Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

50,000 பேர் தண்ணீர் குடிக்க வசதியாக கடற்கரையில் குடிநீர் தொட்டி திறப்பு

Print PDF

தினகரன் 16.06.2010

50,000 பேர் தண்ணீர் குடிக்க வசதியாக கடற்கரையில் குடிநீர் தொட்டி திறப்பு

அரிமா சங்கம் சார்பில் மெரினா கடற்கரையில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்து சுத்திகரிக்கப்பட்ட நீரை அருந்துகிறார் மேயர் மா.சுப்பிரமணியன்.

அரிமா சங்கம் சார்பில் மெரினா கடற்கரையில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்து சுத்திகரிக்கப்பட்ட நீரை அருந்துகிறார் மேயர் மா.சுப்பிரமணியன்

 

சென்னை, ஜூன் 16: மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பின்புறம் அரிமா சங்கம் சார்பில், ரூ.9 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்து பேசியதாவது:

மெரினா கடற்கரை உலகிலேயே 2வது நீளமான கடற்கரையாக உள்ளது. இதுமட்டும் போதாது, ‘உலகிலேயே அழகான கடற்கரையாக மெரினாவை மாற்ற வேண்டும் என்று விரும்பிய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு..ஸ்டாலின் முயற்சியில் ரூ.21 கோடியில் மெரினா கடற்கரை அழகுபடுத்தப்பட்டுள்ளது. இதன்பிறகு மெரினா கடற்கரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடற்கரைக்கு வருபவர்கள் பாக்கெட் குடிநீரை குடித்து வந்தனர். அதனால், மெரினாவில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க அரிமா சங்கம் மூலம் 2 இடங்களில் குடிநீர் தொட்டி திறக்கப்பட்டுள்ளது. புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் 9,000 லிட்டர் தண்ணீர் நிரப்பி, நவீன இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் தினசரி 50 ஆயிரம் பேர் தண்ணீர் குடிக்க முடியும்.

எவ்வளவுதான் கடற்கரையை அழகுபடுத்தினாலும் சிறுகடைகளின் ஆக்கிரமிப்பால் கடற்கரை மணல்பரப்பு கூட தெரியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை முதல்வரும் விரும்பவில்லை. உலகின் அழகான கடற்கரையாக மெரினா கடற்கரையை மாற்ற அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும். நேப்பியர் பாலத்தில் ரூ.1 கோடியே 60 லட்சத்தில் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஒரு மாதத்தில் இந்த பணி முடியும். அதன்பிறகு பாலத்தின் மின் அலங்காரத்தை பார்ப்பதற்காகவே மக்கள் வருவார்கள்.

எவ்வளவுதான் கடற்கரையை அழகுபடுத்தினாலும் சிறுகடைகளின் ஆக்கிரமிப்பால் கடற்கரை மணல்பரப்பு கூட தெரியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை முதல்வரும் விரும்பவில்லை. உலகின் அழகான கடற்கரையாக மெரினா கடற்கரையை மாற்ற அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும். நேப்பியர் பாலத்தில் ரூ.1 கோடியே 60 லட்சத்தில் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஒரு மாதத்தில் இந்த பணி முடியும். அதன்பிறகு பாலத்தின் மின் அலங்காரத்தை பார்ப்பதற்காகவே மக்கள் வருவார்கள்.

 

கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அடுத்த மாதம் திறப்பு

Print PDF

தினகரன் 03.06.2010

கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அடுத்த மாதம் திறப்பு

பொன்னேரி, ஜூன் 3: ‘காட்டுப்பள்ளியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

மீஞ்சூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க, 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.87.80 கோடி மதிப்பிலான இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன.

இந்த நிலையம், நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்டது. காட்டுப்பள்ளியில் இருந்து சென்னைக்கு சுமார் 38 கி.மீ. தூரத்துக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையத்தை, துணை முதல்வர் மு..ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். பின்னர், கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து குடிநீரை சென்னை நகருக்கு கொண்டு செல்லும் கட்டமைப்புகளின் சோதனை இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் கூறுகையில், ‘‘கடல் நீரை குடிநீராக்கும் நிலைய பணிகள் முடிந்துள்ளன. இதை அடுத்த மாதம் முதல் வாரத்தில், முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்’’ என்றார்.

குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சிவ்தாஸ் மீனா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

ஜூலை முதல் சென்னைக்கு கடல் குடிநீர் விநியோகம்: சோதனை இயக்கத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

Print PDF

தினமணி 03.06.2010

ஜூலை முதல் சென்னைக்கு கடல் குடிநீர் விநியோகம்: சோதனை இயக்கத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

 

மீஞ்சூர்-காட்டுப்பள்ளியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து குடிநீரை சென்னைக்கு கொண்டு செல்லும் கட்டமைப்பின் சோதனை ஓட்டத்தை புதன்கிழமை தொடங்கியது 

பொன்னேரி, ஜூன் 2: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் நடைபெற்று வரும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து

ஜூலை முதல் சென்னைக்கு கடல் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக துணை முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

பொன்னேரி தாலுகாவில் மீஞ்சூர் அருகே கடலோரம் அமைந்துள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் ரூ.2,300 கோடி செலவில் நடைபெற்று வரும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து குடிநீரை சென்னை நகருக்கு கொண்டு செல்லும் கட்டமைப்பின் சோதனை இயக்கத்தை புதன்கிழமை துணை முதல்வர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை 25.01.07-ன் போது அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு..ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 23.9.08-ல் இங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்ட அவர் இத்திட்டப் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டது என்றும், வரும் 2009-ம் ஆண்டு பொங்கல் முதல் கடல் நீர் குடிநீராக மாற்றப்பட்டு சென்னைக்கு விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தார். அதன் பிறகும் இப்பணிகள் முழமையாக முடிவடையாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையின் பணிகளும் முழுவதுமாக முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. இதையடுத்து காட்டுப்பள்ளி கிராமத்தில் இருந்து கடல் நீரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குழாய்கள் மூலம் மணலி, மாதவரம், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள கீழ் நிலைத் தொட்டிகளுக்கு கொண்டு செல்லும் கட்டமைப்பின் சோதனை இயக்கத்தை துணை முதல்வர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், "இந்த ஆலையில் இருந்து பெறப்படும் குடிநீர் சென்னைக்கு கொண்டு செல்வதற்கான சோதனை இயக்கத்தை புதன்கிழமை தொடங்கி வைத்துள்ளேன். 15 அல்லது 20 நாள்கள் சோதனைக்கு பிறகு சென்னைக்கு குடிநீர் விநியோகத்தை முதல்வர் கருணாநிதி ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வைக்க உள்ளார்' என்றார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலர் டாக்டர் நிரஞ்சன்மார்டி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் சிவ்தாஸ் மீனா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ், பொன்னேரி கோட்டாட்சியர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 


Page 18 of 28