Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் இயக்கம்

Print PDF

தினமலர் 28.07.2010

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் இயக்கம்

ஓசூர்: ஓசூர் புதுபஸ்ஸ்டாண்ட்டில் 10 லட்சம் ரூபாயில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நகராட்சி தலைவர் சத்யா துவக்கி வைத்தார்.

ஓசூர் நகராட்சி அலுவலகம் அருகே பெங்களூரு சாலையில் 11 கோடி ரூபாயில் புதுபஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இங்கு மூன்று சுரங்க பாதைகள், செயற்கை நீரூற்றுகளுடன் ஒரே நேரத்தில் 50 பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் உள்ளே வந்து செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் சுகாதாரமான குடிநீர் குடிக்கும் வகையில் "டிரேடர்ஸ் அசோஷியேசன்' சார்பில் 10 லட்சம் ரூபாயில் இரு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றின் பத்து ஆண்டு பராமரிப்புக்கு "டிரேடர்ஸ் அசோசியேஷன்' மூலம் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு 500 லிட்டர் தண்ணீர் வீதம் இரு குடிநீர் சுத்திகரிப்பு இயங்கங்களிலும் பயணிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறப்பு விழா பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்தது. தமிழக வணிக பேரவை துணை தலைவர் அந்தோணி சாமி தலைமை வகித்தார். செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ஹேம்ராஜ், சிப்காட் லயன்ஸ் சங்க தலைவர் ஸ்ரீதர் ராம் மோரே ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் சத்யா குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார். நகராட்சி துணை தலைவர் மாதேஸ்வரன், தி.மு.., நகர செயலாளர் விஜயகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், கவுன்சிலர்கள் ரமேஷ், சீனிவாசன், ஜெய் ஆனந்த், எல்லோராமணி, இக்ரம்அகமது, பிரகாஷ், இந்திராணி, பிரேமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ஓசூர் புதிய பேருந்து நிலையத்தில் ரூ 10 லட்சத்தில் குடிநீர் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறப்பு

Print PDF

தினகரன் 26.07.2010

ஓசூர் புதிய பேருந்து நிலையத்தில் ரூ 10 லட்சத்தில் குடிநீர் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறப்பு

ஓசூர், ஜூலை 26: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், புதிய பேருந்து நிலையம் சுமார் ரூ11 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 18ம் தேதி தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நான்கு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம், இதற்கு முன் ஒரு பேரூர் பேருந்து நிலையமாக இருந்தது. இதை மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படும் வகையிலும், நவீன பேருந்து நிலையமாக 3 சுரங்க பாதை கொண்டதாகவும், செயற்கை நீருற்று கொண்ட பேருந்து நிலையமாகவும், 53 பேருந்துகள் நிற்கும் வகையில் இன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் இன்று நகரத்திற்கு மட்டுமின்றி தாலுகா மக்களுக்கு பயன்படும் வகையில் நவீனமாக கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்த நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க மிக வேகமாக பேருந்து நிலையத்தை நகராட்சி சார்பில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

வரும் ஆகஸ்ட் 1 முதல் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அளிக்க டிரேடர்ஸ் அசோசியேசன் சார்பில் சுத்திகரிக்கும் இரண்டு இயந்திரங்களை ரூ5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் 10 வருட பராமரிப்பு பணிக்கு

ரூ5 லட்சம் அளிக்கப்பட்டது. 1 மணி நேரத்திற்கு 500 லிட்டர் வீதம் இரண்டிலும் 1 மணி நேரத்திற்கு ஆயிரம் லிட்டர் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது.

இந்த சுத்தகரிப்பு இயந்திரங்களை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக வணிக பேரவை துணை தலைவர் அந்தோணிசாமி தலைமை வகித்தார். செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ஹேம்ராஜ், சிப்காட் அரிமா சங்க தலைவர் ஸ்ரீதர்ராம்மோரே ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் சத்யா, துணைத்தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சுத்திகரிப்பு இயந்திரங்களை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் விஜய்குமார், அக்ரோநாகராஜ், யுவராஜ், இக்ரம்அகமத், கேஜி பிரகாஷ் உட்பட 15க்கும் மேற்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

ஒசூர் புதிய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்கள் திறப்பு

Print PDF

தினமணி 26.07.2010

ஒசூர் புதிய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்கள் திறப்பு

ஒசூர்,​​ ஜூலை 25:​ ஒசூர் புதிய பஸ் நிலையத்தில்,​​ இரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ​ இயந்திரங்களை நகர்மன்றத் தலைவர் எஸ்..சத்யா திறந்துவைத்தார்.

​ பயணிகளின் குடிநீர் தேவைக்காக ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட இவ்விரு இயந்திரங்களையும் வணிகர் சங்கம் அமைத்துள்ளது.​ பஸ் நிலையம் நுழையும் இடத்தில் ஒரு இயந்திரமும்,​​ பஸ்கள் வெளியில் செல்லும் இடத்தில் மற்றொரு இயந்திரமும் உள்ளன.​ இவற்றின் பராமரிப்பை ஒசூர் வணிகர் சங்கமே மேற்கொள்கிறது.

​ பஸ் நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவுக்கு,​​ கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் அந்தோனிசாமி தலைமை வகித்தார்.

​ ஒசூர் வணிகர் சங்கத் தலைவர் தாமஸ்ஜான்,​​ செயலர் பாஸ்கர்,​​ நகர்மன்றத் துணைத் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன்,​​ நகர்மன்ற உறுப்பினர்கள் வீ.விஜயகுமார்,​​ அ.யுவராஜ்,​​ ரமேஷ்பாபுஎல்லோரா மணி,​​ இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 15 of 28