6 அல்லது 7 மாதத்தில் கட்டி முடிக்கப்படும்.

இங்குள்ள 24, 29 மற்றும் 30 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த 38 தெருக்களுக்கு கழிவுநீர் பிரச்னைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும். இதன் மூலம் இப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.

இதையடுத்து அதே பகுதியில் செயின்ட் சேவியர் சாலையில் உள்ள மாநகராட்சி சமுதாய கூடத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அப்பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

ரூ1.46 கோடி செலவில் புதிய பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்படவுள்ள இடத்தை இன்று பார்வையிட்டேன். இந்த பம்பிங் ஸ்டேஷன் மூலம் கழிவுநீர் பிரச்னைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும். குடும்ப அட்டை கோரி சிலர் மனுக்கள் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மேயர் மா.சுப்பிரமணியன் அழைத்து அந்த மனுக்களை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

குடிசை வீடுகளை அகற்றுவதால் தங்களுக்கு வீடுகள் கொடுக்க வேண்டும் என்றும் மனுக்கள் கொடுத்துள்ளனர். சாலையோரத்தில் உள்ள வீடுகளை அகற்றுகிறார்கள் என்று நீங்கள் அச்சம் அடைய தேவையில்லை. குடிசைகளே இல்லாத சென்னையை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு..ஸ்டாலின் ஆகியோரின் கனவாகும். அதற்காகவே முதல்வர் 25 ஆயிரம் கான்கிரீட் வீடுகளை கட்டி வருகிறார். அந்த வீடுகளில் உங்களை குடியமர்த்துவதுதான் முதல்வரின் திட்டமாகும். எனவே அந்த வீடுகளை நாங்களே திறந்து வைத்து உங்களை எல்லாம் குடியமர்த்துவோம். தன்னை நம்பியவர்களை முதல்வர் கைவிடமாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மேயர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "இந்த பகுதியில் கழிவுநீர் பிரச்னையை தீர்க்க மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் முயற்சியால் மினி பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்" என்றார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஆர்.சத்தியபாமா, இணை ஆணையர் ஆசிஷ் சாட்டர்ஜி வடசென்னை திமுக மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு எம்.எல்.., மண்டலக்குழு தலைவர் சண்முகசுந்தரம், நிலைக்குழு தலைவர் (சுகாதாரம்) மணிவேலன், கவுன்சிலர் எஸ்.புகழேந்தி, மாநகராட்சி, சென்னை குடிநீர்மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு மேளவாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: மத்திய அரசு நிதியுதவி

Print PDF

தினமணி 27.08.2010

சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: மத்திய அரசு நிதியுதவி

புது தில்லி, ஆக.26: சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு 871.24 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

இதுதொடர்பாக வியாழன்று மாநிலங்களவையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் செüகதா ராய் பேசியதாவது:

நகர்ப்புற குடிநீர் விநியோகம் மாநில அரசுகளை சார்ந்தது. நகர்ப்புற நிர்வாக அமைப்புகள் இதுகுறித்து திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்த வேண்டும். மாநில அரசு ஒதுக்கிய திட்ட நிதிக்குள் குடிநீர் விநியோக பணியை வழங்க முயற்சிக்க வேண்டும்.

அத்துடன் ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 151 குடிநீர் திட்டங்களை 9,570.04 கோடி செலவிலும், 418 திட்டங்களை 7,867.21 கோடி செலவிலும் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் நிர்வாக திட்டத்தின் கீழ் சிறு மற்றும் நடுத்தர நகரங்களுக்கு தேவையான கருவிகள் வழங்கப்படும்.

அதிவேக குடிநீர் விநியோகத் திட்டத்தின் கீழ் கடந்த 1991 முதல் 2001 வரையிலான மக்கள் தொகை கணக்கின்படி 20 ஆயிரத்துக்கு குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இத்திட்டம் 1994 முதல் 2005-ம் ஆண்டு வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1,244 புதிய குடிநீர் திட்டங்களுக்கு 1,822.38 கோடி மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 1,012 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. மற்ற 227 திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மதிப்பீடு 908.28 கோடி. அதில் 871.24 கோடியை மத்திய அரசு அளித்துள்ளது. குடிநீர் வழங்கும் துறையில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய உதவிகளை அளிக்க அமைச்சகம் தயாராகவுள்ளது. குறிப்பாக புதுநீர் நிலைகளை உருவாக்குதல், நீர் மறுசுழற்சி மற்றும் வீணாகும் நீரை தடுப்பது, நீர் மேலாண்மை மற்றும் சேவை அளவுகளை கண்காணித்தல் ஆகியவற்றில் அமைச்சகம் அதிக கவனம் செலுத்திவருகிறது என்றார் அவர்.

 


Page 11 of 28